மாநகராட்சி பள்ளி ஆசிரியர்களுக்கான பொதுமாறுதல் கலந்தாய்வு அறிவிப்பு - துளிர்கல்வி

Latest

Wednesday, August 2, 2023

மாநகராட்சி பள்ளி ஆசிரியர்களுக்கான பொதுமாறுதல் கலந்தாய்வு அறிவிப்பு

மாநகராட்சி பள்ளி ஆசிரியர்களுக்கான பொதுமாறுதல் கலந்தாய்வு அறிவிப்பு 

சென்னை மாநகராட்சி பள்ளி ஆசிரியர்களுக் கான பொதுமாறுதல் கலந்தாய்வுக்கு தலைமை ஆசிரியர்கள் விண் ணப்பிக்கலாம் என சுற்றறிக்கை விடப்பட்டுள்ளது. சென்னை மாநகராட்சி கட்டுப்பாட்டில் 410 ஆரம்ப, நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகள் இயங்கி வருகின்றன. இதில் பணிபுரியும் ஆசிரியர்கள், பணிநிரவல் மற்றும் மாறுதல் கலந்தாய்வுக்கு விருப்பம் உள்ள ஆசிரியர்கள் விண்ணப்பிக்குமாறு மாநகராட்சி சார்பில் சுற்றறிக்கை விடப்பட்டுள்ளது. 
இதில் நிகழ் கல்வியாண்டில் தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசி ரியர்களுக்கான பொதுமாறுதல் கோருபவர்களுக்கான கலந்தாய்வு கல்வி தகவல் மேலாண்மை முகமை (இ.எம்.ஐ.எஸ்.) இணையத ளம் வழியாக மேற்கொள்ளப்படவுள்ளது. இந்த கலந்தாய்வில் அனைத்து வகை தலைமை ஆசிரியர்கள், முதுநிலை ஆசிரியர்கள், பட்டதாரி ஆசிரியர்கள், இடைநிலை ஆசிரியர்கள், உடற்கல்வித் துறை சார்ந்த ஆசிரியர்கள் மற்றும் சிறப்பு ஆசிரியர்கள் இ.எம்.ஐ.எஸ். இணையதளத்தில் தங்களுக் கான பிரத்யேக ஐடி மூலம் விண்ணப்பங்களைப் பதிவேற்ற வேண் டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment