கண் நோய்கள் வருவதற்கான ரொம்ப முக்கிய சில காரணங்களைப் பார்ப்போமா? - ThulirKalvi

Latest

Search Here!

Friday, July 3, 2020

கண் நோய்கள் வருவதற்கான ரொம்ப முக்கிய சில காரணங்களைப் பார்ப்போமா?

கண் நோய்கள் வருவதற்கான  ரொம்ப முக்கிய சில  காரணங்களைப் பார்ப்போமா?


கண் நோய்களுக்கு பொதுவான காரணம் 

கீழ்க்கண்ட ஒன்பது வகை கண் நோய்கள் பொதுவாக காணப்படும் கண் நோய்கள் ஆகும்.

 பார்வை கோளாறு

 தலைவலி

கண்ணில் வீக்கம்

கல்லீரல் நோய்கள்

கருவிழி நோய்கள்

விழித்திரை கிழிந்து விழுந்து 

குளுக்கோமா 

நீரிழிவு 

மாறுகண் 

பார்வைக்கோளாறு ஒலியைக் கேட்பதற்கும் நாம் எவ்வித பிரயாத்தையும் அல்லது முயற்சியும் எடுத்துக் கொள்வதில்லை. அதேபோல பொருள்களை பார்ப்பதற்காக நாம் எந்தவிதமான முயற்சியும் எடுத்துக்கொள்வதில்லை ஆனால் அப்படி முயற்சி செய்து ஒருவர் பார்க்க வேண்டியிருந்தால் அவரது பார்வையில் கோளாறு இருக்கிறது என்பது தெளிவு.

கண்கள் நல்லவிதமாக செயல்பட்டால் பொருள்களை உற்று நோக்க வேண்டிய அவசியமில்லை. நாகரீகம் மனிதனுக்கு அளித்த கேடுகளில் பார்வைக்கோளாறும் கிட்ட பார்வை மற்றும் தூரப்பார்வை ஒன்றாகும்.  இதற்கு காரணமாக அமைந்து உள்ள வை பற்றி ஒரு பட்டியல் போடலாம், 

கண்ணில் மேலிமைககளை உயர்த்தி வைத்திருந்தாலும் நீண்ட நேரம் இடைவெளியில் கண்ணிமைத்தலும்.

படித்தல் எழுதுதல் தைத்தல் திரைப்படம் பார்த்தல் ஆகிய காரியங்களை செய்யும் பொழுது கண்களை தவறான முறையில் பயன்படுத்துதல் அதாவது சரியான முறையில் அமர்ந்து காரியங்களை  செய்யாதிருப்பது. 

உற்றுப் பார்த்து செய்ய வேண்டியப் பணிகளின் போது போதிய வெளிச்சம் இல்லாதிருத்தல் அல்லது மோசமான விளக்கொளி இருத்தல்.

அச்சம் கவலை படபடப்பு மற்றும் உடல் ரீதியான அசௌகரியங்கள்

எண்ண ஓட்டங்கள் தடைப்படுதல் எண்ணங்களைச் சிதற விடுதல். 

மிதமிஞ்சிய தாம்பத்தியம்

போஷாக்கு இல்லாமை அல்லது ஊட்டச்சத்து குறைவு 

உற்று நோக்குதல் அல்லது பார்ப்பதற்கு முயற்சி செய்வதுதான் பார்வைக்கு முக்கிய காரணமாகும்.

கண்களால் முறையாக எப்படிப் பார்ப்பது என்பதை தெரிந்துகொண்டால் இந்த குறைபாட்டை தடுக்கலாம்.

தூசு தும்புகள் புகை போன்றவற்றில் இருந்து கண்களை பாதுகாக்க கண்ணிமைகளை இயற்கை நமக்கு அளித்துள்ளது. அத்துடன் மிக முக்கியமாக கண் பார்வையை இமைகள் பாதுகாக்கின்றன. மேல் இமை மூடும் போது கண்களுக்கு ஓய்வு கிடைப்பது ஒரு பார்வை தெளிவையும் தருகிறது.  ஆனால் மேல் இமைகள் உயர்த்தப் படும் போது பார்வை மோசமடைகிறது.

 கண் இமைத்தல் என்பதை கண்ணோடு பிறந்த ஒன்று.  இது இயற்கையானது. கண் இமைத்தலால் கண்ணுக்கு ஓய்வு கிடைக்கிறது. 

கண் இமைக்கும் போது மேல் இமை சற்று கீழே வந்து மீண்டும் மேலே செல்கிறது. விழித்திருக்கும்போது ஒருவர் தானாகவே  அடிக்கடி இந்த காரியத்தை செய்து கொண்டிருப்பார். 

புத்தகத்தில் ஒவ்வொரு வரியை படிக்கும்போது ஓரிருமுறை கண்ணை இமையுங்கள்.   ஆனால் கணி்ணடித்தல் என்பது முற்றிலும் தவறானது கெட்ட பழக்கம் கூட.

முதல் கண்ணடித்தலின் போது மேல் இமை கீழ் இமையுடன் வந்து மோதுகிறது.  அது கண்களுக்கு நல்லதல்ல. 

படிக்கும்போது புத்தகத்தை முகவாய் மட்டத்திற்கும் கீழ் வைத்திருக்க வேண்டும்.  இதனால் மேல் இமைகள் உயர்த்த படுவதைத் தடுக்கலாம். 

இடமும் வலமுமாக தலையை சற்று அசையுங்கள்.  ஒவ்வொரு வரியையும் படிக்கும் போது ஓரிரு முறை கண்களை இமையுங்கள். 

சிறிய அச்சு எழுத்துக்களை படிப்பது (FINGER PRINT READING) கண்களுக்குக் கெடுதல் என்று பொதுவாக கருதுவது உண்டு.

ஆனால் அசவுகரியம் அல்லாமல் அதை படிப்பதே கண்களுக்கு நன்மை பயப்பதாகும். குறிப்பாக முதுமை காலத்தில் பார்வை குறைபாடுகளை பார்வை நோயைத் தவிர்ப்பதற்கு இது பெரிதும் உதவும். மேலும் வாகனங்களில் செல்லும்போது படிப்பதும் நல்லதே. ஆனால் கண்களுக்கு அதிக சிரமம் கொடுக்காமல் படிக்க வேண்டும். முதலில் இவ்வாறு படிக்கும் போது சற்று உற்று நோக்கியும்  கண்களைத் தாழ்த்தியும்  தான் படிக்க வேண்டியிருக்கும்.  ஆனால் பழக்கம் ஆகி விட்டால் இந்த தற்காலிக இடையூறுகள் தாமாகவே நீங்கிவிடும்.  எழுதும்போது பேனாவின் முனை மீது பார்வை இருக்க வேண்டும். பேனாமுனை உடனேயே கண்கள் நகரவேண்டும் அடிக்கடி கண்களை இமைக்க வேண்டும். பொதுவாக பேனாவினால் எழுதிக்கொண்டிருக்கும் போது ஏற்கனவே எழுதப்பட்ட எழுத்துக்கள் மீது தான் கண் போகும். இது தவறு. திருத்திக்கொள்ள வேண்டும்.

 திரைப்படம் பார்ப்பது கண்களுக்கு கெடுதலானது எனினும் என்ற பொதுவான கருத்து நிலவுகிறது. ஆம் பார்வை குன்றுவதற்கும் போதும் கண்கள் தளர்ச்சி அடைவதற்கும் திரைப்படம் காரணமாக இருக்கிறது என்பதில் சந்தேகமில்லை.

திரைப்படம் பார்க்கும் போது கண்களுக்கு சிரமம் அளித்தால் இந்த தொல்லைகள் வரத்தான் செய்யும். கண்களுக்கு வீண் சிரமம் அல்லது தொல்லை கொடுக்காமல் திரைப்பட பார்ப்பது எப்படி? நாற்காலியின் பின்புறமாக நன்றாக சாய்ந்து முகவாயை சற்று உயர்த்தி கண்ணின் மேல் இமைகள் சற்று தாழ்த்தி கண்களை அசைத்து திரைப்படம் பார்த்தால் பார்வை மேம்படும்.  அதுமட்டுமன்றி தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை பார்ப்பதற்கும் இது பொருந்தும்.

 தையல் வேலை செய்யும்போது பல பெண்களுக்கு கண்களில் வலியும் (EYE STRAIN) தலைவலியும் ஏற்படுகிறது.  

ஒரு சாதாரண தவறு தான் இதற்கு காரணம் அதாவது துணிகள் அவர்களது பார்வை நிலைகுத்தி நிற்பதோடு நீண்ட இடைவெளி விட்டு கண்களை இமைக்கிறார்கள். 

ஊசி எப்படி வருகிறதோ அது போல கண்களை மூடிய நிலையில் நகர்த்த வேண்டும். கண்களை இமைக்க வேண்டும். துணியை பார்த்துக் கொண்டிருக்கக் கூடாது.

 பார்வை கோளாறை தவிர்க்க கண்களுக்கு ஓய்வு கொடுக்க வேண்டும். கண் இமைகளையும் விழி கோளத்தையும் சரியான நிலையில் வைத்து பணி செய்யுங்கள். உடற்பயிற்சி செய்யுங்கள். சத்தான சரிவிகித உணவை உட்கொள்ளுங்கள். பார்வை குறைபாட்டை நீக்குவதற்கான சரியான கண்ணாடிகளை அணியுங்கள்.


எழுதுதல் 

பேனாவின் போக்கிலேயே நகர்த்துங்கள். முன்னதாக எழுதியதை படித்து கொண்டு எழுதுவதை தவிருங்கள்.  தையல் தைக்கும் போது ஊசி பகுதிகளெல்லாம் உங்கள் கண்களும் செல்லட்டும்.

வாகனம் ஓட்டுதல் 

பின்னோக்கி செல்லும் பொருள்களை கவனிக்கச் சாலைகளிலிருந்து வாகனத்தின் முன் பகுதியை நோக்கிப் பார்வையைச் செலுத்துங்கள். 

பயணம்  

பயணத்தின்போது விறைந்து மறையும் பொருள்களை உன்னிப்பாக பார்க்க வேண்டாம்.

கடைகளுக்கு செலலுதல்

தன் விளம்பரப் பலகைகளை அநாவசியமாகப் படிப்பதை தவிர்க்கவும்.

 நடத்தல்

நடக்கும் சமயம் ஒவ்வொரு அடியையும் எடுத்து வைக்கும்போது கண்களை இமையுங்கள்.

லிப்ட்

லிப்டில் செல்லும் போது அதை இயங்குவதை நோக்கிப் பாருங்கள் 

கண்பார்வையை மேம்படுத்துவதற்கான சில எளிதான பயிற்சிகள் உள்ளன அதை இனி வரும் பதிவில் பார்ப்போம்....