உங்கள் வாழ்க்கையை மாற்றியமைக்கும் தன்னம்பிக்கைக்கானப் பதிவு. படித்துப் பாருங்கள். வெற்றி நிச்சயம். - ThulirKalvi

Latest

Search Here!

Thursday, July 23, 2020

உங்கள் வாழ்க்கையை மாற்றியமைக்கும் தன்னம்பிக்கைக்கானப் பதிவு. படித்துப் பாருங்கள். வெற்றி நிச்சயம்.

உங்கள் வாழ்க்கையை மாற்றியமைக்கும் தன்னம்பிக்கைக்கானப் பதிவு. படித்துப் பாருங்கள். வெற்றி நிச்சயம்.


வணக்கம் நண்பர்களே,  மனிதனாகப் பிறந்த ஒவ்வொருவரின் மனதிலும் பல்வேறு கனவுகள் இருக்கும்.  என்றாவது ஒரு நாள் கனவுகளெல்லாம் அடைந்து விடுவோம் என்ற நம்பிக்கையில் அவர்கள் இன்று வரை வாழ்ந்து கொண்டிருப்பார்கள். ஆனால் நிதர்சனத்தில் அது எத்தனை பேருக்கு நடந்தது?

உங்க மனதில் ஒரு மிகப்பெரும் கனவு இருந்தாலும் அதை அடைந்து விடுவோம் என்பதில் முழுமையான நம்பிக்கை இருந்தாலும் நீங்க களத்தில் இறங்கி முயற்சிக்காத வரை அது வெறும் நம்பிக்கையாக மட்டுமே இருக்கும். உங்க கனவில் இருந்து உங்களை தடுப்பது எது?  பயம்.  பதற்றம்.  அச்சம். தாழ்வு மனப்பான்மை என, அது எதுவாக இருந்தாலும், அதையும் கடந்து செல்லும் சக்தி உங்ககிட்ட நிச்சயம் இருக்கும். 

ஆனால் அதை நீங்க பயன்படுத்துவதில்லை.  இதுக்கு முன்னாலே உங்களைக் கடந்து போன வருடங்களை போலல்லாது இந்த வருடம் உங்க வாழ்க்கையை மாற்றியமைக்கும் என நினைத்தால் இதற்கு முன்னாடி நீங்க செய்யாத ஒரே ஒரு மாற்றத்தை உங்க வாழ்க்கையில் இன்று கொண்டு வர வேண்டும். 

அந்த மாற்றம் என்னை அதை எவ்வாறு உருவாக்குவது என்பதை நாமே இந்த பதிவில் படிக்க இருக்கின்றோம்.

சுய ஒழுக்கம். 

நீங்க வெற்றியாளர்கள் எனக் கருதும் யாராக இருந்தாலும் அவர்கள் அனைவரிடமும் பொதுவாக இருக்கும் ஒரே பண்பு இதுவாகத்தான் இருக்கும். சுய ஒழுக்கம் என்றால் என்ன? என்ற கேள்வி உங்கள் மனதில் எழலாம். இந்த வேலையை இந்த நேரத்திற்குள் செய்து முடிக்க வேண்டும் என நீங்கள் முடிவெடுத்துவிட்டால்,    இந்த உலகமே திரும்பி தலைகீழாக நின்றாலும் அந்த வேலையை அந்த நேரத்தில் செய்து முடிப்பதே சுய ஒழுக்கம் ஆகும்.

 சுய ஒழுக்கத்தின் பற்றாக்குறையால் தான் உங்க வெற்றி இன்று வரை கிடப்பில் போடப்படுகிறது.  இந்த ஒரு பழக்கத்தை மட்டும் நீங்க வாழ்வில் கடைபிடிப்பார்களானால் இருந்தால் பயம் சோம்பேறித்தனம் தாழ்வு மனப்பான்மை என உங்க வெற்றிக்குத் தடையாக இருக்கும். அனைத்தும் ஒரே நாளில் காற்றில் கரைந்து விடும்.  அதெல்லாம் சரி இந்த சுய ஒழுக்கத்தை எப்படி வாழ்க்கை கொண்டுவருவது?  

இத்தனை வருடமாக பலமுறை முயற்சி செய்தும்,  இது என்னால் முடியாமல் தானே போயிட்டு.  இப்ப மட்டும் இதை எப்படி கடைப்பிடிப்பது?  என்ற கேள்வி உங்கள் மனதில் தோன்றலாம்.  அதற்கான பதிலையே நாம் இனிப் பார்க்க இருக்கின்றோம். ஒரு மனிதனின் மிகப் பெரும் போராட்டம் அவனது மனதுடன் தான் இருக்கும் என்பார்கள்.  

நம்ம மனதுடன் போராடும் போராட்டம் மிகக் கடுமையானது தான். ஆனால் தனது அதிகபட்ச காலமே வெறும் 90 நாட்கள் மட்டும்தான்.  ஒருவேலையை உங்களால் 90 நாட்கள் தொடர்ச்சியாக செய்ய முடியுமாக இருந்தால் அதன் பின் அது உங்க வாழ்க்கையோடு கலந்து விடும்.  ஆனால் அந்த 90 நாட்களும் நீங்க விடாப்பிடியாக போராட வேண்டி வரும்.  

