மறைவான இடத்தில் உள்ள இணிப்புகளை எறும்புகள் எப்படி கண்டறிகின்றன? - ThulirKalvi

Latest

Search Here!

Sunday, June 28, 2020

மறைவான இடத்தில் உள்ள இணிப்புகளை எறும்புகள் எப்படி கண்டறிகின்றன?

1. மறைவான இடத்தில் உள்ள இணிப்புகளை எறும்புகள் எப்படி கண்டறிகின்றன?



எறும்புகளின் தலையில் அமைந்துள்ள இரண்டு கொம்பு போன்ற உறுப்புகளே அவை இனிப்புகளை கண்டறிய உதவுகின்றன. அவ்விரண்டு கொம்புகளிலும் அமைந்துள்ள சின்சில்லா (Sencilla or Sensory Cells) என்னும் மெல்லிய செல்கள் உணவில் இருந்து வெளிப்படும் மெல்லிய வாசனையை அறிந்து கொள்கின்றன.

நாம் எழுத்துக்களை காகிதத்தில் வேறு பாத்திரங்களில் மறைத்து வைத்தாலும் அவற்றில் மெல்லிய துளைகள் காணப்படுகின்றன அதன் வழியே வெளிவரும் இனிப்பின் வாசனையை எறும்புகளின்  தலையிலுள்ள கொம்புகள் அறிந்து, இனிப்பின் இருப்பிடத்தை எளிதாக கண்டு கொள்கின்றன. எறுப்புகளின் தலையிலுள்ள இரு கொம்புகளும் சிதைந்து போனால் மறைத்து வைக்கப்பட்டுள்ள இனிப்புகளை எறும்புகளால் இனம் கண்டு கொள்ள இயலாது.

2. நாம் வேகமாக ஓடும்போது கடிகார சுற்றிற்கு (anti-clockwise) எதிர் சுற்றாக ஏன் ஓடுகிறோம்?


பொதுவாக மனிதன் மற்றும் பிற உயிரினங்களின் இதயம் உடலின் இடது புறம் அமைந்துள்ளது.  இதயம் துடிப்பதாலேயே உடலிலுள்ள மற்ற பாகங்களின் ரத்தம் ரத்தக் குழாய்களின் வழியே இதயத்திற்கு அனுப்பப்படுகிறது.  இவ்வாறு இதயத்திற்கு பாயும் ரத்தம் இடமிருந்து வலமாக பாய்கிறது. 

 நாம் வலமிருந்து இடமாக சாய்ந்து ஓடும் போது உடலில் ஏற்படும் மையநோக்கு விசை (Centrifugal force) ரத்தம் இதயத்திற்கு பாய்வதற்கு சாதகமாக அமைகிறது. எனவே, அனிச்சையாகவே  மனிதன் மற்றும் விலங்குகள்  வலமிருந்து இடமாக ஓடுகின்றன.  உடலில் உடலியலாளர்களும் அவ்வாறு ஓடுவதையே வலியுறுத்துகிறார்கள். 

அதன் காரணமாகவே ஓட்டப்பந்தய ஓடுகளம், சர்க்கஸில் விலங்குகள் ஓடுகளம்,  வண்டிகள் செல்லும் பாதை போன்றவை பெரும்பாலும் வலமிருந்து இடமாக செல்வதாக அமைக்கப்பட்டது. கோபுரங்களில் உள்ள படிக்கட்டுகளும் வலமிருந்து இடமாக மேலே ஏறி செல்வது போல் அமைக்கப்பட்டிருக்கும். மனிதர்கள் குறிப்பாக குழந்தைகள் இடமிருந்து வலமாக ஓடினாலோ, படியேறிச் சென்றாலோ விரைவிலேயே களைப்படைவார்கள்.

3. ஆக்ஸிஜன் இல்லாமல் மனிதன் எவ்வளவு நாட்கள் உயிர் வாழ முடியுமா? 


