சீட்டா தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு தரவரிசை பட்டியல் வெளியீடு - துளிர்கல்வி

Latest

Wednesday, June 7, 2023

சீட்டா தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு தரவரிசை பட்டியல் வெளியீடு

சீட்டா தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு தரவரிசை பட்டியல் வெளியீடு

எம்.இ., எம்.டெக்., எம்.பிளான், எம்.ஆர்க் ஆகிய முதுநிலை என்ஜினீயரிங் படிப்புகளில் சேருவதற்கான கலந்தாய்வை அண்ணா பல்கலைக்கழகம் நடத்தி வருகிறது. இந்த கலந்தாய்வில் பங்கேற்பதற்கு முன்பு இந்த படிப்புகளில் சேர சீட்டா நுழைவுத்தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். அதன்படி, கடந்த மார்ச் மாதம் 26-ந் தேதி சீட்டா தேர்வு நடந்தது. இந்த தேர்வை 4 ஆயிரத்து 350 மாணவ-மாணவிகள் எழுதினார்கள். அவர்களுக்கான தேர்வு முடிவு கடந்த ஏப்ரல் மாதம் 13-ந் தேதி வெளியிடப்பட்டது. இந்த சீட்டா தேர்வுக்கு விண்ணப்பித்தவர்கள் கலந்தாய்வுக்கு தனியாக விண்ணப்பிக்க தேவையில்லை. 

அந்த வகையில் சீட்டா நுழைவுத்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு அந்த மதிப்பெண் அடிப்படையில் கலந்தாய்வுக்கான தரவரிசை பட்டியலை அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது. இதுதொடர்பான மேலும் விவரங்களுக்கு https://www.annauniv.edu/ என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம். இதேபோல், கேட் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்க கடந்த மாதம் (மே) 31-ந் தேதி வரை அவகாசம் வழங்கப்பட்டது. 

அதில் விண்ணப்பித்தவர்களுக்கு தரவரிசை பட்டியல் ஓரிரு நாட்களில் வெளியிடப்பட இருக்கிறது. அதனைத் தொடர்ந்து கலந்தாய்வு தொடங்கி நடைபெற உள்ளது. இந்த ஆண்டு முன்கூட்டியே கலந்தாய்வு நடக்க உள்ளது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment