நமது முன்னேற்றத்திற்கு தடையாக இருப்பது எது? நமது பழக்கவழக்கங்களே நம் பலவீனம் - ThulirKalvi

Latest

Search Here!

Thursday, August 27, 2020

நமது முன்னேற்றத்திற்கு தடையாக இருப்பது எது? நமது பழக்கவழக்கங்களே நம் பலவீனம்

நமது முன்னேற்றத்திற்கு தடையாக இருப்பது எது?  நமது பழக்கவழக்கங்களே நம் பலவீனம்

வாழ்க்கையில் தங்கள் திறமை ஆற்றல் ஆகியவற்றை முன்னிறுத்தி முன்னேற வேண்டும் என்றுதான் பொதுவாக எல்லோருக்கும் ஆர்வமும் ஆசையும் இருக்கிறது.  ஆனால் நல்ல தகுதியும் திறமையும் உழைப்பாற்றலும் உள்ள எல்லாருமே வாழ்க்கையில் உயர்வடைந்து விடுகிறார்கள் என்று கூறுவதற்கு இல்லை. 

சில சமயம் பெரிய தகுதியும் திறமையும் இல்லாதவர்கள்கூட வாழ்க்கையில் மிக எளிதாக முன்னேறி விடும் அதிசயம் நிகழத்தான் செய்கிறது.  நல்ல திறமையுள்ள ஒருவன் வாழ்க்கையில் முன்னேற்றம் அடையாமல் போவதற்கு பல காரணங்கள் உண்டு.  அவற்றில் குறிப்பிடத்தக்கது சிலரிடம் அமைந்திருக்கும் சில வினோதமான பழக்க வழக்கங்கள் ஆகும்.  

பழக்க வழக்கம்


சிலரிடம் நியாயமான காரணம் ஏதுமில்லாமல் சில பழக்க வழக்கம் அமைந்துவிடுவது உண்டு.  இத்தகைய பழக்க வழக்கங்கள் சிலரிடம் பிறவியிலேயே அமைந்து விடும்.  நண்பர்களின் கட்டு கூட்டு காரணமாக சிலருக்கு சில பழக்கவழக்கங்கள் அமையக்கூடும்.  சூழ்நிலை காரணமாகவும் தேவையற்ற பழக்கவழக்கங்கள் சிலரிடம் அமைந்துவிடுவது உண்டு.

வளர்ப்பு முறை


பெற்றோரின் வளர்ப்பு முறை கோளாறு காரணமாகவும் சிலரிடம் உதவாத சில பழக்கவழக்கங்கள் அமைந்து விடும்.  அளவுக்கு மீறி அடக்கி ஒடுக்கி சுதந்திரம் இல்லாத வளரும் குழந்தைகளும்,  அளவுக்கு அதிகமாக செல்லம் கொடுத்து வளர்க்கப்படும் சில குழந்தைகள் எதிர்காலத்தில் தன்னம்பிக்கையற்ற அச்ச உணர்வு கொண்டவர்களாக ஆகிவிடுவார்கள்.  

இவர்களலால் வாழ்க்கையில் துணிச்சலாக முன்னேற முடியாது. வாழ்க்கையில் பிரச்சினைகள் ஏற்படும்போது அவர்கள் நிலைகுலைந்து செயலற்றவரர்களாகி தாழ்ந்து விடுவார்கள்.  பழக்க வழக்கங்கள் காரணமாக வாழ்க்கையில் முன்னேற்றத்தைக் காண முடியாத சிலரைப் பற்றியும் அவர்களுக்கு இடையூறாக அமைந்து விட்ட சில பழக்க வழக்கம் பற்றியும் இந்தப் பதிவில் காண்போம்.

அவநம்பிக்கை மனப்பான்மை


நம்பிக்கைதான் உலக வாழ்க்கையின் உயிரோட்டமான அம்சமாகும். நம்பிக்கைதான் வாழ்க்கையில் நிம்மதியையும் மகிழ்ச்சியையும் அளிக்கிறது. உலகத்தில் நமது சூழ்நிலை எதுவாக இருந்தாலும் நம்பிக்கை வைத்து தான் ஆக வேண்டும்.  நம்மை சூழ்ந்து நடமாடும் ஒவ்வொரு மனிதரையும் மனப்பூர்வமாக நம்புவது தான் நாம் நிம்மதியாக வாழ துணைபுரியும். 

