எண்ணும் எழுத்தும் 4 மற்றும் 5-ம் வகுப்பிற்கான மாற்றி அமைக்கப்பட்ட வளரறி மதிப்பீடு FA(b) தொகுத்தறி மதிப்பீட்டிற்கான (S.A) அட்டவணை SCERT PROCEEDINGS - துளிர்கல்வி

Latest

Tuesday, June 20, 2023

எண்ணும் எழுத்தும் 4 மற்றும் 5-ம் வகுப்பிற்கான மாற்றி அமைக்கப்பட்ட வளரறி மதிப்பீடு FA(b) தொகுத்தறி மதிப்பீட்டிற்கான (S.A) அட்டவணை SCERT PROCEEDINGS

மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இயக்குநரின் செயல்முறைகள், சென்னை-6 ந.க.எண்.2411/F2/2021, நாள். 2D .06.2023 

பொருள்: 

மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் சென்னை-6 4 மற்றும் 5ஆம் வகுப்பிற்கான எண்ணும் எழுத்தும் திட்டம் சார்ந்து மாற்றி அமைக்கப்பட்ட வளரறி மதிப்பீடு(ஆ) (FA(b), தொகுத்தறி மதிப்பீட்டிற்கான (SA) அட்டவணை மற்றும் 5ம் வகுப்பு மாணவர்களுக்கான அடிப்படை திறனாய்வு (Baseline Survey) குறித்து அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு தெரிவித்தல் - சார்பு. 

பார்வை: 

1. 2023-24ம் ஆண்டிற்கான நிதித்துறை அமைச்சர் அவர்களின் அறிவிப்பு நாள்.20.03.2023

பார்வை 1-ல் காணும் அறிவிப்பின்படி 4 மற்றும் 5ம் வகுப்பிற்கு 2023- 24 கல்வியாண்டு முதல் எண்ணும் எழுத்தும் திட்டம் விரிவாக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தில் 5ம் வகுப்பு மாணவர்களின் கற்றல் நிலை அறிய அடிப்படை திறனாய்வு (Baseline Survey) மற்றும் 4 மற்றும் 5ஆம் வகுப்புகளுக்கான வளரறி மதிப்பீடு(ஆ) (FA(b), தொகுத்தறி மதிப்பீட்டிற்கான (SA) கால அட்டவணை எண்ணும் எழுத்தும் செயலியில் நடத்திட இணைப்பில் உள்ளவாறு மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. 

முதன்மைக் கல்வி அலுவலர்கள் தங்கள் மாவட்டங்களில் செயல்படும் அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு இணைப்பிலுள்ள மாற்றியமைக்கப்பட்ட தேதியினை தெரிவிக்குமாறுக்குமாறு கொள்ளப்படுகிறார்கள்.   

No comments:

Post a Comment