பள்ளிகளுக்கான காலாண்டு தேர்வு அட்டவணை வெளியீடு! - துளிர்கல்வி

Latest

Tuesday, September 10, 2024

பள்ளிகளுக்கான காலாண்டு தேர்வு அட்டவணை வெளியீடு!

தமிழக பள்ளிக்கல்வித்துறை சார்பில் ஒவ்வொரு ஆண்டும் கல்வியாண்டு அட்டவணை வெளியிடப்படுவது வழக்கம். அந்த வகையில் பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் கண்ணப்பன், அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், ‘பள்ளி மாணவர்களுக்கான காலாண்டு தேர்வு அட்டவணை வெளியிடப்படுகிறது. 

அந்த வகையில், 6-ம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு செப்டம்பர் 20-ந் தேதி தொடங்கி 27-ந் தேதி வரை காலாண்டு தேர்வுகள் நடைபெறும். 

பிளஸ்-1, பிளஸ்-2 மாணவர்களுக்கான காலாண்டு தேர்வுகள் செப்டம்பர் 19-ந் தேதி தொடங்கி 27-ந் தேதி வரை நடைபெறும்' என கூறப்பட்டு உள்ளது. இதனைத் தொடர்ந்து, செப்டம்பர் 28-ந் தேதி முதல் அக்டோபர் 2-ந் தேதி (காந்தி ஜெயந்தி) வரை மாணவர்களுக்கு காலாண்டு விடுமுறை வழங்கப்படுகிறது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment