சிறந்த அறிவியல் ஆசிரியர் விருது - அரசு, அரசு உதவி பெறும் உயர் / மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் அறிவியல் ஆசிரியர்கள் விண்ணப்பிக்க அறிவியல் நகரம் அழைப்பு!!! - துளிர்கல்வி

Latest

Thursday, July 13, 2023

சிறந்த அறிவியல் ஆசிரியர் விருது - அரசு, அரசு உதவி பெறும் உயர் / மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் அறிவியல் ஆசிரியர்கள் விண்ணப்பிக்க அறிவியல் நகரம் அழைப்பு!!!

சிறந்த அறிவியல் ஆசிரியர் விருது - அரசு, அரசு உதவி பெறும் உயர் / மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் அறிவியல் ஆசிரியர்கள் விண்ணப்பிக்க அறிவியல் நகரம் அழைப்பு!!!

மாணாக்கர்களின் அறிவை வடிவமைப்பதிலும், அறிவியல் கற்றல் மீதான ஆர்வத்தை வளர்ப்பதிலும், உயர் கல்வியில் மாணாக்கர்கள் அறிவியல் துறையினை எடுப்பதற்கும் மற்றும் அறிவியலாளர்களாக உருவாக்குவதற்கும் அறிவியல் ஆசிரியர்கள் முக்கிய பங்கு வகிக்கின்றனர். அறிவியல் ஆசிரியர்களின் விலைமதிப்பற்ற பணிகளை அங்கீகரிக்கும் விதமாக அறிவியல் நகரம் 2018-2019 முதல் சிறந்த அறிவியல் ஆசிரியர் விருது வழங்கி வருகிறது. 
தமிழ் நாட்டில் உள்ள உயர்நிலைப் பள்ளி மற்றும் மேல்நிலைப் பள்ளி அளவில் அரசு/அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணிபுரியும் அறிவியல் ஆசிரியர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. அறிவியல் நகரத்தால் பத்து ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டு. ரொக்கப்பரிசு காசோலையாகவும் மற்றும் சான்றிதழ்களும் வழங்கப்படும். இதில் ஐந்து ஆசிரியர்கள் தமிழ்வழிப் பள்ளிகளில் இருந்தும் மற்றும் ஐந்து ஆசிரியர்கள் திறந்தநிலைப் பிரிவிலும் (தமிழ் மற்றும் ஆங்கிலம்) தேர்ந்தெடுக்கப்படுவர்.

No comments:

Post a Comment