அடுத்து நாம பார்க்க இருக்கும் இரண்டு யுக்திகளையும் நீங்க சரியான முறையில் பயன்படுத்தினால் உங்கள் போராட்டம் எத்தனை கடினமாக இருந்தாலும் அது இலகுவில் கடந்துவிடலாம். 

அந்த யுத்திகள் என்னவென்பதை தொடர்ந்து காரணங்கள் 

உங்கள் வாழ்க்கையை மாற்றியமைக்கும் தன்னம்பிக்கைக்கானப் பதிவு. படித்துப் பாருங்கள். வெற்றி நிச்சயம்.

முதலாவது வலுவான காரணத்தை கண்டறியுங்கள் வெற்றி அடைவதற்கு மிக உறுதியான வெற்றி அடைவதை தவிர வேறு வழி இல்லை என்ற நிலைக்கு உங்களை கொண்டுவருவதே என்கின்றார் ஒரு அறிஞர்.  ஒருவன் வாழ்க்கையில் எந்த இலக்கும் இன்றி அடுத்தவர்களை தொந்தரவு செய்து கொண்டு ஊதாரியாக சுற்றித் திரிவான்.  திடீரென ஒருநாள் அவனது தந்தை இறந்து விடவே,  அந்த குடும்பத்தை கவனிக்கும் பொறுப்பு அவனது தலைக்கு வந்து சேரும்.  அந்த நொடியே அவன் வேறொரு மனிதனாக மாறி விடுவான் கேளிக்கைகள் வீண் விஷயத்தை விட்டுவிட்டு இரவு பகலாக உழைத்துக் கொண்டிருப்பான்.  

இப்படியான மனிதர்களை நிச்சயம் நீங்கள் கடந்து வந்திருப்பீர்கள் திடீரென ஒரே நாளில் எவ்வாறு அவனது 100 சதவீத சுய ஒழுக்கம் கொண்டவனாக மாற முடிந்தது ஏனெனில் அவனுக்கு அதைத் தவிர வேறு வழியில்லை என்ற நிலை. அந்த இடத்தில் அவனது தனிப்பட்ட விருப்பு வெறுப்புக்களை விட தன்னை நம்பியுள்ள தனது குடும்பத்தை காப்பாற்ற வேண்டும் என்ற எண்ணமே மேலோங்கியிருந்தது. இவ்வாறான ஒரு எண்ணத்தையே நீங்களும் உங்களின் உருவாக்க வேண்டும். 

உங்கள் வாழ்க்கையை மாற்றியமைக்கும் தன்னம்பிக்கைக்கானப் பதிவு. படித்துப் பாருங்கள். வெற்றி நிச்சயம்.

இரண்டாவது படிப்படியா க முன்னேறுங்கள்.

ஒரு விதையை விதைத்து விட்டு அதற்கு நூறு குடம் தண்ணீர் ஊற்றுவதால் அது ஒரே நாளில் மரம் ஆகிவிடாது மாறாக அதிகபட்ச தண்ணீரின் காரணமாக அவ்விதை அழுகி முளைக்காமலேயே போய்விடும்.  வெற்றியும் இது போன்றதுதான்.  ஒரு சாதாரண வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருக்கும் நீங்க திடீரென ஒரு நாள் உங்க பழக்கங்கள் எல்லாம் மாற்ற முயற்சித்தால் அம்முயற்சித் தோற்பதுமட்டும்.   அதில் உங்களுக்கு முழுமையான மன விரக்தியும் உருவாகி விடும். எனவே நீங்க மாற்ற வேண்டிய பழக்கங்கள் செய்ய வேண்டிய வேலைகளை முழுமையாக பட்டியலிட்டு அதுக்கப்புறமா அவற்றை ஒவ்வொன்றாக நடைமுறைப்படுத்துங்கள். 

இதற்கு நேரம் கொஞ்சம் அதிகமாக எடுத்துக் கொண்டாலும் இந்த வழியில் ஒரு பழக்கத்தை நீங்க பழகும் போது அது மீண்டும் உங்களை விட்டு விலகுவது மிகக் கடினமானது.  எனவே முதலில் உங்கள் வாழ்க்கைக்கான இலக்கினை தீர்மானித்துக் கொள்ளுங்கள். அதை அடைவது ஒன்றே வழி என்ற மனநிலைக்கு உங்களை கொண்டு வாருங்கள்.  அதன்பின் உங்களிடம் மாற்ற வேண்டிய பழக்கங்கள் நீங்கள் செய்ய வேண்டிய வேலைகளை பட்டியலிட்டுங்கள்.  அவ்வாறு பட்டியலிட்டதை ஒவ்வொன்றாக நடைமுறைப்படுத்த ஆரம்பியுங்கள். நிச்சயம் இந்த வருடம் முடிவதற்குள் நீங்க எண்ணியபடி உங்க வாழ்க்கை மாறி இருக்கும். தைரியமாக களத்தில் இறங்குங்கள். உங்கள் வாழ்க்கையை மாற்றியமைக்கும் தன்னம்பிக்கைக்கானப் பதிவு. படித்துப் பாருங்கள். வெற்றி நிச்சயம்.