ஆக்ஸிஜன் இல்லாமல் ஒரு மனிதன் சில நிமிடங்களே உயிர் வாழ முடியும்.
காரணம் ஆக்ஸிஜன் இல்லாமல் மனித மூளையால் செயல்பட முடியாது. நாம் சுவாசிக்கும்போது உள்ளே செல்லும் ஆக்சிஜனின் சுமார் 20 சதவீதம் ஆக்சிஜனை பயன்படுத்துகிறது.

 சுமார் 8 முதல் 10 வினாடிகள் மூளைக்கு ஆக்சிஜன் கிடைக்காமல் போனாலும், மனிதன் உணர்வற்ற நிலைக்கு தள்ளப்படுவான். அடுத்த சில நொடிகளில் மூளையின் செல்கள் இறந்து மனிதன் மன நிலைக்கு தள்ளப்படுகிறான்.

 இருப்பினும் மிக குறைந்த வெப்பநிலையில் மனித மூளைக்கு மிகக்குறைந்த ஆக்சிஜன் போதுமானது. காரணம் மிகக் குறைந்த வெப்பநிலையில் மூளையானது மிகக் குறைந்த ஆக்சிஜனையே உபயோகிக்கிறது. எனவே நீண்ட நேரம் நடைபெறும் அறுவை சிகிச்சைகள் மிகக் குறைந்த வெப்பநிலையில் செய்யப்படுகிறது.  காரணம் மிகக் குறைந்த ஆக்ஸிஜன் பயன்பாட்டில் அறுவை சிகிச்சையைச் செய்து முடித்துவிட இயலும். மனித மூளையை தவிர மற்ற உறுப்புகளும் சில மணி நேரம் செயல்படுகின்றன .எனவேதான் இறந்த மனிதனது மூளையைத் தவிர மற்ற சில உறுப்புகள் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்குப் பயன்படுத்தப்படுகின்றன.

4. டாக்டர்கள் சில மருந்துகளை ஏன் சாப்பாட்டிற்கு முன் என்றும், சில மருந்துகளை சாப்பாட்டிற்கு பின் என்றும் சாப்பிட அறிவுறுத்துகிறார்கள்?


பொதுவாக நாம் எடுத்துக்கொள்ளும் மருந்துகளை நமது உடல் ஏற்றுக் கொள்வதிலும், அம்மருந்துகள் இரத்தத்தில் கலக்க செய்வதிலும் நமது உணவு பெரும் பங்கு வகிக்கின்றது.   ஒரு மருந்தின் தன்மையை பொறுத்தே மருத்துவர் சில மருந்துகளை சாப்பாட்டிற்கு முன் சாப்பிடவும், சில மருந்துகளை சாப்பாட்டுக்கு பின் சாப்பிடவும் அறிவுறுத்துகிறார்.

 சில மருந்துகளை நாம் உட்கொண்டதும் அவை நமது வயிற்றில் அமிலத்தை சுரக்கச் செய்து வயிற்றில் பிரச்சனை, நெஞ்செரிச்சல் போன்றவற்றை உண்டாக்குகின்றன சில மருந்துகள் வாந்தி உணர்வை உண்டாக்குகிறது.

இம்மாதிரி மருந்துகள் சாப்பாட்டிற்குப் பிறகு சாப்பிடவே மருத்துவர்களால் அறிவுறுத்தப்படுகிறது. 

 இது போல மாத்திரைகளை பெரும்பாலும் வெது வெதுப்பான நீரை அருந்தி மட்டுமே உட்கொள்ளவும் அறிவுறுத்தப்படுகிறது. காரணம் தேநீர் காபி போன்றவை சில மாத்திரைகளோடு இரசாயான மாற்றம் அடைந்து  உடலுக்குச் சில பக்க விளைவுகளை ஏற்படுத்தலாம்.

சில மருந்துகள்  வெறும் வயிற்றில் சாப்பிட்டாலும் நெஞ்சு எரிச்சல், வாந்தி உணர்வு போன்ற பக்கவிளைவுகளை தராது என்னும் நிலையில் சாப்பாட்டிற்கு முன் எடுத்துக்கொள்ள அறிவுறுத்தப்படுகிறது.