"இதய ஆரோக்கியத்தில் உணவுத் தேர்வுகளின் விளைவுகள் - ThulirKalvi

Latest

Search Here!

Saturday, September 16, 2023

"இதய ஆரோக்கியத்தில் உணவுத் தேர்வுகளின் விளைவுகள்

இதயத்தை பாதிக்கும் உணவு பழக்கங்கள் 

 உணவுப்பழக்க வழக்கங்களை முறையாக கடைப்பிடிக்காவிட்டால் இதயத்தின் ஆரோக்கியம் பாதிப்புக்குள்ளாகிவிடும். இதயத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தும் ஒருசில உணவு பழக்கங்கள் இருக்கின்றன. அவற்றை ஏன் தவிர்க்க வேண்டும் என்பது பற்றிப் பார்ப்போம்.

 உணவு சாப்பிட்ட பிறகு இனிப்பு சாப்பிடும் வழக்கத்தை சிலர் கொண்டிருக்கிறார்கள். அப்படி இனிப்பு வகைகளை ருசிப்பது உடலில் இன்சுலின் அளவை அதிகப்படுத்திவிடும். உடலில் அதிக கலோரிகள் சேருவதற்கும் காரணமாகிவிடும். அதன் விளைவாக நீரிழிவு நோய், இதய நோய் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகரிக்கும். எனவே சாப்பிட்டதும் இனிப்பு பலகாரங்களை ருசிக்கும் வழக்கத்தை முடிந்தவரை தவிர்க்க வேண்டும். 

 காரமான உணவுகளும் இதயத்திற்கு நல்லதல்ல. உணவில் மிதமான காரம் சேர்த்துக்கொள்ளலாம். காரத்தின் அளவு அதிகரிக்கும்போது வயிற்றுப்போக்கு ஏற்படக்கூடும். இதயத்திற்கும் பாதிப்பை ஏற்படுத்திவிடும். இலவங்கப்பட்டை, ஏலக்காய், மிளகு போன்றவற்றை உணவில் சேர்த்துக்கொள்வது இதயத்திற்கு நலம் பயக்கும். 

 உணவுப் பொருட்களில் அதிக அளவு எண்ணெய் மற்றும் மசாலா சேர்ந்திருப்பதும் இதயத்தை பாதிக்கும். இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்கும், ஒட்டுமொத்த உடல்நலத்தை பேணுவதற்கும் சமையல் எண்ணெய்யை அளவாக பயன்படுத்த வேண்டும்.

 சைவ உணவுகளுடன் மீன், இறைச்சி வகைகளை தொடர்ச்சியாக அல்லாமல் அவ்வப்போது உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும். அதில் இருக்கும் புரதங்கள், ஒமேகா-3 கொழுப்புகள் இதயத்திற்கு பலம் சேர்க்கும். 

 உணவின் சுவையை கூட்டுவதற்காக உப்பை அதிகம் சேர்க்கக்கூடாது. அதனை அதிகமாக சேர்க்கும்போது ரத்த அழுத்தம் உயரும். இதய நோய் உருவாக இதுவே முக்கிய காரணமாகிவிடும்.

"Effects of Dietary Choices on Heart Health

Proper dietary habits play a crucial role in maintaining a healthy heart. However, there are certain eating patterns that can be detrimental to cardiovascular health. Let's delve into why it's essential to steer clear of these habits.

Post-Meal Sweet Tooth:

Some individuals have a tendency to indulge in sweets after their meals. Unfortunately, this practice leads to an increase in insulin levels and the accumulation of excess calories in the body. Consequently, it raises the risk of both diabetes and heart disease. Therefore, it's advisable to minimize the habit of consuming sweets after meals.

Excessive Spice Usage:

Excessive consumption of spicy foods can also have adverse effects on heart health. It's best to use salt in moderation, as excessive sodium intake can lead to conditions like high blood pressure and even heart problems. On the other hand, incorporating spices such as cinnamon, cardamom, and pepper into your diet can be beneficial for heart health.

Watch Your Oil and Spice Intake:

 Overindulgence in oil and spices in your meals can negatively impact heart health. To maintain good cardiovascular health and overall well-being, it's essential to use cooking oil in moderation.

Balanced Diet with Protein:

It's important to strike a balance between vegetarian meals and occasional inclusion of fish and meat in your diet. These animal-based protein sources contain valuable nutrients, including omega-3 fatty acids, which can strengthen the heart.

Sodium Sensitivity:

Avoid the temptation to over-salt your food in an attempt to enhance its flavor. Excessive salt consumption can lead to elevated blood pressure, a primary risk factor for heart disease.

In conclusion, making mindful dietary choices is crucial for the well-being of your heart. By avoiding excessive sweets, regulating spice and salt intake, and incorporating a balanced diet with occasional protein-rich sources, you can help safeguard your cardiovascular health."

Top of Form