சுற்றுச்சூழல் காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறை அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் திருமதி சுப்ரியா சாஹு இ.ஆ.ப. அவர்கள் தமிழ்நாடு பசுமை இயக்க தினமான இன்று கிண்டி சிறுவர் இயற்கை பூங்காவில் நாவல் மரக்கன்றுகளை நடும் பணியினை தொடங்கி வைத்து "சங்க இலக்கிய மரங்களின் சிற்றேடு" மற்றும் "நகர்ப்புற வனவியல் கையேடு" ஆகிய இரு வெளியீடுகளை வெளியிட்டார்கள்.
தமிழ்நாடு பசுமை இயக்க தினமான இன்று (24.09.2025) பிரதான செடியான நாவல் மரக்கன்றுகள் நடும் பணியினை சுற்றுச்சூழல் காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறை அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் திருமதி சுப்ரியா சாஹு இ.ஆ.ப. அவர்கள் கிண்டி சிறுவர் இயற்கை பூங்காவில் தொடங்கி வைத்தார்.
தமிழநாடு அரசு. தமிழ்நாட்டின் காடு மற்றும் மரங்களின் புவியியல் பரப்பளவை தற்போதைய நிலையில் உள்ள 23.8% லிருந்து 33% ஆக அதிகரிக்கும் நோக்கத்துடன், அரசு ஆணை (எம்.எஸ்) எண். 126. சுற்றுச்சூழல் காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறை நாள். 09.12.2021 அன்று தமிழ்நாடு பசுமை இயக்கம் தொடங்கப்பட்டது இதன் முக்கிய நோக்கமானது 2030-31 ஆம் ஆண்டிற்குள் சுமார் 265 கோடி பூர்வீக நாட்டு இன மரக்கன்றுகளை சுமார் 13,500 ச.கி.மீ பரப்பளவில் நடுவதே ஆகும். மேலும் இவ்வியக்கத்தின் மூலம், பல்லுயிர் பெருக்கத்தை மேம்படுத்துதல். வன உற்பத்தித்திறனை மேம்படுத்துதல், சதுப்புநிலப்பரப்பை விரிவுபடுத்துதல் மாநில நெடுஞ்சாலைகள் மற்றும் தேசிய நெடுஞ்சாலைகள் மூலம் சாலையோரங்களில் நடவு செய்தல், விவசாய நிலங்களில் மரங்கள் வளர்ப்பதை ஊக்குவித்தல், நகர்ப்புற மற்றும் புறநகர் நிலப்பரப்புகளில் பசுமை பரப்பினை அதிகரித்தல், கல்வி நிறுவனங்கள், கோவில்கள். மைதானங்கள். புனித ஸ்தலங்கள், தொழிற்சாலை நிறுவனங்கள், கண்மாய் பகுதிகள், படுகை பகுதிகள் மற்றும் உள்ளூர் சமூகங்களை மேம்படுத்தும் பொருட்டு வேலை வாய்ப்புகள் வழங்குதல் போன்றவற்றில் இத்திட்டம் கவனம் செலுத்துகிறது. அதே நேரத்தில் விவசாயிகளின் வருவாயினை அதிகரிக்கவும் வழிவகைகள் செய்து வருகிறது.
பசுமை தமிழ்நாடு இயக்கம் மூலம் தமிழ்நாடு முழுவதும் சுமார் 10.86 கோடி மரக்கன்றுகளை நடவு செய்யப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ்
313 நாற்றாங்கால் பண்ணைகள் உருவாக்கப்ட்டுள்ளது. அத்துடன் 5 உயர்
தொழில்நுட்ப நாற்றங்கால் பண்ணைகள் உருவாக்கப்பட்டுள்ளது
ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் துறையின் கீழ், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்ட ஒருங்கிணைப்பு மூலம் 1.045 நாற்றங்கால் மையங்கள் உருவாக்கப்பட்டுள்ளன.
