நமது முன்னேற்றத்திற்கு தடையாக இருப்பது உணர்ச்சிவசப்படுதல் - விரிவாகப் பார்ப்போம் - ThulirKalvi

Latest

Search Here!

Friday, August 28, 2020

நமது முன்னேற்றத்திற்கு தடையாக இருப்பது உணர்ச்சிவசப்படுதல் - விரிவாகப் பார்ப்போம்

நமது முன்னேற்றத்திற்கு தடையாக இருப்பது உணர்ச்சிவசப்படுதல் - விரிவாகப் பார்ப்போம்

உணர்ச்சிகளை கட்டுப்படுத்துதல்

பொதுவாக ஒரு மனிதன் காரணம் இருந்தாலும் இல்லாவிட்டாலும் அடிக்கடி உணர்ச்சி வசப்படுவது அவர்களது மனமே காரணமாக அமைகிறது.  உள்ளத்தில் உறுதி இல்லாத போது தான் உணர்ச்சிகள் தறிகெட்டு தாண்டவம் ஆடத் தொடங்கிவிடும்.  உணர்ச்சிவசப்படுவது காரணமாக ஏற்படக்கூடிய விளைவுகள் கண்களுக்கு நேரடியாக உடனடியாக தெரிவதில்லை.  ஆனால் அதன் விளைவுகள் மறைந்திருந்து சிறுக சிறுக வலிமை பெற்று என்றோ ஒருநாள் பெரிய உணர்வுகளுக்கு அடிகோலி விடும். எனவே உணர்ச்சிகளை கட்டுப்படுத்தி வைத்து அவற்றை சீராக பயன்படுத்துவதை வாழ்க்கையின் அடிப்படை லட்சியங்களில் ஒன்றாக ஒவ்வொருவரும் கருதவேண்டும். 

உணர்ச்சி வசப்படுதலின் வகைகள்


உணர்ச்சிவசப்படுதல் என்ற பலவீனத்தை இரண்டு வகையாக பிரித்து நோக்கலாம்.  அன்பு, ஆதரவு, இரக்கம், ஈகை, காதல் போன்ற உணர்வுகள் காரணமாக தோன்றுகின்ற உணர்ச்சி அலைகள் ஒருவிதம்.  கோபம், ஆத்திரம், பொறாமை உணர்வு, தாழ்வு மனப்பான்மை, உயர்வு தாழ்வு மனப்பான்மை போன்ற காரணங்களால் தோன்றுகிற உணர்ச்சி அலைகள் ஒரு விதம். இரண்ட வகை உணர்ச்சிகளும் உள்ளத்தில் உடலில் ஒருவித அச்ச நிலையை தோற்றுவிக்கின்றன.  என்றாலும் அந்த அதிர்ச்சி அலைகள் இலேசான வித்தியாசம் இருப்பது ஒன்றே.  அன்பு, இரக்கம், ஈகை, காதல், ஆதரவு போன்ற பண்புகள் காரணமாக தோன்றுகின்ற உணர்வு அதிர்வுகள் கூடிய மட்டிலும் மென்மையாகவும் லேசாகவும் உடலையும் உள்ளத்தையும் தாக்கும் இயல்புடையன.

ஆதாரமான உறுப்புகள்


ஆனால் கோபம், ஆத்திரம், பொறாமை, பழிவாங்கும் மனப்பான்மை போன்ற காரணங்களால் தோன்றக்கூடிய உணர்ச்சிகள் மிகவும் தீவிரத் தன்மை வாய்ந்ததாகவும் கடுமையான அதிர்ச்சியை உடலிலும் உள்ளத்திலும் தோற்றுவிக்கக் கூடிய உணவாகும் உள்ளன அவை எந்த வகை அதிர்ச்சிகள் உடல்நலமும் மனநலமும் கடுமையாக பாதிக்கப் படக்கூடும். உணர்ச்சிகள் காரணமாக தோன்றுகின்ற அதிர்ச்சிகள் முக்கியமாக மூளையையும் நரம்பு மண்டலத்தையும் கடுமையாக பாதிக்கக் கூடிய இயல்பு படைத்த மனித உடலில் மிகவும் முக்கியமான உயிர் ஆதாரமான உறுப்புகள் மூளையும் நரம்பு மண்டலமும் ஆகும். 

இந்த இரண்டு உறுப்புகளும் சீர் கெட்டு விட்டால் யாரும் மனிதத் தன்மையுடன் வாழவே முடியாது. உணர்வும் அறிவும்,  ஆற்றலும் ஆற்றல் நடைப்பிணங்களாக தான் நம்ம நடமாட முடியும்.  உணர்ச்சிகள் தீவிரம் அடைந்ததற்கு உடலியல் காரணங் கள் உண்டு.  மனவியல் காரணங்கள் உண்டு. போதிய சத்து உணவு உண்ணாத காரணத்தால் உடல் வளர்ச்சி சீராக சரியாக இல்லாதவர்கள் உணர்ச்சிகள் தீவிரமாக இருப்பது போன்று அடிக்கடி நோய்வாய்ப்படும்.  நோய்வாய்ப்பட்ட பிறகு நெடுங்காலம் உடல்நிலை சரியில்லாமல்  இருப்பதும் கூட இதற்கு காரணமாக இருப்பது உண்டு. 

