தமிழக பள்ளிக்கல்வித்துறை இயக்குனர், அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-
தமிழகத்தில் அனைத்து அரசு மேல்நிலைப்பள்ளிகளிலும், நான் முதல்வன் திட்டத்தின் கீழ் மாணவர்களுக்கு உயர்கல்வி வழிகாட்டு குழு வாயிலாக தேவையான வழிகாட்டுதல்கள் வழங்கப்படுகின்றன. இந்த நிலையில், 2024-25-ம் கல்வியாண்டுக்கான உயர்கல்வி வழிகாட்டி குழு உறுப்பினர்களுக்கு பயிற்சிகள் வழங்க திட்டமிடப்பட்டு உள்ளது. முன்னதாக, உயர்கல்வி வழிகாட்டு குழு உறுப்பினர்களுக்கு பயிற்சிகள் வழங்கும், மாவட்ட கருத்தாளர்களுக்கான பயிற்சி, வருகிற 29, 30-ந்தேதிகளில் கொடைக்கானலில் உள்ள அன்னை தெரசா பெண்கள் பல்கலைக்கழகத்தில் நடைபெறும். மாநில கருத்தாளர்கள், மாவட்ட கருத்தாளர்களுக்கு தேவையான வழிகாட்டுதல்களையும், பயிற்சிகளையும் வழங்குவர்.
அதன்பிறகு, உயர்கல்வி வழிகாட்டுதல் குழுவுக்கான பயிற்சி, வருகிற மே 2-ந்தேதி முதல் 10-ந்தேதி வரை அந்தந்த மாவட்டங்களில் நடத்தப்படும். இவர்களுக்கு, மாவட்ட கருத்தாளர்கள் மாணவர்களுக்கான உயர்கல்வி வழிகாட்டுதல் தொடர்பான பயிற்சிகளை வழங்குவர். பயிற்சிகள் அந்தந்த மாவட்டங்களில் முறையாக நடைபெறுவதை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் உறுதி செய்ய வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Friday, April 26, 2024
New
அரசு மேல்நிலைப்பள்ளிகளில் பணியாற்றும் உயர்கல்வி வழிகாட்டுதல் குழு உறுப்பினர்களுக்கு பயிற்சி
About BANUMATHI V
Templatesyard is a blogger resources site is a provider of high quality blogger template with premium looking layout and robust design. The main mission of templatesyard is to provide the best quality blogger templates.
TRAINING
Labels:
TRAINING
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment