பி.இ., பி.டெக்., பி.எஸ்சி என்ஜினீயரிங் படிப்பிற்கு வேலை! விண்ணப்பிக்க கடைசி தேதி: 10-11-2023! - துளிர்கல்வி

Latest

Saturday, October 28, 2023

பி.இ., பி.டெக்., பி.எஸ்சி என்ஜினீயரிங் படிப்பிற்கு வேலை! விண்ணப்பிக்க கடைசி தேதி: 10-11-2023!

என்ஜினீயர்களுக்கு பணி விண்ணப்பிக்க கடைசி தேதி: 10-11-2023.
பவர் கிரிட் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட் நிறுவனத்தில் 184 என்ஜினீயர் பயிற்சி இடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. எலெக்ட்ரானிக்ஸ், சிவில், எலெக்ட்ரிக்கல், கணினி அறிவியல் போன்ற பிரிவுகளில் என்ஜினீயர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். சம்பந்தப்பட்ட துறை சார்ந்த என்ஜினீயரிங் (பி.இ., பி.டெக்., பி.எஸ்சி என்ஜினீயரிங்) படிப்பை 60 சதவீத மதிப்பெண்களுடன் முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். 10-11-2023 அன்றைய தேதிப்படி 18 முதல் 28 வயதுக்குட்பட்டவர்களாக இருக்க வேண்டும். அரசு விதிமுறைகளின்படி வயது தளர்வு அனுமதிக்கப்படும். கேட் தேர்வு 2023-ல் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். விண்ணப்பிக்க கடைசி தேதி: 10-11-2023. விண்ணப்பிக்கும் விதம், தேர்வு முறை பற்றிய விரிவான விவரங்களை https://www.powergrid.in/ என்ற இணையதளத்தில் பார்வையிடலாம்.

No comments:

Post a Comment