கோழி தன் குஞ்சுகளை எவ்வாறு இனம் காண்கிறது? தலையில் மட்டும் அதிக ரோமம் முளைப்பது ஏன்? - ThulirKalvi

Latest

Search Here!

Friday, July 3, 2020

கோழி தன் குஞ்சுகளை எவ்வாறு இனம் காண்கிறது? தலையில் மட்டும் அதிக ரோமம் முளைப்பது ஏன்?

கோழி தன் குஞ்சுகளை எவ்வாறு இனம் காண்கிறது? தலையில் மட்டும் அதிக ரோமம் முளைப்பது ஏன்?

ஒன்றுபோல தோற்றமளிக்கும் குஞ்சுகளை நமக்கு வேண்டுமானால் அடையாளம் காண்பது சிரமமாக இருக்கலாம். கோழிகளுக்கு அவ்வாறு இல்லை. முகத் தோற்றத்தில் உள்ள வேறுபாடு அவை எழுப்பும் குரல் ஆகியவற்றிலிருந்து தாய் கோழி குஞ்சுகளை அடையாளம் காண்கிறது . பொதுவாக பறவைகளுக்கு நுகரும் திறன் மிகக் குறைவு பார்வைத் திறன் மிக அதிகம்


தலையில் மட்டும் அதிக ரோமம் முளைப்பது ஏன்?

 பொதுவாக ரோம வளர்ச்சிக்கு போக்கு ஜீன்களின் மூலம் கட்டுப்படுத்தப்படுகின்றது இந்த வளர்ச்சிக் காரணி அதிகமுள்ள இடத்தில் ரோமம் அடர்த்தியாகவும் நீளமாகவும் இருக்கும். மற்ற இடங்களில் அவ்வாறு இருப்பதில்லை. சிறப்புத்தன்மை வாய்ந்த எபிதீலிய ரோமக் குமிழ்கள் தலைப்பகுதியில் அதிகம் உள்ளது. ரோமக் குமிழியிலிருந்து  ரோமம் உருவாக்கி  கெரடின் தொகுப்படைகிறது.  ரோமக் குமிழிகள் குறைவாக இருந்து கொரட்டின் தொகுப்பும் குறைவாக இருந்தால் ரோமங்கள் அதிகமாக காணப்படாது.  பாலினம் சார்ந்த ஹார்மோன்களும் இதில் பங்கு பெறுகின்றன தலையில் மட்டும் அதிக அளவில் ராம முளைப்பதற்கு பரிணாமும் ஒரு காரணமாகும்.

சைக்கிளில் செல்லும்போது நாம் எவ்வாறு கீழே விழாமல் செல்கிறோம்? டயர் மெல்லியதாக இருக்கிறதே?

ஓடும் சைக்கிளின் புவியீர்ப்பு மையம் செங்கோடு ஆனது டயர்களை இணைக்கும் நேர்கோட்டுக்கு இருபுறமும் மாறி மாறி அலைந்து இயக்க ச்சமநிலையை ஏற்படுத்தும் இதனால் சைக்கிளை ஓட்டும்போது கீழே விழாமல் சமன் செய்ய  (பேலன்ஸ்) முடிகிறது.

சைக்கிளில் புவியீர்ப்பு மையம் தரையிலிருந்து உயரத்தில் இருப்பதாலும் டயர்களுக்கிடையே தரையில் வரையப்படும் கோடு மெல்லியதாக இருப்பதாலும் ஓடாத நிலையில் சமநிலை செய்வது கடினம்.

சைக்கிள் ஓடும் போது அதன் மீது ஏற்படும்குத்து விசைகளின்  கூட்டு பூச்சியமானால்  சைக்கிள் இயக்க சமநிலையை அடையும்.

 சாலையின் வளைவில் செல்லும் சைக்கிள் உட்புறமாக சாய்ந்து மையவிலக்கு விசை சரி கட்டுகிறது. அப்போது சைக்கிளின் புவியீர்ப்பு மையம் வழியாக செல்லும் செங்கோடு வெளியே விழுந்தாலும் கீழே விழுவதில்லை. பம்பரமும் ஆணியில் நின்று நிமிர்ந்து சுழலும்போது இயக்க சமநிலையில் இருக்கும். சுழற்சி நின்றால் விழுந்துவிடும்,  இங்கு ஜைரோஸ்கோபின் தத்துவம் செயல்படுகிறது.

சமையல் குக்கரில் ரப்பர் வளையம் உருகுவதில்லை ஏன்? அது எதனால் செய்யப்படுகிறது?

வழக்கமாக 100 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையில் கொதிக்கும் நீர் சமையல்களில் 122 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையில் கொதிக்கிறது.

 இதற்கு பிரஷர் குக்கரில் ஏர்பமடும் அழுத்தமே காரணம் ஆகிறது .

ரப்பர் வளையும் வைக்கப்பட்டுள்ள குக்கரின் பகுதியும் ஏறக்குறைய 120 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையில் தான் இருக்கும்.

வைடன் (VITON)  என்ற செயற்கை ரப்பரால்,  ரப்பர் வளையம் செய்யப்படுகிறது இது ஒரு தெர்மோ பிளாஸ்டிக், அதாவது 250 டிகிரி செல்சியசுக்கு மேல் தான் உருக துவங்கும், எனவே பிரஷர் குக்கரின் ரப்பர் வளையம் உருகுவதில்லை.