SMC கூட்டம் 23.06.23 அன்று அனைத்து பள்ளிகளிலும் நடத்துதல் சார்ந்து -மாநில திட்ட இயக்குநர் செயல்முறைகள் - துளிர்கல்வி

Latest

Thursday, June 15, 2023

SMC கூட்டம் 23.06.23 அன்று அனைத்து பள்ளிகளிலும் நடத்துதல் சார்ந்து -மாநில திட்ட இயக்குநர் செயல்முறைகள்

SMC கூட்டம் 23.06.23 அன்று அனைத்து பள்ளிகளிலும் நடத்துதல் சார்ந்து -மாநில திட்ட இயக்குநர் செயல்முறைகள்

பார்வையில் காணும் செயல்முறைகளின்படி. மாதாந்திரப் பள்ளி மேலாண்மைக் குழுக் கூட்டமானது அனைத்து வகை அரசுப் பள்ளிகளிலும் வெள்ளிக்கிழமையில் நடைபெற்று வருகிறது. நடப்புக் கல்வியாண்டு 2023-2024-க்கான மேலாண்மைக் குழுவின் முதல் கூட்டத்தினை வருகிற 23.06.2023 (வெள்ளிக்கிழமை) பிற்பகல் 03:00 மணி முதல் 04:00 மணி வரை நடத்திட அறிவுறுத்தப்படுகிறது. இக்கல்வியாண்டில் பள்ளி திறக்கும் நாளானது தள்ளிவைக்கப்பட்ட காரணத்தால் இந்த மாதம் மட்டும் பள்ளி மேலாண்மைக் குழுக் கூட்டமானது மேற்காண் தேதியில் நடத்தவும், தொடர்ந்து எதிர்வரும் மாதங்களில் மாதத்தின் முதல் வெள்ளிக்கிழமைகளில் பள்ளி மேலாண்மைக் குழுக் கூட்டத்தினை நடத்திடவும் அறிவுறுத்தப்படுகிறது. 

No comments:

Post a Comment