சலவைத் தொழிலாளியின் கழுதை
ஒரு ஊரில் ஒரு சலவைத் தொழிலாளி இருந்தான். அவன் ஒரு கழுதையை வளர்த்து வந்தான். அந்த க கழுதை பகலெல்லாம் சலவை துணிகளை சுமந்து செல்லும். மேலும் சலவைத் தொழிலாளி உடனிருந்து அவன் சொல்லும் வேலைகளை எல்லாம் செய்யும். சலவைத் தொழிலாளி இரவில் கழுதையைக் கட்டி போடுவதில்லை. அதனால் அது தன் இஷ்டம்போல் எங்கு வேண்டுமானாலும் சுற்றி வந்தது.
வெள்ளரிக்காய்த் தோட்டம்
அப்படி சுற்றித்திரியும் போது ஒரு சமயம் காட்டில் நரி ஒன்றை சந்தித்தது. கழுதையும் நரியும் சீக்கிரத்திலேயே நெருங்கிய நண்பர்களாகிவிட்டனர். இருவரும் சேர்ந்து இரவில் உணவைத் தேடிப் பல இடங்களுக்குச் செல்வார்கள். ஒரு நாள் ஒரு தோட்டத்தில் வெள்ளரிக் காய்கள் விளைந்திருப்பதை இருவரும் கண்டனர். உடனே உள்ளே சென்று வயிறு முட்ட சாப்பிட்ட பிறகு தத்தமது இடத்திற்கு சென்றனர். மறுநாளும் அதனைத் தொடர்ந்து வந்த நாட்களிலும் சென்று வெள்ளரிக்காய்களை சாப்பிட்டனர். கழுதை நன்கு சாப்பிடுவதால் கழுதை உடம்பு நன்றாக பருத்து விட்டது.
பெளர்ணமி
ஒரு நாள் கழுதையும் நரியும் வழக்கம்போல் வெள்ளரிக்காய்களை சாப்பிட்டுக் கொண்டிருந்தன. அப்போது வானத்தில் நிலா ஒளி வீசிக் கொண்டு வந்து கொண்டிருந்தது. அன்று பௌர்ணமி ஆதலால் எங்கும் பிரகாசமாக இருந்தது. அதை பார்த்த உடன் கழுதைக்கும் சந்தோஷம் பிடிபடவில்லை. உடனே கழுதை நரியைப் பார்த்து நண்பனே எனக்கு இன்று மிக சந்தோஷமாக இருக்கிறது. வானத்தில் நிலவு மிக அழகாக இருக்கிறது. காற்று வீசுகிறது. இந்த இரவு பொழுது மிக ரம்மியமாக இருக்கிறது.
பாட்டுப் பாட விரும்பிய கழுதை
இது எல்லாம் பார்க்கும்போது எனக்கு பாடலும் போல் ஆசையாக இருக்கிறது. என்று கூறியது. நரி உடனே பதறிப்போய், வேண்டாம் வேண்டாம் என்று சொல்லியது. மேலும் நண்பனே நாம் யார்? நாம் என்ன செய்து கொண்டிருக்கிறோம் என்பதை மறந்துவிட்டாயா? நாமே இன்னொருவர் தோட்டத்தில் புகுந்து திருடிச் சென்று திருடித் கொண்டிருக்கிறோம். இதுவரை கடவுள் புண்ணியத்தால் நாம் மாட்டிக் கொள்ளாமல் இருக்கிறோம். திருட்டு தொழிலை செய்யும் நாம் அமைதியாக இருப்பதுதான் சரி என்று நரி கூறியது.
