பகுதிநேர பிஇ, (B.E., B.Tech.,) பிடெக் படிப்பில் சேர விண்ணப்பங்கள் வரவேற்பு - அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு - துளிர்கல்வி

Latest

Thursday, April 27, 2023

பகுதிநேர பிஇ, (B.E., B.Tech.,) பிடெக் படிப்பில் சேர விண்ணப்பங்கள் வரவேற்பு - அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு

பகுதிநேர பிஇ, (B.E., B.Tech.,) பிடெக் படிப்பில் சேர விண்ணப்பங்கள் வரவேற்பு - 

அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு அண்ணா பல்கலைக்கழக பதிவாளர் நேற்று வெளியிட்ட அறிவிப்பில் கூறியிருப்பதாவது: அண்ணா பல்கலைக்கழக கல்லூரிகளான கிண்டி பொறியியல் கல்லூரி, அழகப்பா தொழில்நுட்பக் கல்லூரி, குரோம்பேட்டை எம்ஐடி மற்றும் பண்ருட்டியில் உள்ள பல்கலைக்கழக பொறியியல் கல்லூரி ஆகியவற்றில் வழங்கப்படும் பகுதி நேர பிஇ, பிடெக் படிப்புகளில் (4 ஆண்டுகள்) சேருவதற்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு புதன்கிழமை (நேற்று) தொடங்கியுள்ளது. 
 இதற்கு மே மாதம் 26-ம் தேதிவரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். கூடுதல் விவரங்களை cfa.annauniv.edu/cfa என்றஇணையதளத்தில் அறிந்துகொள்ளலாம். மேலும் அண்ணா பல்கலைக்கழகத்தில் வழங்கப்படும் எம்எஸ்சிகணிதம், மெடிக்கல் பிசிக்ஸ், மெட்டீரியல் சயின்ஸ், அப்ளைடு கெமிஸ்ட்ரி, அப்ளைடு ஜியாலஜி, எலெக்ட்ரானிக்ஸ் மீடியா, மல்டிமீடியா ஆகிய 2 ஆண்டு கால முழுநேர படிப்புகளில் சேரவும் மாணவர்கள் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

No comments:

Post a Comment