தமிழ்மொழி இலக்கிய திறனறித் தேர்வு முடிவு நாளை மறுதினம் வெளியாகிறது - துளிர்கல்வி

Latest

Saturday, December 2, 2023

தமிழ்மொழி இலக்கிய திறனறித் தேர்வு முடிவு நாளை மறுதினம் வெளியாகிறது

2023-24-ம் கல்வியாண்டுக்கான தமிழ்மொழி இலக்கிய திறனறித் தேர்வு கடந்த 15.10.2023 அன்று நடைபெற்றது. இந்த தேர்வை 2 லட்சத்து 36 ஆயிரத்து 910 பேர் எழுதினார்கள். இதற்கான தேர்வு முடிவு நாளை மறுதினம் (திங்கட்கிழமை) காலை 11 மணிக்கு வெளியிடப்பட இருப்பதாக அரசு தேர்வுத்துறை அறிவித்துள்ளது. 

தேர்வை எழுதிய மாணவர்கள் www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் சென்று பார்த்துக் கொள்ளலாம். தேர்வில் வெற்றி பெறுபவர்களில் அரசு பள்ளிகளை சேர்ந்த 750 மாணவர்கள், அரசு பள்ளி உள்ளிட்ட அனைத்து வகை பள்ளிகளை சேர்ந்த 750 மாணவர்கள் என மொத்தம் 1,500 பேர் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு பள்ளிக்கல்வித் துறை வாயிலாக மாதம் ரூ.1,500 வீதம் 2 ஆண்டுகளுக்கு வழங்கப்படும்.

No comments:

Post a Comment