மரமஞ்சள் மற்றும் காட்டு மஞ்சள் ஆகியவற்றின் பயன்கள் என்னென்ன? - ThulirKalvi

Latest

Search Here!

Monday, June 29, 2020

மரமஞ்சள் மற்றும் காட்டு மஞ்சள் ஆகியவற்றின் பயன்கள் என்னென்ன?

மரமஞ்சள் மற்றும் காட்டு மஞ்சள் ஆகியவற்றின் பயன்கள் என்னென்ன?


மரமஞ்சள் என்ற வகை மரங்களில் இருந்து கிடைப்பதாகுவம். இதுவும் மருத்துவ குணமுள்ளது.  சரும நோய்களை குணப்படுத்த வல்லது. விஷத்தையும் முறிக்கும் அருமருந்தாகவும் பயன்படுகிறது. மர மஞ்சளை கல்லில் இழைத்து புண்களின் மீது கனமான பற்று  போட்டுவர சீக்கிரம் ஆறிவிடும். விஷம் அருந்திய தாலோ அல்லது விஷப்பூச்சி கடித்ததினாலோ உடலில் விஷம் பரவி உள்ள நிலையில், சிறுவனின் சிறுநீர் விட்டு மஞ்சளை உரைத்து உள்ளுக்குக் கொடுத்து வர விஷம் முறிந்துவிடும்.

காட்டு மஞ்சள் 


காட்டு மஞ்சள் வகைகளில் ஒன்று காட்டு மஞ்சள். இதன் பெயரில் இருந்தே தெரிந்து கொள்ளலாம். இது காடுகளில் மட்டும் காணப்படுபவை என்று. அதனால் தான் இதை காட்டு மஞ்சள் என்கின்றனர்.  இதுவும் பூண்டு இனத்தைச் சேர்ந்தது. இதுவும் மற்ற வகை மஞ்சள் நீர் போன்று மருத்துவ குணம் நிறைந்தது.  இது குணமும் என்று கூறப்படும் தீராத வயிற்று வலியைப் போக்கும் குணம் கொண்டது.

அத்துடன் வெட்டுக்காயம் ஏற்பட்டு நீண்ட நாள் ஆறாத புண்களாக இருந்தாலும் விரைவில் குணமாக்கும் தன்மை கொண்டது காட்டு மஞ்சள் .அம்மை நோயின் வீரியத்தை குறைக்க வல்லது.  வாத நோய்க்கு மருந்தாகும் உடலில் எரிச்சல் நோயை கட்டுப்படுத்த வல்லது.  காட்டு மஞ்சளைப் போன்ற இதன் இலைகளும் சிறந்த மருத்துவ குணம் கொண்டதாக திகழ்கிறது.  இதன் இலை கச்சோளத்தின் இலை போன்று காணப்படும்.  நீர் தோஷம் சாதாரண காய்ச்சல் போன்றவற்றை காட்டு மஞ்சள் செடியின் இலை மருந்தாகின்றது.  அத்துடன் உள் வலிப்பு அதிகமான வியர்வை கசிதல், எவ்வளவு தண்ணீர் அருந்தினாலும் அடங்காத தாகம், சளி போன்ற தொல்லைகளை இதன் இலை நீக்க வல்லது.

காட்டு மஞ்சள் செடியின் இலைகளை பறித்து சுத்தப்படுத்தி ஒரு பாத்திரத்தில் இட்டு ஒரு டம்ளர் நீர்விட்டு பாதியாகச் சுண்டுமளவு கஷாயமாக்கி காலை மாலை இரு வேளை வீதம் அருந்திவரலாம்.  இதனால் முன்கூறிய நோய்கள் நீங்கி குணமாகும்.  காட்டு மஞ்சள், கஸ்தூரி மஞ்சள் இரண்டையும் சம அளவு எடுத்து தூளாக்கி நீர் சேர்த்துக் குழைத்து உடம்பில் தேய்த்து  நீராடி வர எந்த வர எந்தவித சரும நோயாக இருந்தாலும் நீங்கும். அத்துடன் சருமத்திற்கு பளபளப்பையும் ஒருவித  மனத்தையும் அளிக்கும்.

சரும நோய் 


ஒரு சிலருக்கு சரும நோய் ஏற்பட்டு சதா தொல்லை கொடுத்துக்கொண்டே இருக்கும். அவர்கள் அதற்காக எத்தனையோ மருந்துகளை சாப்பிடுவதால் சரியாகாது. அரிப்பு இருந்து கொண்டே இருக்கும். அவர்கள் வேப்பந்தளிர் குப்பைமேனி இலை இரண்டையும் சம அளவு எடுத்து அத்துடன் சிறிது மஞ்சள் சேர்த்து அம்மியில் மைபோல் அரைத்து அதில் நெல்லிக்காய் அளவு எடுத்து ஒரு நாளைக்கு காலை மாலை இரு வேளை வீதம் வாயிலிட்டு அருந்தி வர குணமாகும்.  இவ்வாறு தொடர்ந்து சாப்பிட்டு வர சரும நோய் பூரணமாகக் குணமாகும்.

ஆறாத புண்ணாக இருந்தாலும் மஞ்சளுடன் வேப்பிலையைச் சேர்த்து மை போல அரைத்து தடவி வரலாம் புண் ஆறிவிடும்.  சுட்ட சீக்காயுடன் சிறிது மஞ்சள் சேர்த்து அரைத்து சிரங்குப் புண்ணில் தேய்த்துச் சுத்தப் படுத்தி வந்தால் விரைவில் ஆறிவிடும். சிறிது மஞ்சள் தூளுடன் கொஞ்சம் கற்பூரத்தையும் சேர்த்து வெந்நீரில் போட்டு கலக்கி அந்நீரை கொண்டு கண்களை சுத்தப்படுத்தி வரலாம். இது ஒரு சிறந்த கிருமி நாசினி மருந்து ஆகும். அதனால் ஆறாத புண்களாக இருந்தாலும் சீக்கிரம் குணமடையும். சுத்தப்படுத்திய புண் மீது மஞ்சள் பொடியை தூவி வரலாம். இவ்வாறு செய்ய புண் விரைவில் ஆறிவிடும், 

புண்ணுக்கு மேல்பூச்சு மருந்து 


சிரங்கு புண்ணுக்குமேல் பூச்சு மருந்து தயாரித்து வைத்துக்கொண்டால் வேண்டும்போது உபயோகித்துக்கொள்ளலாம்.  ஒரு இரும்புக் கரண்டியில் தேங்காய் எண்ணெயை எடுத்து நன்றாக காய்ச்ச வேண்டும். அதில் சிறிது மஞ்சள் தூளை போட்டு அது சிவந்து வரும் சமயம் அதில் 3 அல்லது 4 நசுக்கிய வெள்ளைப் பூண்டு பற்களைப் போட்டு மேலும் சிவக்க காய்ச்சி சூடு ஆறியபின் வடிகட்டி வைத்துக் கொண்டு தேவையான போது சிரங்கின் மீதும் புண் மீதும் பஞ்சினாலோ கோழி இறகினாலோ  தொட்டு தடவி வர விரைவில் ஆறும்.