தமிழ்நாடு அரசு உயர்கல்வித் துறை "டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல்கலாம்" விருதுப் பற்றிய விளம்பர அறிவிப்பு - துளிர்கல்வி

Latest

Sunday, June 4, 2023

தமிழ்நாடு அரசு உயர்கல்வித் துறை "டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல்கலாம்" விருதுப் பற்றிய விளம்பர அறிவிப்பு

தமிழ்நாடு அரசு உயர்கல்வித் துறை தலைமைச் செயலகம், சென்னை-600009. விளம்பரம் "டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல்கலாம்" விருதானது மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்களால் சுதந்திர தின விழாவின் போது விஞ்ஞான வளர்ச்சி, மனிதவியல் மற்றும் மாணவர்கள் நலன் ஆகிய துறைகளில் சிறந்து விளங்கும் தமிழ்நாட்டைச் சார்ந்த ஒரு நபருக்கு வழங்கப்படுகிறது. ரூ.5.00 இலட்சத்துக்கான காசோலை, 8 கிராம் தங்கத்தினாலான பதக்கம் மற்றும் பாராட்டு சான்றிதழ் ஆகியவை இந்த விருதில் அடங்கும். இவ்விருதுக்கான விண்ணப்பம், விரிவான தன் விவரக் குறிப்பு, உரிய விவரங்கள் மற்றும் அதற்குரிய ஆவணங்களுடன் 30.06.2023-க்கு முன்பாக "https://awards.tn.gov.in" என்ற வலைதளத்தில் விண்ணப்பிக்கலாம். இணையவழி வாயிலாக சமர்பிக்கப்பட்ட விண்ணப்பங்கள் மட்டுமே பரிசீலனைக்கு ஏற்றுக் கொள்ளப்படும். விருது பெற தகுதி உள்ளவர், தமிழக அரசால் நியமிக்கப்பட்ட தேர்வுக் குழுவால் தேர்வு செய்யப்படுவார். தா. கார்த்திகேயன் செ.ம.தொ.இ./594/வரைகலை/2023 அரசு முதன்மைச் செயலாளர் * சோதனை கடந்து சுதந்திரம் அடைந்தோம் சாதனை புரிந்து சரித்திரம் படைப்போம்”


No comments:

Post a Comment