மன்ற செயல்பாடுகளில் சிறந்து விளங்கும் 100 மாணவ-மாணவிகளுக்கு வெளிநாடு கல்வி சுற்றுலா பள்ளிக்கல்வித்துறை தகவல் - துளிர்கல்வி

Latest

Thursday, August 3, 2023

மன்ற செயல்பாடுகளில் சிறந்து விளங்கும் 100 மாணவ-மாணவிகளுக்கு வெளிநாடு கல்வி சுற்றுலா பள்ளிக்கல்வித்துறை தகவல்

மன்ற செயல்பாடுகளில் சிறந்து விளங்கும் 100 மாணவ-மாணவிகளுக்கு வெளிநாடு கல்வி சுற்றுலா பள்ளிக்கல்வித்துறை தகவல் 
2023-24-ம் ஆண்டுக்கான கல்வி இணை மற்றும் கல்வி சாரா செயல்பாடுகள் குறித்த விவரங்களை பள்ளி கல்வித்துறை வெளியிட்டு இருக்கிறது. இதுதொடர்பாக அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கை கூறப்பட்டு உள்ளதாவது:- பள்ளிகளில் ஒவ்வொரு வாரமும் கலை மற்றும் மன்ற செயல்பாடுகளுக்காக தலா இரண்டு பாடவேளைகள் ஒதுக்கப்பட்டு இருக்கின்றன. 
அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 6 முதல் 9-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்கள் இந்த பாடவேளைகளில் அவர்களின் ஆர்வம் மற்றும் விருப்பத்திற்கு ஏற்ப மன்ற செயல்பாடுகளில் பங்கேற்க ஊக்குவிக்க வேண்டும். அதன்படி இலக்கிய மன்றம், வினாடி வினா மன்றம், வானவில் மன்றம், சிறார் திரைப்படம் ஆகியவற்றில் மாணவ-மாணவிகளை கலந்து கொள்ள செய்ய வேண்டும். இதில் வட்டார அளவிலான போட்டிகள் ஆகஸ்டு, நவம்பர், பிப்ரவரி மாதங்களின் இறுதி வாரத்தில் நடைபெறும். அதேபோல் மாவட்ட அளவிலான போட்டிகள் மார்ச் மாதத்தில் நடத்தப்படும். 
அதில் வெற்றி பெறும் மாணவ-மாணவிகள் அடுத்ததாக மாநில அளவிலான போட்டிகளில் கலந்து கொள்ள ஏற்பாடு செய்யப்படுவார்கள். அந்தவகையில் மேற்சொன்ன 4 மன்ற செயல்பாடுகளில் சிறந்து விளங்கும் தலா 25 மாணவ-மாணவிகள் வீதம் மொத்தம் 100 பேரை வெளிநாட்டிற்கு கல்விச் சுற்றுலா அழைத்துச் செல்லப்பட உள்ளனர். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment