ஞாபகத் திறனை அதகரிக்கச் செய்யும் வழிமுறைகள் - ThulirKalvi

Latest

Search Here!

Thursday, July 23, 2020

ஞாபகத் திறனை அதகரிக்கச் செய்யும் வழிமுறைகள்

ஞாபகத் திறனை அதகரிக்கச் செய்யும் வழிமுறைகள்


ஞாபக மறதி நமக்கு பல சந்தர்ப்பங்களில் சவாலாக அமைந்து விடுகிறது.  நமது வாழ்க்கையில் நமது தொழில் ரீதியான முன்னேற்றங்களில் ஒரு பரீட்சை மண்டபத்துக்கு செல்கிறோம். பரீட்சை வினாத்தாள் நமது கைக்கு கிடைக்கிறது. அந்த வினாக்களுக்கு விடையளிக்க முடியவில்லை. ஒரு சில வாரங்களுக்கு முதல் தான் படித்து இருக்கிறோம் ஆனால் விடைமறந்து போனது. ஆனால் நம்மால் அந்த கேள்விக்கு பதில் சொல்ல முடியாமல் மதிப்பெண்களை கூட இழந்து போய் விடுகிறோம் 

இன்னுமொரு விஷயம் மிக நீண்ட நாட்களாக எதிர்பார்த்து காத்திருந்த ஒரு வேலைக்கான நேர்முகத் தேர்வுக்கு அழைப்பு வருகிறது. நேர்முகத்தேர்வுக்கு முகம்கொடுக்கிறோம். நன்றாக தெரிந்த ஒரு கேள்வி.  பதில் சொல்ல முடியாமல் தவித்துக் கொண்டிருக்கிறோம். இப்படி நமது வாழ்க்கையில் பல சந்தர்ப்பங்கள் தேவையான நேரத்தில் தேவையான வார்த்தைகளில் தேவையான பதில்கள் வராமல் நாம் மிகவும் இக்கட்டான நிலைக்கு உள்ளாகிறோம் நண்பர்களே.

இதற்கு என்ன காரணம்?  நம்முடைய ஞாபக சக்தி பிரச்சினையா? நாம் பார்க்கிற விஷயங்களில் கேட்கிற விஷயங்கள் படிக்கிற விஷயங்கள் எல்லாமே நமது ஆழ் மனதில் பதிவாகிறது.  நல்ல ஞாபக சக்தி இருக்கிறது. அப்படி இருந்தால் என்ன பிரச்சனை இருக்க முடியும்? 

நினைவு கூர்தலின்  (Recalling) வேகம் பிரச்சினையாக இருக்கிறது. மருத்துவ ரீதியாக பலருக்குப் பல  பிரச்சனைகள் காரணமாக இருக்கலாம். ஆனால் நாம் இந்த பதிவில் பொதுவாக சில விஷயங்களை நினைவு கூறுதலை அதிகப்படுத்துவதற்கான மூன்று எளிய வழிமுறைகளில் நான் உங்களுடன் பகிர்ந்து கொள்ள இருக்கிறேன்.  



முதலாவது நாம்  எந்த ஒரு விஷயத்தையும் அலட்சியப்படுத்தி கேட்டுக்கொண்டிருந்தால் அலட்சியத்தோடு எந்தவிதமான ஒரு விருப்பம் இல்லாமல் செய்து கொண்டிருந்தாலோ நிச்சயமாக அதை நினைவு கூர்வது பெரும் சவாலான காரியம்தான். இன்னொரு விஷயத்தையும் அக்கறையோடும் ஆர்வத்தோடும் நாம் செய்கிறோம் என்றால் நிச்சயமாக அந்த விஷயத்தை வேகமாக நாம் நினைவுகூர முடியும். அதற்கு ஒரு நல்ல உதாரணத்தை உங்களோடு பகிர்ந்து கொள்ளலாம். 

பத்து வருடங்களுக்கு முன்னர்  நீங்கள் சென்ற ஒரு சுற்றுலா இன்றும் உங்களுக்கு ஞாபகத்தில் இருக்கும் உங்கள் நண்பர்களோடு நீங்கள் பேசிய விஷயங்களை ஞாபகத்தில் இருக்கும்.  அல்லது உங்களுக்கு மிகவும் பிடித்த ஒரு கிரிக்கெட் உலகக் கோப்பை போட்டியின் இறுதிப்போட்டி இந்தியா பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டிகளில் பந்துக்கு பந்து என்ன நடந்தது என்பது இன்றும் கூட உங்களால் சொல்லக்கூடியதாக இருக்கிறது. அதற்கு என்ன காரணம் என்று சிந்தித்துப் பார்த்திருக்கிறீர்களா?  ஆர்வமும் அக்கறையும் தான். 

நீங்கள் ஆர்வமாக அந்த விஷயத்தை  அவதானத்தோடு பார்த்து இருக்கிறீர்கள் இருக்கிறீர்கள்  அதனால் உங்களால் இன்றும் கூட வேகமாக நினைவு கூறக் கூடியதாக இருக்கிறது.

 இரண்டாவது விஷயம் தொடர்பு படுத்துதல்.  நாம் படிக்கக்கூடிய விஷயங்களை முதலில் பார்க்கலாம். அதில் படிக்கக் கூடிய விஷயங்களை நீங்கள் படிக்கின்ற சூழ்நிலையை ஞாபகப்படுத்தி நீங்கள் தொடர்பு படுத்தி நினைவு கூற முடியும். நீங்கள் ஒரு வீட்டின் அறையிலிருந்த படிக்கலாம்.  அல்லது உங்களுடைய கல்லூரியில் ஒரு சூழலில் இருந்து படிக்கலாம். அந்த சூழலில் இருந்து எந்த அத்தியாயத்தை படித்து இருக்கிறீர்கள் என்பதை தொடர்புபடுத்தி வேகமாக நினைவு கூறக் கூடிய ஆற்றலை நீங்கள் பெற்றுக்கொள்ளமுடியும்.

 இரண்டாவது விஷயம் படித்ததில் காட்சிப்படுத்தல் 

நீங்கள் படிக்கிற விஷயங்களை ஒரு காட்சியாக உங்களுடைய மனத் திரையில் காணுங்கள்.  நாம் கேட்கிற விஷயங்கள், வாசிக்கிற விஷயங்களை விட பார்க்கிற விஷயங்களை ஞாபகத்தில் வருவது மிகவும் வேகமாக இருக்கும் நினைவு கூர்தலின் போது.   ஆகவே இந்த விஷயத்தை நீங்கள் படித்தால் தான் உங்களுடைய மனதிரையிலே அதை காட்சி படுத்த முடியுமா என்று பாருங்கள் 

நீங்கள் பார்க்கக் கூடிய திரைப்படங்களில் மிக வேகமாக நினைவுகூர்கிறேன் அப்படியென்றால் நீங்கள் படிக்கக் கூடிய விஷயங்கள் ஏன் உங்களால் நினைவு கூற முடியாமல் இருக்கிறது?  அதையும் காட்சிப்படுத்தி உங்களுடைய மனத்திரையில் ஓட விட்டுப் பாருங்கள். நிச்சயமாக நினைவு கூர்தல் இன்னும் வேகமாக உங்களுக்கு  உள்ளே நடக்கும்.  

படிக்கக் கூடிய விஷயங்களை தொடர்பு படுத்துவதில் மூன்றாவது விஷயம்  நீங்கள் படிக்க கூடிய விஷயங்களை ஏற்கனவே நீங்கள் அறிந்த தகவல்களோடு தொடர்புப்படுத்திப் கொள்ள முடியுமா- என்று பாருங்கள்.  அப்படி தொடர்பு படுத்திக் கொண்டால் நிச்சயமாக உங்களுக்கு இரண்டு விஷயங்களை இரண்டு அத்தியாயங்களை தொடர்புபடுத்திக் நினைவு கூற முடியும் வேகமாக. 

மூன்றாவதாக நாம் பார்க்க இருப்பது பகிர்தலும் பயன்படுத்துதலும் 

பயன்படுத்துதல் மிகவும் முக்கியமானது. நாம் நம்முடைய ஆழ்மனதில்  எவ்வளவு தகவல்களை சேமித்தாலும் அப்படியே திரட்டி வைத்திருந்தாலும் கூட அவற்றை பயன்படுத்தவில்லை என்று சொன்னால் நிச்சயமாக நம்மால் நினைவு கூற முடியாமல் போய்விடும். 

நாம் இத்தனை புத்தகங்களை வாசித்திருக்கலாம்.  எவ்வளவோ விஷயங்களை படித்து இருக்கலாம். இவற்றையெல்லாம் நாம் பயன்படுத்தத் தவறி விட்டால் நிச்சயமாக அதுவே பயனைப் பெற்றுக் கொள்ளமுடியாது.  அந்த பயனைப் பெற்றுக் கொள்வதற்காக நீங்கள் படித்த விஷயங்களை ஒரு குறிப்பு எடுத்துக்கொள்ளுங்கள்.  அந்த குறிப்புகளை நீங்கள் அறிந்து எளிய சொற்களைக் கொண்டு குறிப்புகளை Blog ல் பதியலாம்.  அல்லது ஒரு வீடியோவாக வெளியிடலாம்.  இப்படி ஒரு விதத்தில் அந்த குறிப்புகளை எளிய சொற்களை நீங்கள் அறிந்த சொற்களைக் கொண்டு பயன்படுத்துங்கள். மீண்டும் மீண்டும் அது உங்களுடைய ஞாபகத்துக்கு நினைவு கூர்தலின் ஆற்றலை வேகப்படுத்தி கொண்டு வந்து சேர்க்கும்.  

அதைப்போல  பகிர்தல்,  அது பணமாக இருக்கட்டும். படிப்பாக இருக்கட்டும்.  இன்னொருவரோடு பகிர்ந்து கொள்ளும் போதுதான் நிச்சயமாக பல்கிப் பெருகும்.  பணம் என்றால் தர்மம் செய்ய வேண்டும். படிப்பு என்றால் நாம் அறிந்ததை மற்றவர்களோடு பகிர்ந்து கொள்ள வேண்டும். நான் அறிந்த நல்ல பல விஷயங்களை நண்பர்களாகிய உங்களோடு பகிர்ந்து கொள்வது போல நீங்கள் படித்த நல்ல விஷயங்களை நண்பர்களோடு பகிர்ந்து கொள்ளுங்கள். அது உங்களுடைய படிப்பில் ஆற்றலை, கல்வி ஆற்றலை அதிகப்படுத்துவதோடு மட்டுமல்லாமல் உங்களுக்கு நினைவு கூர்தலின் தேகத்தையும்  இன்னும் அதிகப்படுத்தும்.  முதலாவது விஷயம் அக்கறை,  இரண்டாவது விஷயம் எதுவென்றாலும் தொடர்புபடுத்துதல்,  மூன்றாவது விஷயம் பயன்படுத்துதலும் பகிர்தலும். இது உங்களுடைய நினைவு கூர்தலின் வேகத்தை இன்னும் இன்னும் அதிகப்படுத்தி உங்களுக்குள்ளே ஞாபக சக்தியை அதிகப்படுத்தும்.