நரியின் பேச்சைக் கேட்காத கழுதை
கழுதை நரியைப் பார்த்து, ''இந்த சூழ்நிலை எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது, நான் மிகவும் சந்தோஷமாக இருக்கிறேன், நிச்சயமாக ஒரு பாட்டு பாடு தான் போகிறேன்'' என்று சொல்லியது நரி. திரும்பவும் நண்பா தயவு செய்து நீ பாட வேண்டாம். உன் குரல் வேறுபாடு அதற்கு ஏற்றார் போல் இருக்காது என்று கூறியது. கழுதையைப் பார்த்து என் குரலை பார்த்து நீ பொறாமை படுகிறாய் உனக்கு இசையைப் பற்றி ஒன்றும் தெரியாது என்று கூறியது.
நரி உடனே ஆமாம் எனக்கு இசை பற்றி ஒன்றும் தெரியாது தான். நீ பாட்டு பாடினால் இங்கு காவல் காக்கும் காவலாளிகள் வந்து உனக்கு வெகுமதி தருவார்கள். அவர்களுக்குத்தான் பாட்டை ரசித்து விட்டு வெகுமதி தரும் ஞானம் இருக்கிறது. அந்த வெகுமதியை பெற்றுக்கொள்ள உனக்கு உடம்பில் பலம் இருந்தால் நீ பாட்டு பாடு என்று கூறியது. இதனை கேட்டதும் கழுதைக்கு கோபம் வந்து விட்டது. என் குரலை பற்றி கேவலமாக பேசுகிறாயா? இப்பொழுது நான் பாடத்தான் போகிறேன் வீறாப்பாக கூறியது.
காவலாளியிடம் மாட்டிக்கொண்ட நரி
கழுதை தன் பேச்சைக் கேட்காத என்பதைப் புரிந்துகொண்ட நரி, நான் தோட்டத்திற்கு வெளியில் உனக்காகக் காத்திருக்கிறேன். நீ இப்பொழுது உன் இஷ்டம் போல பாடு என்று கூறிவிட்டு வெளியே ஓடியது. நரி சென்ற உடன் கழுதை தன் தலையை உயர்த்தி பலமாக கத்தத் தொடங்கியது. அந்த சத்தத்தை கேட்டவுடன் காவலாளிகள் கழுதைத் தோட்டத்திற்கு வந்து இருக்கிறது என்பதை தெரிந்து கொண்டு வேகமாக ஓடி வந்தனர்.
ஓடிவந்த காவலாளிகள் கழுதையை பலம் கொண்ட மட்டும் வேகமாக அடித்தனர். பிறகு ஒரு பெரிய கல்லை அதன் கழுத்தில் கட்டி தொங்க விட்டு சென்றனர். கழுதை அடி வாங்கிய உடன் அந்த இடத்திலேயே சிறிது நேரம் கிடந்தது. பிறகு தட்டுத்தடுமாறி எழுந்து நின்றது. பிறகு தள்ளாடியபடி பெரிய கல்லை எடுக்க முடியாமல் இழுத்தபடி தோட்டத்தை விட்டு வெளியே வந்தது. கழுதை தோட்டத்தை விட்டு வெளியே வருவதைக் கண்ட நரி அதன் பக்கத்தில் வந்தது.
நரி கழுதையிடம், ''வாழ்த்துக்கள்'' பாட்டு பாடி நல்ல பரிசினைப் பரிசினைப் பெற்ற வந்துள்ளீர்கள் என்று கூறியது. உடனே கழுதை, நண்பனே என்னை மன்னித்து விடு. நீ சொன்னதை நான் கேட்காமல் போய் விட்டேன். எவ்வளவு மடத்தனம் செய்துவிட்டேன் என்று நரியிடம் கூறியது.
கதையின் நீதி
நமக்கு பல திறமைகள் இருந்தாலும் நம்முடைய திறமைகள் வெளிப்படுத்துவதற்கு ஏற்ற இடம் இன்னதென்று அறிந்து நம்முடைய திறமையை வெளிப்படுத்த வேண்டும். மேடை அறிந்து ஆடவேண்டும். சபை அறிந்து பாட வேண்டும் என்பார்கள்.
No comments:
Post a Comment