கூட்டுறவு மேலாண்மை டிப்ளமோ பயிற்சிக்கு 29-ந் தேதி முன்பதிவு தொடக்கம்
இணைபதிவாளர் தகவல்
மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் அருளரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
தமிழ்நாடு கூட்டுறவு ஒன்றியத்தின் அங்கமாக செயல்படும் நாமக்கல் கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில், 2024-25-ம் ஆண்டிற்கான முழுநேர கூட்டுறவு மேலாண்மை டிப்ளமோ பயிற்சி (டி.கோஆப்) நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டிற்கான, மேலாண்மை டிப்ளமோ பயிற்சிக்கு வருகிற 29-ந் தேதி முதல் முன்பதிவு தொடங்குகிறது. வருகிற செப்டம்பர் மாதம் தொடங்கி ஓராண்டு காலத்திற்கு இரண்டு பருவ முறைகளில் பயிற்சி நடைபெறும். பயிற்சிக்கான பாடத்திட்டம் தமிழில் மட்டுமே நடத்தப்படும். பயிற்சிக்கான குறைந்தபட்ச கல்வி தகுதி பிளஸ்-2 தேர்ச்சி பெற்று, 17 வயது நிறைவடைந்திருக்க வேண்டும்.
விருப்பமுடைய தகுதியானோர் www.tncuicm.com என்ற இணையதளம் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்ப தேதி, பயிற்சி கட்டண விவரங்கள் மற்றும் நிபந்தனைகள் இணையதளத்தில் வெளியிடப்படும். மேலும் விவரம் பெற, நாமக்கல்- சேலம் சாலையில் அமைந்துள்ள, நாமக்கல் கூட்டுறவு மேலாண்மை நிலையத்தை நேரில் அணுகலாம்.
இவ்வாறு அதில் கூறி உள்ளார்.
No comments:
Post a Comment