ஆசிரியர் தேர்வு வாரியம் (TRB) இன்று (22-12-2023) வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு - துளிர்கல்வி

Latest

Search This Site

Friday, December 22, 2023

ஆசிரியர் தேர்வு வாரியம் (TRB) இன்று (22-12-2023) வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு

ஆசிரியர் தேர்வு வாரியம் (TRB) இன்று (22-12-2023) வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு

ஆசிரியர் தேர்வு வாரிய அறிவிக்கை எண்.03/2023, நாள் 25.10.2023 ன்படி 2023-2024 ஆம் ஆண்டிற்கான பட்டதாரி ஆசிரியர் / வட்டார வளமைய ஆசிரியர் தேர்வு எதிர்வரும் 07.01.2024 அன்று நடத்தப்பட உள்ளது. இத்தேர்வினை எழுத 41,478 தேர்வர்கள் விண்ணப்பித்துள்ளனர். விண்ணப்பித்த தேர்வர்களுக்கு நுழைவுச் சீட்டு (Hall Ticket) ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் (https://www.trb.tn.gov.in/) பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. எனவே, தேர்வர்கள் 22:12.2023 முதல் அவர்களது User id மற்றும் கடவுச் சொல் (Password) ஆகியவற்றை உள்ளீடு செய்து தங்களுக்குரிய நுழைவுச் சீட்டினை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். தேர்வுக் கூட நுழைவுச் சீட்டினை பதிவிறக்கம் செய்வதில் ஏற்படும் கடைசி நேர பதற்றத்தைத் தவிர்க்கும் பொருட்டு தேர்வுக்கூட நுழைவுச் சீட்டு முன்னதாகவே வெளியிடப்பட்டுள்ளது. எனவே, தேர்வர்கள் தேர்விற்கு ஒரு வார் காலத்திற்கு முன்னதாகவே தங்களுக்குரிய நுழைவுச்சீட்டினை பதிவிறக்கம் செய்துகொள்ள அறிவுறுத்தப்படுகிறார்கள். 



No comments:

Post a Comment