உடல் பலவீனம்


உழைப்பே இல்லாமல் சோம்பேறி வாழ்க்கை நடத்துவதும் அளவு அதிகரித்து உடலின் சக்தியை ஏற்படுத்திக் கொண்டவர்கள் அடிக்கடி உணர்ச்சி காரணமாக தோன்றும்.  அதிர்ச்சிக்கு ஆகிவிடுவது உண்டு.  பொதுவான உடல் பலவீனம் உணர்ச்சி குறைபாடுகளுக்கு வழிவகுத்துவிடும்.  மனவியல் வழிபட்ட உணர்ச்சிக் கொந்தளிப்பு என்று பார்க்கும்போது கோபத்துக்கு முதலிடம் தரலாம் கோபதாபங்களை கட்டுப்படுத்தி கொள்வதன் மூலம் உணர்ச்சிகளை பெருமளவு நிதான படுத்த முடியும் பொறாமை பழிவாங்க மனப்பான்மை உயர்வு தாழ்வு மனப்பான்மைகள் காரணமாகவும் உணர்ச்சிகளுக்கு இறக்கி விடுவது உண்டு

தன்னம்பிக்கை குறைவானவர்கள் எந்த நேரத்தில் தாங்கள் வாழ்க்கையில் வீழ்ச்சி அடைந்து விடக்கூடாது என்று எண்ணி எப்போதும் உணர்ச்சிகளை முதலில் இருந்து கொண்டே இருப்பர்.  சிலர் காரணமே இல்லாத அச்ச  உணர்வுக்கு  இலக்காகி எப்போதுமே மன நிம்மதியற்றுத்  தவித்துக் கொண்டிருப்பார்கள். 

யாரை கண்டாலும் யாரைப் பற்றி நினைத்துக் கொண்டாலும் இவர்களுக்கு மனதிலே ஒரு வித பீதி தோன்றும். தங்களை அழிக்க தங்களுக்கு சிரமம் தர அவர்கள் சதி செய்வதாக ஒருவித போலித்தனமான பிரமைக்கு அவர்கள்  இலக்காகித் தவிப்பார்கள். 

இப்படிப்பட்டவர்கள் உணர்ச்சி அலை மோதல்களுக்கு இலக்காகி  தவிப்பவர்களாகவே இருப்பார்கள்.  

காதல் உணர்வுகள்


வாழ்க்கையில் தொடர்ந்து ஏற்படும் தோல்விகள் சிலருக்கு உணர்ச்சிகளை தோற்றுவிக்கும்.  கவலைகள் ஏக்கங்களும் உணர்ச்சி அலை மோதுவது உண்டு. இளம்பிராயத்தில் மிகவும் தீவிரமான உணர்ச்சி மோதல்களை தோற்றுவிப்பதாக காதல் உணர்வுகளை அமைகின்றன.  காதல் வயப்பட்ட ஆண்களோ பெண்களோ கிட்டத்தட்ட பைத்தியம் பிடித்தவர்களின் நிலையை அடைந்து விடுகிறார்கள். அப்படிப்பட்ட  நிலையில் அவர்கள் மூளையின் செயல்பாடும் அடைந்துவிடுகிறது.  நரம்பு மண்டலத்தின் செயல்பாடு அதிர்ச்சி கலந்த அதிதீவிர தன்மை பெற்று விடுகிறது.  இதன் காரணமாக அவர்கள் அடையக்கூடிய உடல்நலம் மனநலம் கொஞ்ச நஞ்சமல்ல.  

உணர்ச்சி அலைமோதல்களுக்கு எந்தவகையிலும் இடம் தராமல் கட்டுப்பாட்டு உணர்வுடன் செயற்பட வேண்டும்.  காரணம் இருந்தாலும் இல்லாவிட்டாலும் உணர்ச்சி வசப்படக் கூடாது.  உணர்ச்சிவசப்படுவது உடல் ஆரோக்கியத்தை கெடுக்கிறது.  குறுகிய காலத்தில் முதுமைத் தோற்றத்தையும் முதுமை இயல்புகளையும் உடலில் அமைத்து விடுகிறது.  ஆயுளையும் குறுக்கி விடுகிறது.  

