மழை பெய்தவுடன் தவளை கத்துவது ஏன்? - ThulirKalvi

Latest

Search Here!

Sunday, June 28, 2020

மழை பெய்தவுடன் தவளை கத்துவது ஏன்?

1. மழை பெய்தவுடன் தவளை கத்துவது ஏன்?


பெண் தவளை உடன் கூடி இனப்பெருக்கம் செய்ய ஆண் தவளை எழுப்பும் அழைப்பு ஒலி தான் இந்த கத்தல.  முதிர்ச்சி அடைந்த ஆண் தவளையின் இரு தாடைகள் சந்திக்கும் இடத்திற்கு சற்று கீழே லேசான கருப்பு நிறத்தில் காணப்படும் குரல் பை (Vocal Sac) காணப்படும்.

மழை பெய்து குளம் குட்டைகளில் நீர் தேங்கியதும் ஆண் தவளை குரலெழுப்பி பெண் தவளை முட்டையிட கூப்பிடும்.  தவளைகள் ஆண்டுக்கு ஒரு முறை இனப்பெருக்கம் செய்கின்றன.


2. விலங்கினங்களின் கழிவு எவ்வாறு  உரமாகிறது?


விலங்கினங்களின் கழிவு மட்டுமல்ல அனைத்து உயிரினங்களின் கழிவுகளும் உரமாக மாறும் தன்மை உடையன.  கழிவு என்பது உடல் எடுத்துக் கொண்டபின் வெளியேற்றப்படும் பொருட்களே.  இவை அனைத்திலும் கரி, ஹைட்ரஜன், ஆக்சிஜன், நைட்ரஜன் ஆகிய அடிப்படை பொருள்களும் தாதுப்புக்களும் இருக்கின்றன.  இவை மண்ணில் கலக்கும்போது பாக்டீரியாக்களால் சிதைக்கப்பட்டு உரமாகின்றன,


3. தமனிக்கும் சிரைக்கும் உள்ள வேறுபாடுகள் யாவை?


இதயத்திலிருந்து உடலின் பல பகுதிகளுக்கு இரத்தத்தை எடுத்துச் செல்லும் இரத்தக் குழாய்களுக்கு தமனி என்றும் உடலின் பகுதிகளிலிருந்து ரத்தத்தை கொண்டு வந்து இதயத்தில் சேர்க்கும் ரத்தக் குழாய்கள் சிரைகள் என்றும் பெயர்.

 பொதுவாக தமிழில் சுத்தம் செய்யப்பட்ட ரத்தத்தையும் சிறைகள் அசுத்த ரத்தத்தை எடுத்துச் செல்லும்.  ஆனால் நுரையீரல் தமனி,  நுரையீரல் சிரை மட்டும் வேறுபட்டவை.  நுரையீரல் தமனி சுத்தம் செய்வதற்காக ரத்தத்தை நுரையீரலுக்கும் அங்கிருந்து சுத்தம் செய்யப்பட்ட ரத்தத்தை  நுரையீரல் சிரை இதயத்திற்கும் கொண்டு வருகின்றன. தமனிகளின் குழாய் சிரைகள்  சற்று பருமனாகவும் சுருங்கி விரியும் தன்மை பெற்றவை.  இவை உடலின் தசை பகுதியில் புதைந்து காணப்படும்.  சிரைகள் மெல்லிய சுவரை பெற்றவை. நீள்தன்மை தன்மை அற்றவை.  இவை உடலின் மேற்புறத்தில் தோல் பகுதிக்கு சற்று கீழே காணப்படும்.  நம் புறங்கை கால்களில் காணப்படும் சிரைகளை தான் நாம் "பச்சை நரம்பு"  என்று குறிப்பிடுகிறோம்


4. திமிலங்கத்தின் எடை எவ்வளவு யானையின் எடை எவ்வளவு?


நீரில் வாழும் விலங்குகளில் மிகப் பெரியது நீலத்திமிங்கலம் ஆகும்.  நிலத்தில் வாழும் விலங்குகளில் மிகப் பெரியது யானை.  இவ்விரண்டுமே பாலூட்டி இனத்தைச் சேர்ந்தவை. யானையின் எடை 7 மெட்ரிக் டன்கள் மட்டுமே.  நீலத்திமிங்கலம் யானை போல இருபது மடங்கு எடை கொண்டது இதன் நீளம் 30 மீட்டர் வரை இருக்கும்.


5 நாம் ரயிலில் போகும்போது நம் கண்களுக்கு தந்தி கம்பிகள் ஏறி இறங்குவது போல தோன்ற காரணம் என்ன?


 இருப்புப் பாதையை ஒட்டி நடப்படும் தந்தி கம்பங்கள் அனைத்தும் ஒரே தளத்தில் அமைவதில்லை.  சில மேட்டுப் பகுதிகளிலும், சில  தாழ்வான பகுதிகளிலும் அமைகின்றன.  எனவே தந்தி கம்பங்களின் உயரம்  சமமாக இருப்பினும் அவற்றை இணைக்கும் கம்பிகள் ஒன்றுக்கொன்று ஏறியோ இறங்கியோ அமைகின்றன.

 இதனால் ஒரே தளத்தில் உள்ள இருப்புப்பாதை மீது செல்லும் ரயில் வண்டியின் உள்ளே இருந்து பார்க்கும்போது தந்திக் கம்பிகள் ஏறி இறங்குவது போலத் தோன்றுகின்றன.




6. காந்தத்தை துண்டாக்கும் போது துண்டாகும் காந்தங்கள் ஒன்றையொன்று ஈப்பது ஏன்?


ஒரு காந்தத்தில் ஒரு முனை வட துருவமாகவும் மறுமுனை தென்துருவமாகவும் இருக்கும்.  காந்தப் பொருளின் அணுக்கள்  ஒவ்வொன்றும் ஒரு காந்தம் தான்.  ஒரு காந்தத்தை துண்டாக்கும்கும்போது முறிந்த பரப்பின் ஒரு துண்டில் தென்துருவம் இருந்தால் மறு துண்டில் வட துருவம்  இருக்கும்.  இந்த துண்டுகளின் மறுமுனைகள் முறையே வடதுருவம் தென்துருவம் ஆக செயல்படும். அதனால் முறிந்த இரண்டு காந்த துண்டுகளும் ஒன்றையொன்று ஈர்க்கின்றன.