ஸ்டாப் செலக்ஷன் கமிஷன் ல் 7500 பணியிடங்கள் - துளிர்கல்வி

Latest

Saturday, April 8, 2023

ஸ்டாப் செலக்ஷன் கமிஷன் ல் 7500 பணியிடங்கள்

ஸ்டாப் செலக்ஷன் கமிஷன் ல் 7500 பணியிடங்கள் 

ஸ்டாப் செலக்‌ஷன் கமிஷன் மூலம் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இயங்கும் அரசு துறைகள், நிறுவனங்கள், அமைச்சகங்கள் உள்பட பல்வேறு அரசு அலுவலகங்களில் குரூப் பி மற்றும் குரூப் சி பதவிகளில் 7,500 காலி பணி இடங்கள் நிரப்பப்பட உள்ளன. ஒருசில பதவிகளுக்கு 27 வயதும், சில பதவிகளுக்கு முறையே 30, 32 வயதும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 

அரசு விதிமுறைகளின்படி வயது தளர்வும் உண்டு. பட்டப்படிப்பு படித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள். எழுத்து தேர்வுகள், ஆவண சரிபார்ப்பு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். தமிழகத்தில் சென்னை, கோவை, மதுரை, சேலம், திருச்சிராப்பள்ளி, திருநெல்வேலி, வேலூர் ஆகிய இடங்களில் தேர்வு மையங்கள் அமைக்கப்படுகின்றன. விண்ணப்பிக்க கடைசி தேதி: 3-5-2023. மேலும் விரிவான விவரங்களை https://ssc.nic.in என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.

No comments:

Post a Comment