பள்ளிக்கல்வித்துறையில் 4 இணை இயக்குனர்கள் இடமாற்றம் - துளிர்கல்வி

Latest

Tuesday, February 6, 2024

பள்ளிக்கல்வித்துறையில் 4 இணை இயக்குனர்கள் இடமாற்றம்

பள்ளிக்கல்வித்துறையின் பல்வேறு பிரிவுகளில் பணியாற்றும் 4 இணை இயக்குனர்கள்,இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதுகுறித்து பள்ளிக்கல்வித்துறை செயலாளர் ஜெ.குமரகுருபரன் நேற்று பிறப்பித்துள்ள உத்தரவில் கூறப்பட்டுள்ளதாவது:- 

ஆசிரியர் தேர்வு வாரியத்தின் இணை இயக்குனர் செ.அமுதவல்லி, மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் இணை இயக்குனராகவும் (பயிற்சி), மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் இணை இயக்குனர் (பாடத்திட்டம்) ந.ஆனந்தி, ஆசிரியர் தேர்வு வாரியத்தின் இணை இயக்குனராகவும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். 

மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் இணை இயக்குனர் (பயிற்சி) வெ.ஜெயக்குமார், மதுரை மாவட்டம் கள்ளர் சீரமைப்பு இணை இயக்குனராகவும், மதுரை மாவட்டம் கள்ளர் சீரமைப்பு இணை இயக்குனர் க.ஸ்ரீதேவி, மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் இணை இயக்குனராகவும் (பாடத்திட்டம்) இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment