இரண்டு சிறுகதைகள் : முடியாது ராசா மற்றும் அப்பாவித் தம்பி - ThulirKalvi

Latest

Search Here!

Friday, June 26, 2020

இரண்டு சிறுகதைகள் : முடியாது ராசா மற்றும் அப்பாவித் தம்பி

இரண்டு சிறுகதைகள் : முடியாது ராசா மற்றும் அப்பாவித் தம்பி


1. அப்பாவி தம்பி 


ஒரு ஊரில் ஒரு அண்ணன் தம்பி. 

அண்ணன் வஞ்சகன் தம்பி அப்பாவி.

அண்ணன் சொத்துப் பிரித்தான்.


மாடிவிடு,  பசுமாடு,  இதையெல்லாம் அண்ணன் எடுத்துக்கொண்டான்.

ஓட்டு வீடு,  ஒரு கண்ணு குட்டி,  இதையெல்லாம் தம்பிக்கு தந்தான்.

பாவம் தம்பி!  மறுபேச்சுப் பேசவில்லை,  வாங்கிக்கொண்டான்.

ஒரு வாரம் கடந்தது, கண்ணு குட்டி செத்தது.  தம்பி அழுதான் பின்பு அதன் தோலை உரித்தான். 

அதில் ஒரு தப்பு செய்தான். தப்பை எடுத்துகிட்டு சந்தைக்கு வந்தான். இருட்டிவிட்டது ஒரு மரத்தில் ஏறி தூங்கினான்.

நடுச்சாமம் சில திருடர்கள் வந்தார்கள், மரத்தின் அடியில் உட்கார்ந்தார்கள் திருடிய நகைகளை பங்கு பிரித்தார்கள், அந்த நேரம் தம்பியின் தப்பு மரத்தில் இருந்து கீழே விழுந்தது, ஒவ்வொரு கொம்பிலும் பட்டது.

டம் டம் டம் டம் என்று பெரிய சத்தம் கடைசியில் மடார் என்று திருடர்கள் தலையில் விழுந்தது 

அவ்வளவுதான்  "பிசாசு, பூதம்"  என்று திருடர்கள் கத்தினார்கள் 

"ஓட்டம் பிடித்தார்கள்" 

சத்தம் கேட்டு தம்பி முழித்தான். மரத்திலிருந்து கீழே வந்தான்.  நகைகளை மூட்டை கட்டினான். 

வீட்டுக்கு வந்தான். 

தன் மனைவியிடம் நடந்ததைச் சொன்னான். தம்பியும் அவன் மனைவியும் வீட்டை மராமத்து பார்த்தார்கள். 

"வீட்டில் தினமும் உலைக் கொதித்தது" 

அண்ணன் பார்த்தான்,  அவனுக்கு தம்பி மீது சந்தேகம்.

ஏது பவுசு கூடிப்போச்சு?  என்ன ஏது? என்று விசாரித்தான் 

தம்பி நடந்ததை எல்லாம் சொன்னான். 

அண்ணனுக்கு ஆசை விடல. 

அண்ணன் ஒரு தப்பு செய்தான். 

சந்தைக்கு நடந்தான்.  தம்பி சொன்ன அந்த மரத்தில் படுத்தான். 

நடுச்சாமம் திருடர்கள் வந்தார்கள்.  அண்ணன் தன் தப்பை கீழே விட்டான்.  

 "டமார் கீழே விழுந்தது"

"திருடர்கள் ஓடவில்லை" 

அன்று நாம் ஏமாந்து விட்டோம். எவனோ நகைகள் எல்லாம் சுருட்டிக் கொண்டு ஓடிவிட்டான். இன்று நாம் விடக்கூடாது என்று மரத்தில் ஏறினார்கள் 

அண்ணனை பிடித்தார்கள் 


அடி பின்னி எடுத்து விட்டார்கள்.




2. முடியாது ராசா 


தம்பு என்று ஒரு அரசன் இருந்தான் 

அவன் பொல்லாதவன் 

கொடுமைக்காரன் 

ஜனங்கள் மீது வரிக்கு மேல் வரி போட்டான்

பாவம் ஜனங்கள் கொடுத்துவிட்டார்கள் வரி கொடுத்த ஓய்ந்துவிட்டார்கள்
வசூல்காரன் வந்தால்  ஓடி ஒளிந்தார்கள் 

தம்பு ராசாவுக்கு உறவினர்கள் பலர் 

ஆளுக்கு ஒரு தேசத்தை ஆண்டார்கள் 

நான் முந்தி நீ முந்தி என்று வரி போட்டார்கள் 

தம்புராவின் அப்பன் மற்றும் பாட்டனும் அப்படித்தான் கொடுமைக்கார ராசாக்கள் 

ஒரு ஏழை சம்சாரி

 அவனால் வரி கட்ட முடியவில்லை

ராசாவிடம் முறையிட்டான்

ராசா நாட்டில் மழை தண்ணி இல்ல வெள்ளாமை கருகி கிடக்கு நாலு காசு சேர்க்க நாய் படாதபாடாய்  இருக்கு 

இப்படி வரிக்கு மேல் வரி போட வேண்டாம் முழி பிதுங்கி போகுது என்றான் சம்சாரி 

தம்புராசாவுக்கு இரக்கமில்லை

 வரி கட்டித்தான் ஆகனும் கண்டிப்பாக சொன்னான் 

ராசா என்னிடம் சல்லிக்காசு இல்லை என்றால் சம்சாரி 

அப்படியா இனி நீ எங்க இருக்க கூடாது என்றான் அரசன் 

நான் எங்கு போவேன் ராசா 

நீ விரும்பும் தேசத்துக்குப் போ 

எனக்கு இப்படி ஒரு கதியா 

சரி ராஜா நீங்களே ஒரே சொல்லுங்கள் 

நீ ரத்தனபுரிக்குப் போ 

ஐயோ நான் மாட்டேன் ராசா 

அங்கே உன் சித்தப்பா ஆட்சி நடக்கிறது 

சரி சந்திரபுரிக்குப் போ மாட்டேன் 

மாட்டேன் அங்கே உங்க மாமா ஆட்சி நடக்கிறது 

மருங்காபுரிக்குப் போ

முடியாது அங்கே உங்க தம்பி ஆட்சி நடக்குது என்றான் சம்சாரி 

தம்பு ராசாவுக்கு பொல்லாத கோபம் அடங்காத பயன் இவன என்ன செய்யலாம் என்று யோசித்தான் 

நாசமா போ  நரகத்திற்குப் போ இப்படி அரசின் கூப்பாடு போட்டான்

 ராசா அங்கே போகவும் முடியாது நரகத்துக்குப் போனா உங்க அப்பா அங்கே தான் இருக்கிறார் என்றான் சம்சாரி


அப்பாவி தம்பி 

ஒரு ஊரில் ஒரு அண்ணன் தம்பி அண்ணன் வஞ்சகன் தம்பி அப்பாவி மாறிவிடு பசுமாடு இதையெல்லாம் எடுத்துக்கொண்டான் ஓட்டு வீடு ஒரு கண்ணு குட்டி இதையெல்லாம் தம்பிக்கு தந்தான் பாவம் தம்பி மறுபேச்சுப் பேசவில்லை வாங்கிக்கொண்டான் ஒரு வாரம் கடந்தது கண்ணு குட்டி செத்தது தம்பி அழுதான் பின்பு அதன் தோலை உரித்தாள் அதில் ஒரு தப்பு செய்தான் தப்பை எடுத்துகிட்டு சண்டைக்கு வந்தான் இருட்டிவிட்டது ஒரு மரத்தில் தூங்கினான் நடுச்சாமம் சில திருடர்கள் வந்தார்கள் மரத்தின் அடியில் உட்கார்ந்தார்கள் திருடிய நகைகளை பங்கு பிரித்தார்கள் அந்த நேரம் தம்பியின் தப்பு மரத்தில் இருந்து கீழே விழுந்தது ஒவ்வொரு கோவிலிலும் பட்டது [10:58 pm, 26/06/2020] Miller Daddy: டம் டம் டம் டம் என்று பெரிய சத்தம் கடைசியில் மடார் என்று திருடர்கள் தலையில் விழுந்தது அவ்வளவுதான் பிசாசு பூதம் என்று திருடர்கள் கத்தினார்கள் ஓட்டம் பிடித்தார்கள் சத்தம் கேட்டு தம்பி முழித்தான் மரத்திலிருந்து கீழே விழுந்தால் நகைகளை மூட்டை கட்டினார் வீட்டுக்கு வந்தான் தன் மனைவியிடம் நடந்ததைச் சொன்னான் தம்பியும் அவன் மனைவியும் வீட்டை மராமத்து பார்த்தார்கள் வீட்டில் தினமும் உன்னை கொதித்தது அண்ணன் பார்த்தால் அவனுக்கு தம்பி மீது சந்தேகம் எது பவுசு கூடிப்போச்சு என்ன ஏது என்று விசாரித்தான் தம்பி நடந்ததை எல்லாம் சொன்னான் அண்ணனுக்கு ஆசை விடல அண்ணன் ஒரு தப்பு செய்தால் சந்தைக்கு நடந்தான் தம்பி சொன்ன அந்த மரத்தில் படுத்தான் நடுச்சாமம் திருடர்கள் வந்தார்கள் அண்ணன் தன் தப்பை கீழே விட்டான் என்று கீழே விழுந்தது திருடர்கள் ஓடவில்லை அன்று நாம் ஏமாந்து விட்டோம் எவனோ நகைகள் எல்லாம் சுருட்டிக் கொண்டு ஓடிவிட்டான் என்று நாம் விடக்கூடாது என்று மரத்தில் ஏறினார்கள் அண்ணனை பிடித்தார்கள் அடி பின்னி எடுத்தார்கள் அடி பின்னி எடுத்து விட்டார்கள்