அவநம்பிக்கை


இப்படிப்பட்ட நம்பிக்கை மனப்பான்மை பலருக்கு இருப்பதில்லை.  எந்த விஷயத்திலும் அவர்களுக்கு அவநம்பிக்கையை தான் எந்த மனிதரையும் அவர்களால் முழுமனதுடன் நம்ப முடிவதில்லை.  மனைவி மக்களைக் கூட நம்பாமல் வாழ்க்கை நடத்துவோருக்க நமது நாட்டில் பஞ்சமே இல்லை.

மனிதர்களுக்கு அவநம்பிக்கை தோன்றுவதற்கு முக்கியமான காரணம் நடுநிலை மனபான்மை இல்லாததுதான்.  வாழ்க்கையின் எந்த அம்சத்தையும் அல்லது எந்த பிரச்சினையும் நாம் நடுநிலையிலிருந்து ஆராய்ச்சி செய்தோம் ஆனால் மிகவும் சிக்கலாக குழப்பமாகவும் தோன்றிய பல விஷயங்கள் மிகவும் தெளிவாக குழப்பமின்றி தமது பார்வையில் படுவதை உணர முடியும். 

இதேபோன்று நம்மோடு பழழகும் மனிதர்கள் தொடர்பாக நமது நோக்கில் இருந்து சிந்தனை செய்யாமல் நடுநிலை நோக்கிலிருந்து ஆராய்ந்தால் யார் மீதும் நமக்கு அவநம்பிக்கை ஏற்படாது.  மற்றவர்கள் மீது தவறான அபிப்ராயம் தோன்றுவதற்கு நாம் நமது கோணத்தில் அவர்கள் இயல்பு பேச்சு நடைமுறைகளை எடைபோடுவதுதான். 

மற்றவர்களுடைய மனப்போக்கு நடவடிக்கை குண இயல்பு போன்றவற்றை தெளிவாக உணர்ந்து கொள்ளாத காரணத்தால் அவர்களை பற்றிய விவரங்கள் நமக்குத் தெளிவாக விளங்குவது இல்லை. 

நாமோ நமது இயல்புகளை வைத்து மற்றவர்களை எடை போடத் தொடங்கி விடுகிறோம்.  நம்முடன் பழகுவோர் எல்லோரும் கோப உணர்ச்சி இல்லாத சாந்த சொரூபியாக இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.  நம்முடைய இந்த எதிர்பார்ப்புக்கு ஏற்ப எல்லாரும் இருந்து விடமாட்டார்கள்.  

நாம் எதிர்பார்க்கும் விதத்தில் மற்றவர்கள் சாந்த சொருபிகளாக இல்லாமல் போனதற்கு அவர்களின் சொந்த வாழ்வு பிரச்சினைகள் ஏதாவது காரணமாக இருக்கலாம். 

சட்டென உணர்ச்சி வசப்பட்டு கோப தாப உணர்வு கொள்வது இயல்பு. வாழ்க்கையில் திடீரென ஏற்பட்ட ஏதாவது ஒரு அதிர்ச்சி காரணமாக அவர்கள் மனம் குழம்பி இருக்கும் நேரத்தில் அவர்களுடன் உரையாட முற்பட்டு இருக்கலாம். 

இவ்வளவு விளக்கமாக நாம் ஆராய்ச்சி செய்ய இயலாவிட்டாலும் நாம் பழக முற்படுவோரிடம் அதிகமான காண நேர்ந்தால் அது அவர்கள் இயல்பு போலும் என்று நாம் சற்று பொறுமையுடனும் நிதானத்துடனும் அவர்களிடம் பழக முற்பட்டால் அவர்கள் சரியாக நாம் எதிர்பார்த்த அளவுக்கு பின்னாளில் வந்துவிடக்கூடும். 

தோற்றத்தை வைத்து எடைபோடுதல் தவறு


இதற்கு மாறாக ஒரு மனிதரைப் பார்த்து கொஞ்ச நேரம் உரையாடி அனுபவத்தை வைத்து இவன் அயோக்கியன்,  அவன் பொய்யன்,  அந்த மனிதன் வஞ்சகன்,  நம்பிக்கை துரோகம் செய்பவன் என்று முத்திரை குத்தி கொண்டே சென்றால் நாம் ஒருவரை தவிர மற்ற எல்லா மக்களுமே புறக்கணித்து ஒதுக்க வேண்டி வரும்.  

