ராணுவ கல்லூரியில் சேர விண்ணப்பிக்கலாம் - துளிர்கல்வி

Latest

Friday, September 13, 2024

ராணுவ கல்லூரியில் சேர விண்ணப்பிக்கலாம்

ராணுவ கல்லூரியில் சேர விண்ணப்பிக்கலாம் 



ராஷ்ட்ரிய இந்திய ராணுவக் கல்லூரியில் 8-ம் வகுப்பு சேர்வதற்கு வரும் செப்.30-ம், தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் தெ.பாஸ்கர பாண்டியன் தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து அவர் வெளி யிட்டுள்ள செய்திக்குறிப்பில், "ராஷ்ட்ரிய இந்திய ராணுவக் கல்லூரியில் 2025-ம் ஆண்டு ஜூலை பருவத்தில் 8-ம் வகுப்புக்கு மாணவர்கள், மாணவிகள் சேர்க்கை நடைபெற உள்ளது. இதற்கான தேர்வு, வரும் டிசம்பர் 1-ம் தேதி நடைபெற உள்ளது. 

இதற்கான விண்ணப் பப் படிவத்தை www.rimc.gov. in என்ற இணையதளத்தில் செலுத்துவதன் கட்டணம் மூலமாகவும் அல்லது கமாண் டன்ட் ராஷ்ட்ரிய இந்திய ராணுவக் கல்லூரி, கர்ஹிகான்ட், டேராடுன், உத்தரகாண்ட் 248003 என்ற முகவரிக்கு வரைவோலை அனுப்புவதன் மூலமாகவோ படிவத்தைப் பெற்று பூர்த்தி செய்து வரும் செப்.30-ம் தேதி மாலை 5.45 மணிக்குள் தமிழ்நாடு அரசு தேர்வாணைய முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும். 

விண்ணப்பக் கட்டணம் மற்றும் கூடுதல் தகவலுக்கு www.rimc.gov.in என்ற இணையதள முகவரியில் தெரிந்து கொள்ளலாம்" என தெரிவித்துள்ளார். 

No comments:

Post a Comment