மன அழுத்த–மும்... மனச்சோர்வும்...! Stress – and… depression…! - துளிர்கல்வி

Latest

Saturday, June 8, 2024

மன அழுத்த–மும்... மனச்சோர்வும்...! Stress – and… depression…!

கடும் போட்டி நிறைந்த இன்றைய சூழலில் மனிதர்களிடம் மன அழுத்த பாதிப்பு அதிகமாக காணப்படுகிறது. உடல்சார்ந்த 90 சதவீத நோய்கள் மன அழுத்தம் காரணமாக ஏற்படுவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. குறிப்பாக, இதய நோய்களுக்கு மன அழுத்தம் பெருமளவு காரணமாகி்ன்றன. மன அழுத்தம் ரத்த நாளங்களை சுருக்கி, ரத்த அழுத்தத்தை அதிகரிக்கச் செய்கிறது. இதயத்துடிப்பை அதிகரித்து, இதயத்தின் வேலைப்பளுவையும் அதிகரிக்கிறது. மன அழுத்தம் கெட்ட கொழுப்பின் அளவை அதிகரிக்கவும், நல்ல கொழுப்பின் அளவை குறைக்கவும் செய்யும். இதனால், ஒன்றன்பின் ஒன்றாக உடலின் அனைத்து முக்கிய உறுப்புகளும் பழுதடைகின்றன. மாரடைப்புக்கு 34 சதவீதமும், பக்கவாதம் ஏற்பட 75 சதவீதமும் காரணம் மன அழுத்தம்தான் என்கிறார்கள், டாக்டர்கள். இந்தியாவில் இளைஞர்களிடையே மனநலப் பிரச்சினைகள் அதிகரித்து வருகின்றன என ஆய்வுகள் கூறுகின்றன. இன்டர்நேஷனல் ஜர்னல் ஆப் மென்டல் ஹெல்த் சிஸ்டம்ஸ் என்ற அமைப்பின் ஆய்வின்படி, 13 முதல் 17 வயதுடைய சிறுவர்களில் 7.3 சதவீதம் பேர் மனநலப் பிரச்சினைகளால் பாதிக்கப்படுகின்றனர் என்று புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. மன அழுத்தம்தான் நாளடைவில் மனச்சோர்வாக மாறுகிறது. மன அழுத்த–மும்... மனச்சோர்வும்...! Stress – and… depression…! மன அழுத்தம் என்பது தற்காலிகமானது, சூழ்நிலைகளுக்கு ஏற்றவாறு உருவாகக்கூடியது. உதாரணமாக தேர்வில் குறைவான மதிப்பெண் பெறுவது, அலுவலகத்தில் குறித்த நேரத்திற்குள் வேலையை முடிக்க திணறுவது, பொருளாதார நெருக்கடியில் சிக்கிக்கொள்வது போன்ற சூழ்நிலைகளில் ஏற்படுவது மன அழுத்தம். நாள்பட்ட மன அழுத்தம் ஒரு கட்டத்தில் மனச்சோர்வாக மாறிவிடும். ஆனால் மனச்சோர்வு பாதிப்பு நீண்ட காலம் நீடிக்கும் என்கிறார்கள் உளவியலாளர்கள். தூக்கமின்மை, அதீத சோர்வு, வெறுப்பு மனநிலை, வேலைகளில் ஆர்வமின்மை, குற்ற உணர்வு, முடிவெடுப்பதில் சிரமம், சமூக உறவுகளில் இருந்து விலகி இருப்பது போன்ற அடையாளங்கள் மனச்சோர்வின் அறிகுறிகள். மன அழுத்தத்தில் இருந்து விடுபட உங்கள் நலனில் அக்கறை கொண்ட ஒருவரிடம் பிரச்சினைகளை மனம்விட்டு பேசலாம். மது, சிகரெட் பழக்கத்தால் மன அழுத்தம் மேலும் அதிகரிக்கும். எனவே இவற்றை நிறுத்துவது நல்லது. எல்லாவற்றையும்விட எதனால் மன அழுத்தம் ஏற்படுகிறது என்பதை கண்டறிந்து அதனை தடுத்து நிறுத்த சரியான தீர்வை தேடுங்கள். எதுவும் கடந்து போகும் என்பதே உளவியல் நிபுணர்கள் கருத்து.

No comments:

Post a Comment