பல்கலைக்கழக மாணவர் சேர்க்கைக்கான ‘கியுட்’ தேர்வு தேதியில் மாற்றம் இல்லை யு.ஜி.சி. தலைவர் தகவல் - துளிர்கல்வி

Latest

Monday, March 18, 2024

பல்கலைக்கழக மாணவர் சேர்க்கைக்கான ‘கியுட்’ தேர்வு தேதியில் மாற்றம் இல்லை யு.ஜி.சி. தலைவர் தகவல்



நாடு முழுவதும் அரசு, தனியார் பல்கலைக்கழகங்கள், நிகர்நிலை மற்றும் தனியார் பல்கலைக்கழகங்களில் மாணவர் சேர்க்கைக்கு பொது பல்கலைக்கழக நுழைவுத்தேர்வு (கியுட்) கடந்த 2022-ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த ஆண்டு இளங்கலை படிப்புகளுக்கான ‘கியுட்’ தேர்வு, மே 15-ந் தேதிக்கும், மே 31-ந் தேதிக்கும் இடையே நடைபெறும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்தது. அந்த காலகட்டத்தில் மே 20 மற்றும் 25-ந் தேதிகளில் நாடாளுமன்ற தேர்தல் நடக்கிறது. 

எனவே, ‘கியுட்’ தேர்வு தேதி மாற்றப்படுமா என்ற கேள்வி எழுந்தது. ஆனால், தேதிகளில் மாற்றம் இருக்காது என்று பல்கலைக்கழக மானிய குழு (யு.ஜி.சி.) தலைவர் ஜெகதீஷ் குமார் நேற்று அறிவித்தார். தேர்வுக்கு விண்ணப்பிக்கும் பணி 26-ந் தேதி முடிவடைகிறது. அதன்பிறகு தேர்வு அட்டவணை வெளியிடப்படும் என்றும் அவர் கூறினார்.

No comments:

Post a Comment