மாண்புமிகு பள்ளிக் கல்வி அமைச்சர் மற்றும் பள்ளிக் கல்வி செயலர்
அவர்களால் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் மற்றும் மாவட்டக்
கல்வி அலுவலர்களுக்கான ஆய்வுக்கூட்டம் 24.11.2023, 25.11.2023 மற்றும்
26.11.2023 ஆகிய நாட்களில் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நடைபெறும் என
தெரிவிக்கப்படுகிறது. இக்கூட்டத்தில் தலைமையிடத்தில் பணிபுரியும் முதன்மைக்
கல்வி அலுவலர் மற்றும் மாவட்டக் கல்வி அலுவலர் நிலையில் உள்ள
அலுவலர்களும் கலந்துகொள்ள வேண்டும். இக்கூட்டம் சார்ந்து தங்களது
அலகிற்குட்பட்ட கூட்டப் பொருட்கள் விவரங்களை தயாரித்து இணை இயக்குநர்
(இடைநிலைக் கல்வி) அவர்களுக்கு Hard Copy வழங்கவும் மற்றும் "பிடி 1" பிரிவிற்கு
மின்னஞ்சல் மூலம் pd1sec.dse@gmail.com என்ற முகவரிக்கு 15.11.2023 மாலை 4.00
மணிக்குள் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறது.
No comments:
Post a Comment