கிராமப்புறங்களில் பசுமையான பொழுதுபோக்கு இடங்களாகச் செயல்படுவதற்கும் பல்லுயிர் பெருக்கத்தை பெருக்குவதற்கும் 88 "மரகத பூஞ்சோலைகள்" (பல்லுயிர் வனப்பகுதிகள்) உருவாக்கப்பட்டுள்ளது. 24 சதுர கி.மீ பரப்பளவில் புதிய சதுப்புநிலங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. மேலும் 12 சதுர கி.மீ பரப்பளவில் தரங்குன்றிய சதுப்புநிலங்கள் மீட்டெடுக்கப்பட்டுள்ளன.
நமது மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால், பூர்வீக மரங்களை நட்டு வளர்க்கபவும். மரக்கன்றுகள் நடுவதற்கு பொதுமக்களை ஊக்குவிக்கவும். தமிழ்நாடு பசுமை இயக்கம் என்ற மாபெரும் திட்டம் 24.09.2022 அன்று சென்னை வண்டலூர் உயிரியல் பூங்காவில் தொடங்கி வைக்கப்பட்டது. இத்திட்டம் தொடங்கியதிலிருந்து மரக்கன்றுகள் பரப்பினை அதிகரித்தல். பல்லுயிர் பெருக்கத்தை வலுப்படுத்துதல் மற்றும் மாநிலம் முழுவதும் மரக்கன்றுகள் நடும் மக்களின் பங்களிப்பை ஊக்குவித்தல் போன்றவற்றிற்காக ஆண்டுதோறும் செப்டம்பர் 24 ஆம் தேதியினை தமிழ்நாடு பசுமை இயக்க தினமாக " கடைப்பிடிக்கப்படுகிறது.
2025-26 ஆம் ஆண்டில் சுமார் 12.65 கோடி மரக்கன்றுகளை நடுவதற்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ் 2025 ஆம் ஆண்டில் முதன்மை இனமான "நாவல் மரம் (Syzygium cumini) தெரிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி தமிழ்நாடு பசுமை இயக்க தினமான இன்று பிரதான செடியான நாவல் மரக்கன்றுகள் வனத்துறை மூலம் சுமார் 1.5 இலட்சம் நாவல் செடிகள் நடவு செய்யப்படவுள்ளது.
அதனை முன்னிட்டு சுற்றுச்சூழல் காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் திருமதி. சுப்ரியா சாஹுஇ.ஆ.ப., அவர்கள் கிண்டி சிறுவர் இயற்கை பூங்காவில் மரம் நடும் பணியினை இன்று தொடங்கி வைத்தார். சுமார் 50 பழம் தரும் மரக்கன்றுகளை நட்டு." இலக்கிய மரங்களின் சிற்றேடு" மற்றும்" நகர்ப்புற வனவியல் கையேடு" ஆகிய இரு வெளியீடுகளையும் வெளியிட்டார். சங்க
இந்நிகழ்ச்சியில் PCCF (HoFF) திரு ஸ்ரீனிவாஸ் ஆர். ரெட்டி. இ.வ.ப. PCCF &CWLW திரு. ராகேஷ் குமார் டோக்ரா, இ.வ.ப. முதன்மை தலைமை வனப்பாதுகாவலர் ( ஆராய்ச்சி மற்றும் கல்வி)மற்றும் பசுமை தமிழ்நாடு இயக்கம் கூடுதல் முதன்மை தலைமை வனப்பாதுகாவலர் மற்றும் தலைமை இயக்குநர் திரு. ஐ. அன்வர்தீன், இ.வ.ப. வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா CCF மற்றும் இயக்குநர் திரு டி. ரிட்டோசிரியாக், இ.வ.ப. சென்னை மண்டல வனப்பாதுகாவலர் திரு.சு. ந. தேஜஸ்வி, இ.வ.ப.
வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா துணை இயக்குநர் திரு. மணீஸ் மீனா இ.வ.ப. இணை இயக்குநர் திருமதி த. தமிழ்மொழி அமுது மற்றும் வனத்துறை உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment