பஞ்சதந்திர கதைகள் கொக்கும் வேடனும்
வயதான கொக்கின் அறிவுரை
அந்த மரத்தை சுற்றி ஒரு கொடி ஒன்று வளர்ந்தது. அதனை கண்ட வயதான கொக்கு மற்ற கொக்குகளைப் பார்த்து இந்த கொடியை சிறிதாக இருக்கும்போதே வெட்டி விடுங்கள். இல்லை என்றால் இந்த சிறு கொடி பலம் வாய்ந்ததாக மாறிவிடும். அதனைப் பற்றிக் கொண்டு வேடர்கள் மேலே ஏறி வந்து விட முடியும். அப்படி வந்தால் அவர்கள் நம்மைப் பிடித்து விடுவார்கள் கொடியை விடாதீர்கள் என்று கூறியது. வயதான கொக்கு கூறியதை மற்ற கொக்குகள் காது கொடுத்து கேட்கவில்லை.
வேடன் விரித்த வலை
நாட்கள் சென்றன. வயதான கொக்கு சொன்னது போலவே அந்த சிறு கொடி பலம் கொண்ட கயிறு போல் மேலே ஏறுவதற்கு வசதியாக வளர்ந்துவிட்டது. ஒருநாள் எல்லா கொக்குகளும் இரை தேடுவதற்காக வெளியில் சென்று விட்டன. அந்த நேரத்தில் வேடன் ஒருவன் அந்த மரத்தின் அருகே வந்தான். அவனுக்கு அந்த மரத்தில் நிறைய கொக்குகள் இருப்பது தெரியும்.
அதனால் அந்தக் கொடியின் மீது கால்வைத்து ஏறி பெரிய வலை ஒன்றை அந்த மரத்தின் மீது விரித்து வைத்தான். மாலையில் கொக்குகள் எல்லாம் மரத்திற்கு திரும்பின. அப்போது கொக்குகள் மரத்தில் உட்காரவும் வேடன் விரித்த வேடன் விரித்திருந்த வலையில் சிக்கிக் கொண்டன. அப்போது அந்த வயதான கொக்கு மற்றவர்களைப் பார்த்து நான் தான் முதலிலேயே சொன்னேனே? கேட்டீங்களா?
அந்த சிறு கொடியை முதலிலேயே வெட்டி இருந்தால் நாம் எல்லாரும் இப்படி துன்பப் படவேண்டாம். பெரியவர்கள் வார்த்தையை மதித்து நடக்க வேண்டும். இல்லை என்றால் துன்பம் தான் என்று சத்தம் போட்டது.
வயதான கொக்கின் ஆலோசனை
கொக்குகள் எல்லாம் வயதான கொக்கின் பேச்சை கேட்காத தால் தலை கவிழ்ந்தன. அதற்கு வருத்தம் தெரிவித்தன. இப்பொழுது இந்த இககட்டிலில் இருந்து எப்படி தப்பிப்பது என்று யோசனை கேட்டது. உடனே வயதான கொக்கு வேடன் இனிமேல் நாளைக்குதான் வருவான். அவன் வரும்போது நாம் எல்லாரும் இறந்தது போல் அந்த இடத்திலேயே இருக்கவேண்டும். வேடன் நாம் இறந்து விட்டதாக நினைப்பான். ஒவ்வொருவராக எடுத்து கீழே வீசுவான். எல்லா கொக்குகளையும் கீழே தூக்கி வீசிய உடன் நாம் எல்லோரும் சேர்ந்து பறந்து சென்று விடுவோம். அப்படி செய்தால்தான் நாம் எல்லாரும் பிழைக்க முடியும் என்று ஆலோசனை கூறியது.
உயிர் பிழைத்த கொக்குகள்
மறுநாள் வேடன் அந்த மரத்திற்கு வந்தான். அவன் வந்து பார்க்கும்போது நிறைய கொக்குகள் இறந்து கிடப்பதைப் பார்த்தான். அவனுக்கு அதனை கண்டு மிகவும் மகிழ்ச்சியாகி விட்டது. உடனே ஒரு கொக்கை எடுத்து கீழே போட்டான். எல்லாத்தையும் எடுத்து கீழே போட்ட உடன் அனைத்து கொக்குகளும் எழுந்து மொத்தமாக பறந்து சென்று விட்டன.
கொக்குகள் அனைத்தும் வயதான கொக்கிற்கு நன்றி தெரிவித்தது. இனி உங்கள் பேச்சை கேட்டு நடப்போம் என்று கூறி சந்தோசமாக பறந்தன. வேடன் பெருத்த ஏமாற்றத்துடன் தன் வலையை எடுத்துக்கொண்டு வீட்டுக்கு நடையைக் கட்டினான்.
கதையின் நீதி
நாம் எவ்வளவு அறிவாளியாக இருந்தாலும் நம்மை விட வயதில் பெரியவர்கள் சொல்லும் அறிவுரையை கேட்க வேண்டும்.
No comments:
Post a Comment