சிறந்த தமிழ் நூல்கள் பரிசுப் போட்டி தமிழ் வளர்ச்சித் துறை அறிவிப்பு - ThulirKalvi

Latest

Search Here!

Sunday, April 30, 2023

சிறந்த தமிழ் நூல்கள் பரிசுப் போட்டி தமிழ் வளர்ச்சித் துறை அறிவிப்பு

சிறந்த தமிழ் நூல்கள் பரிசுப்போட்டி தமிழ் வளர்ச்சித் துறை அறிவிப்பு 2022-ம் ஆண்டு ஜனவரி முதல் டிசம்பர் வரை தமிழில் வெளியிடப்பட்ட நூல்கள் 33 பிரிவுகளின் கீழ் போட்டிக்கு வரவேற்கப்படுகின்றன. 

போட்டியில் ஒவ்வொரு பிரிவிலும் ஒரு நூல் மட்டும் தேர்ந்தெடுக்கப்பட்டு நூலாசிரியருக்கு ரூ.30 ஆயிரமும், அந்நூலை பதிப்பித்த பதிப்பகத்தாருக்கு ரூ.10 ஆயிரமும் பரிசு வழங்கப்பட உள்ளது. மரபுக்கவிதை, புதுக்கவிதை, புதினம், சிறுகதை, நாடகம் (உரைநடை, கவிதை), சிறுவர் இலக்கியம், திறனாய்வு, மொழி வரலாறு, மொழியியல், மொழி வளர்ச்சி, இலக்கணம், நுண் கலைகள் (இசை, ஓவியம், நடனம், சிற்பம்), அகராதி கலைக் களஞ்சியம், கலைச் சொல்லாக்கம், ஆட்சித் தமிழ் பயண இலக்கியம், வாழ்க்கை வரலாறு, தன் வரலாறு, நாட்டு வரலாறு, கல்வெட்டு, தொல்லியல், கடலியலும் வணிக வழிகளும், அகழாய்வு கணிதவியல், வானியல், இயற்பியல், வேதியியல், பொறியியல், தொழில் நுட்பவியல், மானிடவியல், சமூகவியல், புவியியல், சட்டவியல், அரசியல், பொருளியல், வணிகவியல், மேலாண்மையியல், மருந்தியல், விளையாட்டு, மகளிர் இலக்கியம், தமிழர் வாழ்வியல் உள்ளிட்ட ஒவ்வொரு பிரிவுகளிலும் ஒரு புத்தகம் தேர்ந்தெடுக்கப்படும்