ஈசிஜி டெக்னீசியன் பணிக்கு முன்னாள் படை வீரா்கள் விண்ணப்பிக்கலாம் - துளிர்கல்வி

Latest

Sunday, August 20, 2023

ஈசிஜி டெக்னீசியன் பணிக்கு முன்னாள் படை வீரா்கள் விண்ணப்பிக்கலாம்

இசிஜி தொழில்நுட்ப பணிக்கு விண்ணப்பிக்கலாம் 


காலியாக உள்ள இசிஜி டெக்னீசியன் பணியிடத்துக்கு முன்னாள் படை வீரர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப் பட்டுள்ளது. இது குறித்து வேலூர் மாவட்ட ஆட்சியர் பெ.குமார வேல்பாண்டியன்வெளியிட்ட செய்திக் குறிப்பு: மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம் சார்பில், இCஜி டெக்னீசியன் பணியிடத்துக்கு நேரடி தேர்வு மூலம் ஆள் சேர்ப்புக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதில்,முன்னாள்படைவீரர் களுக்கு 5 சதவீத சிறப்பு இட ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது. முன்னாள் படை வீரர்களுக்கு எஸ்சி, எஸ்டி, எஸ்சிஏ,பிசிஎம், எம்பிசி, டிஎன்சி இனப் பிரி வைச் சேர்ந்தவர்களுக்கு வயது உச்ச வரம்பு இல்லை. ஓசி பிரி வினருக்கு 50 வயதாக நிர்ண யிக்கப்பட்டுள்ளது. தகுதி வாய்ந்த முன்னாள் படை வீரர்கள் ஆகஸ்ட் 21-  ஆம் தேதிக்குள் www.mrb.tn.gov.in என்ற இணையதள மூலம் விண்ணப்பித்து பயன் பெறலாம். கூடுதல் விவரங்களுக்கு வேலூர் மாவட்ட முன்னாள் படை வீரர் நல அலுவலகத்தை நேரிலோ அல்லது 0416 2977432 என்ற தொலைபேசி எண்ணிலோ தொடர்பு கொள் ளலாம் என அதில் தெரிவிக்கப் பட்டுள்ளது.

No comments:

Post a Comment