பாதாம் பிசினின் அசத்தலான மருத்துவ பயன்கள். - துளிர்கல்வி

Latest

Saturday, July 25, 2020

பாதாம் பிசினின் அசத்தலான மருத்துவ பயன்கள்.

பாதாம் பிசினின் அசத்தலான மருத்துவ பயன்கள்.


மதுரைக்கு புகழ் சேர்க்கும் பாதாம் என்றால் அது ஜிகர்தண்டா.  இதற்கு ருசிக்கு முக்கிய காரணம் இந்த பாதாம் பிசின்தான். இந்த  ஜிகர்தண்டாவை தெரிந்த அளவிற்கு பாதாம் பிசின் பற்றி பலருக்கும் தெரியாது. உண்மையில் இயற்கை நமக்கு அளித்த அற்புதமான மருந்து உணவுகளில் இதுவும் ஒன்றாகும். பொதுவாக உடலுக்கு எந்த அளவு விட்டமின் சத்துக்கள் முக்கியமோ அதே அளவு மினரல்ஸ் எனப்படும் தாதுக்களும் மிகவும் அவசியமாகும்.  இந்த தாதுக்கள் உடலின் எலும்புகள் தோல் போன்றவற்றின் ஆரோக்கியத்திற்கு மிகவும் முக்கியமானதாகும்.  தாதுக்கள் அதிகம் உள்ள பாதாம் பிசினை அதிகம் சாப்பிட்டு வர உடலின் தாதுப் பற்றாக்குறை நீங்கி விடும். 

அடுத்து நமது நாட்டில் பெரும்பாலான காலங்களில் வெப்பம் அதிகமாக இருப்பதால் சிலருக்கு உடல் சூடு அதிகமாகி அவதிப்படுகிறார்கள்.  அதிலும் சிலருக்கு இதனால் வேறு சில உடல்நல பாதிப்புகளும் ஏற்படுகின்றன. மேலும் கோடை காலத்தில் உடலில் நீர் வறட்சி ஏற்பட்டு சிலருக்கு நீர்சுருக்கு ஏற்படும். அதே போன்று சிறுநீரக பைகளில்  அடைப்பு ஏற்பட்டு சிறுநீர் கழிக்க முடியாத நிலை உண்டாகி அவதிப்படுவார்கள்.  இதற்கு நமது முன்னோர்கள் அதிகமாக பயன்படுத்திய பாதாம் பிசின் உடலுக்கு குளிர்ச்சியைக் கொடுத்து வெப்பத்தால் ஏற்படும் பல பிரச்சனைகளை நீக்கக்கூடியது. 

இதற்கு ஊறவைத்த பாதாம் பிசினை சாப்பிட்டு வந்தால் சிறுநீர் அடைப்பு நீங்கி சிறுநீர் நன்கு பிரியும்.  மேலும் கோடை காலத்தில் ஏற்படும் நீர் வறட்சி மற்றும் நீர் சுருக்கு போன்றவையும் நீங்கும்.  

அடுத்து அசிடிட்டி சிலருக்கு அளவிற்கு அதிகமான உணவை சாப்பிடுவதாலும் இரவில் நெடுநேரம் கழித்து உணவு சாப்பிடுவதால் நெஞ்செரிச்சல் அசிடிட்டி  எனப்படும் செரிமானம் வயிற்றில் அமிலம் எனப்படும் வயிற்றில் செரிமானம் அமிலங்களில் ஏற்றத்தாழ்வுதால் உணவு சரியாக செரிமானம் ஆகாமல் இருப்பது போன்றவை ஏற்படுகிறது.  இப்படியான சமயங்களில் பாதாம் பிசினை ஊறவைத்து சாப்பிட்டு வந்தால் அசிடிட்டி நெஞ்சில் எரிச்சல்  அவை குணமாகும். மேலும் அதிக நாட்களாக  நோயால் பாதிக்கப்பட்டு கஷ்டப்பட்டு வருபவர்கள்  இந்த  பாதாம் பிசினை தண்ணீரில் ஊறவைத்து வாரத்திற்கு மூன்று முறை சாப்பிட்டு வந்தால் நோயால்,  உடல் இழந்த சக்தியை மீண்டும் உடலுக்கு தரும்

மேலும் நீண்ட கால நோயைப் போக்குவதற்கு உண்டான நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் தன்மையுடையது.  அடுத்து ஆண் மலட்டுத்தன்மை உள்ளவர்கள் தினமும் இரவு இளம் சூடான பசும் பாலில் பாதாம் பிசினை கலந்து பருகி வந்தால் உடலில் உஷ்ணம் தணிந்து நரம்புகள் வலுப்பெற்று மலட்டுத்தன்மை நீங்கும்.  மேலும் புதிதாக பிரசவம் ஆன பெண்களுக்கு வலுசக்தி அதிகம் தேவைப்படும்.  அவற்றை சாப்பிடும் பெண்களுக்கு 
உடலில் எலும்புகள் வலுப் பெறுகிறது மற்றும் கருப்பையில் குழந்தை பிறந்த பிறகு ஏற்படும் நச்சுகளையும் வெளியேற்றுகிறது.  

மேலும் பாதாம் பிசின் உடலுக்கு குளிர்ச்சியை தருகிறது.  வயிற்றுக்கு மிகவும் நல்லது. உடல் சூட்டினால் ஏற்படும் அல்சர், கண் எரிச்சல் போன்றவை குணமாகும்.  இன்று நாம் அருந்தும் பானங்கள் வெறும் கலோரிகளை கொண்டது மட்டுமே. நமது உடல் குளிர்ச்சி அடைந்த ஒரு உணர்வை கொடுத்தாலும் உண்மையில் அவை நமது உடலிலேயே உற்பத்தி இல்லை,  இதில் உடலுக்குக் கெடுதலை தவிர வேறு எந்த நன்மையும் கிடையாது.  ஆனால் நமது முன்னோர்கள் அதிகமாக பயன்படுத்திய பாதாம்பிசின் ஒரு சிறந்த குளிர்ச்சியைக் கொடுக்கும் குணங்களை கொண்டுள்ள  ஒன்றாகும்.  இது பார்ப்பதற்கு ஒரு காய்ந்த பசை போல் இருக்கும். இதை தண்ணீரில் 8 மணிநேரம் ஊற வைக்க வேண்டும் அதாவது இரவு ஊற வைத்து காலையில் இதைப் பார்த்த பளபளப்பான ஒரு திடமான ஜெல்லி போன்ற கெட்டியான ஒரு வடிவில் மாறிவிடும். 

சிறிது போட்டாலே போதும் நிறைய வந்து விடும் இதில் பால் சர்க்கரை சிறிது ஏலக்காய்தூள் சேர்த்து சாப்பிடலாம். மேலும் இதனை பாயாசம் போன்ற உணவுகளில் சேர்த்தும் நம் விருப்பப்படி செய்தும் உணவுகளில் கலந்து சாப்பிடலாம் விலை மலிவானது மற்றும் இயற்கையான உணவு என்பதால் இதில் செயற்கை நிறங்கள் ஏதும் இல்லை என்பதால் குழந்தைகளுக்கும் பரிந்துரைக்கப்படுகிறது. 

இது அனைத்து நாட்டு மருந்து கடைகளிலும் கிடைக்கும் எனவே நீங்களும் இன்றே வாங்கி பயன் பெறுங்கள். நன்றி.

No comments:

Post a Comment