ஜே.இ.இ., நீட் நுழைவுத் தேர்வுகளுக்கு மாணவர்கள் தயாராகும் விதமாக பள்ளிகளில் தினமும் 1½ மணி நேரம் பயிற்சி வகுப்புகள் நடத்தப்படும் என்று பள்ளிக்கல்வித் துறை அறிவித்துள்ளது.
நீட், ஜே.இ.இ. நுழைவுத் தேர்வுகள்
ஜே.இ.இ., நீட் போன்ற நுழைவுத் தேர்வுகள் அடுத்த ஆண்டு (2024) மே மாதத்துக்குள் நடத்தப்பட உள்ளன. இந்த தேர்வுக்கு அரசு பள்ளி மாணவ-மாணவிகள் தயாராகும் விதமாக ஒவ்வொரு ஆண்டும் பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுகின்றன. ‘நீட்’ நுழைவுத் தேர்வுக்கு தமிழ்நாடு அரசு எதிர்ப்பு தெரிவித்து விலக்கு கேட்டு போராடி வரும் நிலையிலும், மாணவர்களுக்காக இந்த பயிற்சி வகுப்புகளை நடத்துகிறது.
பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியிடம் கடந்த மாதம் (அக்டோபர்) 31-ந்தேதி இதுபற்றி நிருபர்கள் கேள்வி எழுப்பிய போது, பயிற்சி வகுப்புகளுக்கான பணிகள் தொடங்கிவிட்டதாக அறிவித்தார். அப்போது அருகில் இருந்த பள்ளிக்கல்வித் துறை இயக்குனர் அறிவொளி அதுதொடர்பாக சொல்ல முன்வந்தார். ஆனால் அமைச்சர் அதை காதில் வாங்கவில்லை.
பயிற்சி வகுப்புகள்
இந்த நிலையில் பயிற்சி வகுப்புகள் தொடங்குவதற்கான ஆயத்த பணிகள் குறித்த அறிவிப்பை பள்ளிக்கல்வித் துறையின் இணை இயக்குனர் (தொழிற்கல்வி) அனைத்து பள்ளிகளுக்கும் சுற்றறிக்கையாக நேற்று முன்தினம்தான் அனுப்பியிருக்கிறார். அந்த சுற்றறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:-
ஜே.இ.இ., நீட் நுழைவுத் தேர்வு பயிற்சி வகுப்புகளை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் தலைமையில் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர், இயற்பியல், கணிதம், வேதியியல், தாவரவியல், விலங்கியல் ஆகிய பாடங்களில் ஒவ்வொரு பாடத்துக்கும் தலா 2 பாட வல்லுனர்கள் அடங்கிய குழு அமைக்கப்பட வேண்டும். மேலும் பயிற்சி அளிப்பதில் தன்னார்வத்துடன் செயல்படும் ஓய்வுபெற்ற ஆசிரியர்களையும், நுழைவுத்தேர்வுகளில் வெற்றிபெற்று உயர்கல்வி படித்து வரும் மாணவர்களையும் தன்னார்வலர்களாக இணைக்கலாம்.
மாநில குழுவில் இருந்து வரும் வினாத்தாள்கள் மற்றும் விடைக்குறிப்புகள் ஆகியவற்றை பயன்படுத்தி பயிற்சி வகுப்புகள் நடைபெறுவதை உறுதிசெய்ய வேண்டும்.
தினமும் 1½ மணி நேரம்...
இந்த பயிற்சி வகுப்புகளில் அரசு மற்றும் அரசு உதவிபெறும் மேல்நிலைப்பள்ளிகளில் பிளஸ்-1, பிளஸ்-2 படிக்கும் மாணவர்களை சேர ஆசிரியர்கள் ஆர்வமூட்டி ஊக்கப்படுத்தலாம். ஆனால் கட்டாயப்படுத்தக் கூடாது.
பள்ளி அனைத்து வேலை நாட்களிலும் அதாவது, திங்கட்கிழமை முதல் வெள்ளிக்கிழமை வரை தினமும் மாலை 4 மணி முதல் 5.30 மணி வரை 1½ மணி நேரம் பள்ளி வளாகத்திலேயே பயிற்சி வகுப்புகள் நடத்தப்படும்.
மேலும் அரையாண்டு, பொதுத்தேர்வு விடுமுறை நாட்களிலும் சிறப்பு பயிற்சி வழங்கப்படும். இதுதவிர பள்ளிகளில் உள்ள உயர்தொழில்நுட்ப ஆய்வகம் மூலமும் தேர்வுக்கான பயிற்சிகள் அளிக்கப்படும். நீட், ஜே.இ.இ. போன்ற நுழைவுத்தேர்வுகளுக்கான பாடத்திட்டத்தின் அடிப்படையில் பள்ளிக்கல்வி இயக்ககத்தால் வழங்கப்படும் கால அட்டவணையை பின்பற்றி முறையாக பயிற்சிகள் வழங்கப்பட வேண்டும்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Friday, November 3, 2023
New
ஜே.இ.இ., நீட் தேர்வுகளுக்கு தயாராக பள்ளி மாணவர்களுக்கு பயிற்சி வகுப்புகள் கல்வித்துறை அறிவிப்பு
About BANUMATHI V
Templatesyard is a blogger resources site is a provider of high quality blogger template with premium looking layout and robust design. The main mission of templatesyard is to provide the best quality blogger templates.
DSE - பள்ளிக் கல்வி
Labels:
DSE - பள்ளிக் கல்வி
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment