முனைவர் பட்டப்படிப்புக்கு SC,ST மாணவர்கள் ஊக்கத்தொகைக்கு விண்ணப்பிக்கலாம் - துளிர்கல்வி

Latest

Wednesday, November 22, 2023

முனைவர் பட்டப்படிப்புக்கு SC,ST மாணவர்கள் ஊக்கத்தொகைக்கு விண்ணப்பிக்கலாம்

முனைவர் பட்டப்படிப்புக்கு SC,ST மாணவர்கள் ஊக்கத்தொகைக்கு விண்ணப்பிக்கலாம் 

முழுநேர முனைவர் பட்டப்படிப்பு ஊக்கத் தொகை எஸ்.சி., எஸ்.டி., மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் 

சென்னை, நவ. 21: முழுநேர முனைவர் பட்டப் படிப்பு பயிலும் தாழ்த்தப்பட்ட, பழங்குடியின வகுப்பைச் சேர்ந்த மாணவர்கள் ஊக்கத் தொகைக்கு விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட் டுள்ளது. 

விண்ணப்பப் படிவங்களை தமிழக அரசின் இணையதளத்திலி ருந்து (www.tn.gov.in/forms/deptname/1) பதிவிறக்கம் செய்யலாம். இதுகுறித்து அனைத்துப் பல்கலைக்கழகங்களுக்கும் தகவல் அனுப்பப்பட்டுள்ளது. 

முழுமையாக பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை டிச. 31-ஆம் தேதி மாலை 5.45 மணிக்குள் அனுப்ப வேண்டும். இயக்குநர், ஆதிதிராவிடர் நல இயக்குநரகம், எழிலகம், சேப்பாக்கம், சென்னை - 5 என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும் என்று தமிழக் அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment