தவில் மற்றும் நாதஸ்வரம் (பகுதி நேர/முழு நேர) இசைப்பயிற்சி பள்ளி மாணவ, மாணவியர்கள் சேர்க்கை அறிவிப்பு - துளிர்கல்வி

Latest

Friday, June 23, 2023

தவில் மற்றும் நாதஸ்வரம் (பகுதி நேர/முழு நேர) இசைப்பயிற்சி பள்ளி மாணவ, மாணவியர்கள் சேர்க்கை அறிவிப்பு

தவில் மற்றும் நாதஸ்வரம் (பகுதி நேர/முழு நேர) இசைப்பயிற்சி பள்ளி மாணவ, மாணவியர்கள் சேர்க்கை அறிவிப்பு 

இத்திருக்கோயில் நிர்வாகத்தின் கீழ் நடத்தப்படும் தவில் மற்றும் நாதஸ்வரம் பயிற்சி பள்ளியில் 2023-ம் ஆண்டிற்கான மாணவ, மாணவியர்கள் சேர்க்கை நடைபெறுகிறது. இந்து மதத்தைச் சார்ந்த இசையில் நாட்டமுள்ள மாணவ, மாணவியர்களிடமிருந்து, 25.07.2023-க்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இத்திருக்கோயில் நிர்வாகத்தின் மூலம் பகுதி நேரமாக மாலை 5.00 மணி முதல் 7.00 மணி வரை பயிலும் மாணவ, மாணவியர்களுக்கு இரவு சிற்றுண்டியுடன், கட்டணமில்லாமல் பயிற்சி வழங்கப்படும். மேலும் பயிற்சி பெறும் பகுதி நேர மாணவ, மாணவியர்களுக்கு மாதம் ஒன்றுக்கு ரூ.1,500/-ஊக்கத் தொகை வழங்கப்படும். தவில் மற்றும் நாதஸ்வரம் முழு நேரமாக தங்கி பயில விருப்பமுள்ள மாணவ, மாணவியர்களுக்கு உண்டு, உறைவிடத்துடன், சீருடையும் வழங்கப்படும். மேலும் பயிற்சி பெறும் முழு நேர மாணவ, மாணவியர்களுக்கு மாதம் ஒன்றுக்கு ரூ.3,000/-ஊக்கத் தொகை வழங்கப்படும். பயிற்சி காலம் 5 ஆண்டுகளாகும்
DOWNLOAD APPLICATION (PDF)

No comments:

Post a Comment