கோப தாப உணர்வு எந்த நிலையிலும் மனத்தில் இடம் பெறாமல் கவனித்து செயற்படவேண்டும்.  உள்ளத்தில் உணர்ச்சி அலைகளில் நிரந்தரமான ஒரு புது பாதுகாப்பினை பெற வேண்டுமென்றால் நமது எண்ணங்கள் மிகவும் உயர்ந்த வியாக அமைய வேண்டும்.  உயர்ந்த விஷயங்களை குறித்து சிந்திப்பதை அந்த சிந்தனை வழி செயற்படுவதை ஒரு நடைமுறை பழக்கமாக ஆக்கிக் கொள்ள வேண்டும்.  

பழக்க வழக்கங்கள்


தவறான எண்ணங்களும் மோசமான பழக்க வழக்கங்களும் அலை மோதல்களை ஊக்குவிக்கக் கூடியனவாகும்.  எந்த காரணத்தை முன்னிட்டும் யாருடனும் பகைமை பாராட்டாத மனப்பான்மையை வளர்த்துக் கொள்வதன் மூலம் அலை மோதல் இல்லாதமன நிலையைப் பெற முடியும்.  எண்ணங்களில் அமைதி இருக்குமானால் உணர்ச்சி அமைதி என்பது நிச்சயமாக எதிர்பார்க்கலாம்.  

திட்டமிட்ட உழைப்பு முறை எப்போதுமே மன ஆரோக்கியத்தை வளர்க்கக் கூடியதாகும்.  சீராக உழைப்பதில் நமது அன்றாட கடமையாகக் கொண்டு விட்டோம் ஆனால் மனம் எப்போதுமே பரிசுத்தமாக இருக்கும். 


இதன் காரணமாக உணர்ச்சிகள் எந்த நிலையிலும் சீராகவும் ஒரு ஒழுங்கு முறையுடன் கூடியதாகவும் அமையும்.  

நல்ல உழைப்பாளி கோப தாப உணர்வுகளுக்கு அப்பாற்பட்ட ஒன்றாக உயர்ந்த எண்ணம் போக்கினை உடையவனாக பெருந் தன்மையுடன் கூடிய செயற்பாடு உடையவனாக இருப்பதை நாம் சாதாரணமாகக் காண முடியும். 

இந்த நிலைக்கு மாறுபட்டு உழைப்பை புறக்கணித்து சோம்பேறியாக ஊர் சுற்றிக் கொண்டிருப்பவன் உடைய மனநிலை மாசு கிடக்கும். 

உயர்ந்த சிந்தனையும் சிறந்த இயல்புகளும் அவன் மனதில் நிச்சயமாக பொரிந்தியிருக்காது.  எப்போதும் பொறாமை வஞ்சகம் சுரண்டல் மனப்போக்கு போன்றவை அவனிடம் குடி கொண்டிருக்கும்.  ஆகவே மன உளைச்சலை உணர்ச்சிகளை கட்டுப்படுத்தி அதனை பலவீனமாக அல்லாமல் வலிமையாக வல்லமையாக மாற்றி பயன் அடைய வேண்டுமானால் ஏதாவது ஒரு வகை உழைப்பை நம்முடையதாக ஆக்கிக்கொள்ள வேண்டும்.

உணர்ச்சிகளை ஒழுங்குபடுத்தி உபயோகிக்க நம்மிடம் பண்பாட்டு வயப்பட்ட பழக்க வழக்கங்களை உண்டாக்கிக் கொள்ள வேண்டும்.  

பொழுதுபோக்கு


நல்ல நூல்களைப் படித்தல் நல்ல அறிஞர்களின் சொற்பொழிவுகளை கேட்டல, திரைப்படம், நாடகம் போன்றவற்றில் அறிவு வளர்ச்சிக்கு உதவக்கூடிய காட்சிகளை கண்டு களித்தல்.  நல்ல நண்பர்களுடன் அடிக்கடி கலந்துரையாடல். சுயநலமற்ற சேவை,  நமது பொழுதை முடிந்து மட்டில் அன்றாடம்  செலவிடுதல் போன்றவற்றை நமது பழக்க வழக்கங்களாக கொண்டு விட்டோம் ஆனால்,  உள்ளம் பண்பாட்டு திருப்தி நிறைந்த அமைதி நிலவத் தொடங்கும். 

உள்ளத்தில் இத்தகைய அமைதி நிலை பெறும் போது நமது உணர்ச்சிகளின் இயக்கத்திலும் ஒழுங்குமுறையும் கட்டுப்பாடும் நிலவத்தொடங்கும். 

முடிவுரை


இக்காரணத்தால் உணர்ச்சிகள் கொந்தளித்து உடல் மற்றும் மன அதிர்ச்சியை தோற்றுவிக்காமல் உணர்ச்சிகள் இயல்பாக செயல்பட தூண்டும்.  உணர்ச்சிகள் இயல்பாக செயல்படும்போது  உணர்ச்சிகளே நமது வலிமைக்கான ஆதாரமாகத் திகழும்.