பிறவி பற்றிய பெரும்பான்மை மக்களின் தீர்மானம் வெறும் கற்பனை கண்ணோட்டத்தில் அமைவதுதான் வழக்கமாக இருக்கிறது.  நமது மனதில் உருவெடுக்கும் அவநம்பிக்கை என்ற பொய்த் தோற்றத்தை மற்ற மனிதர்களின் பொருத்திப் பார்த்து அதை அவர்களின் இயல்பாகவே கணித்து விடுகிறோம். 

சிலர் வேறு விதமான வினா ஒன்று எழுப்புவார்கள்.

சிலரை நாம் மனப்பூர்வமாக நம்புகிறோம். ஆனால் அவர்கள் நமக்கு நம்பிக்கை துரோகம் செய்து விடுகிறார்கள்.  அப்படி இருக்க சகட்டுமேனிக்கு எல்லாரையும் எப்படி நம்ப முடியும்?  நாம் நம்பும் பலரில் ஒருவர் நம்பிக்கை துரோகம் செய்யக் கூடும்.  அதனால் நமக்கு ஏதாவது நஷ்டம் ஏற்படவும் கூடும்.  ஆனால் இவ்வாறு நம்பிக்கை துரோகம் செய்தவர்கள்,  நம்புவோர் நூற்றுக்கு ஒருவராகத்தான் பொதுவாக இருக்க முடியும் என்று புலம்பும் ஒருவரை சந்தித்து எத்தனை பேரை நம்பினீர்கள்?  எத்தனை பேரு உங்களை மோசம் செய்து விட்டார்கள் என வினவினால் தம் வாழ்நாளில் ஒன்று அல்லது இரண்டு பேரிடம் தான் அவர்களது அனுபவத்தை பெற்றிருக்கக்கூடும். 

நம்பிக்கைக் கொள்வோம்


நூற்றுக்கணக்கான மக்களை நம்பாமல் அவர்கள் மீது அவநம்பிக்கை கொண்டு செயல்படும் போது நமது வாழ்க்கை தொடர்பாக அல்லது தொழில் தொடர்பாக எல்லா பொறுப்புகளில் நாமே மேற்கொண்டு நிறைவேற்ற வேண்டியிருக்கும்.  10 பேர் செய்ய வேண்டிய பணியை பெரும் சுமையாக நாமே சுமந்து செயற்படும் போது நிகழும் தவறுகள் காரணமாக நாம் பல வகையிலும் இழப்புக்கு உள்ளாக வேண்டிவரும்.  ஆகவே இழப்பு,  நஷ்டம் என்பனவெல்லாம் எந்த நிலையிலும் நிகழக்கூடும்.  அதனால் சிலர் செய்யும் நம்பிக்கை துரோகம் ஒரேடியாக இழப்பு ஏற்பட்டுவிடும் என்று கூற இயலாது.

நம்பிக்கை அடிப்படையில் வாழ்வோம்


மற்ற யாரையும் நம்பாமல் நாம் செயற்படும் போது நமது மனதில் நிம்மதி இருக்காது.  மகிழ்ச்சி இருக்காது.  யார் எந்த நேரத்தில் காலைவாரி விடுவார்களோ என்ற சந்தேகத்துடனே நமது காலத்தை கழிக்க வேண்டியிருக்கும்.  இரவில் கூட நிம்மதியாக உறங்க முடியாது.  எப்போதுமே ஒருவித பரபரப்புடனும் பதைபதைப்புடனும் காலத்தை ஓட்டிக் கொண்டிருக்க நேரிடும்.  நாம் மற்றவர்களை நம்பி செயற்படும்போது மனநிம்மதியும் மகிழ்ச்சியுமாவது மிஞ்சும்.  ஆகவே நம்பிக்கை அடிப்படையில் வாழ முற்படுவதே நமக்கு வாழ்க்கையில் ஒரு பலமாகும்.  எனவே அவநம்பிக்கை சந்தேகமின்றி ஒரு பலவீனமே.