விஞ்ஞானி பணி இடங்கள் - துளிர்கல்வி

Latest

Saturday, August 19, 2023

விஞ்ஞானி பணி இடங்கள்

பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் (டி.ஆர்.டி.ஓ) மூலம் 204 விஞ்ஞானி பணி இடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. எலெக்ட்ரிக்கல், மெக்கானிக்கல், கம்ப்யூட்டர் சயின்ஸ் என்ஜினீயரிங், ஏரோநாட்டிக்கல், சிவில், புவியியல், சுற்றுச்சூழல் அறிவியல், கணிதம், இயற்பியல், வேதியியல் உள்ளிட்ட துறை சார்ந்த பி.இ., பி.டெக் படிப்புகளை படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். கேட் தேர்விலும் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். கேட் தேர்வு மதிப்பெண், நேர்காணல் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். விண்ணப்பிப்பதற்கான வயது வரம்பு, விண்ணப்ப நடைமுறை பற்றிய விரிவான விவரங்களை https://rac.gov.in/ என்ற இணையதளத்தில் பார்வையிடலாம். விண்ணப்பிக்க கடைசி தேதி: 31.8.2023.


No comments:

Post a Comment