நீங்க மற்றவர்களைச் சார்ந்து வாழ்கிறீர்களா? கவனிங்க... நீங்க ஒருபோதும் முன்னேற முடியாது......! - ThulirKalvi

Latest

Search Here!

Tuesday, September 1, 2020

நீங்க மற்றவர்களைச் சார்ந்து வாழ்கிறீர்களா? கவனிங்க... நீங்க ஒருபோதும் முன்னேற முடியாது......!

நீங்க மற்றவர்களைச் சார்ந்து வாழ்கிறீர்களா? கவனிங்க... நீங்க ஒருபோதும் முன்னேற முடியாது......!

மனிதன் தன்னந்தனியாக வாழும் இயல்புடையவன் அல்லன்.  ஒரு சமுதாயமாக சேர்ந்து வாழ்வதே மனித இயல்பு.  பல மனிதர்கள் ஒன்று சேர்ந்து ஒரு சமுதாயமாக இணைந்து நிற்கிறார்கள் என்றால் ஒவ்வொரு மனிதனும் தனது தனித்தன்மை தனி ஆற்றல் இழந்து ஆட்டு மந்தையைப் போல ஒன்றாக சேர்ந்து இருக்கிறான் என்று பொருளல்ல.  

இன்றிருக்கும் சமுதாயம் என்பது ஏதோ ஒரு மர்ம சக்தி பல்லாயிரக்கணக்கான மக்களை ஒரு தனி அறையில் போட்டு அடைத்து வைத்திருப்பது அடையாளம் என்பது போல சிலர் எண்ணி விடுகிறார்கள்.  அது தவறான கண்ணோட்டம்.  

சமுதாயமாக ஒன்றிணையும் போது எந்த மனிதனும் தன் சுதந்திரத்தை இழந்து விடவில்லை.  தன் அறிவை இழந்து விடவில்லை.  தன் திறமை ஆற்றலை இழந்து விடவில்லை.  இவை அனைத்தையும் இழக்காமல் ஒவ்வொரு மனிதனும் தன் தகுதியை காப்பாற்றிக் கொண்ட நிலையில் சமுதாயமாக இணையும் போதுதான் அந்த சமுதாய ஜீவகளை உள்ளதாக அமைகிறது.

நம்முடைய அறிவு,  ஆற்றல்,  தகுதி,  திறமை,  உழைப்பு ஆகிய தனித்தன்மை எதையும் விட்டுவிடாமல் நமக்கென ஒரு வாழ்க்கை நிலையினை அமைத்துக் கொண்டு அந்த நிலையில் நம்மால் இயன்ற உதவியைப் பிறருக்கு அளிப்பதும் நமக்கு தேவையான உதவியைக் கோரிப் பெறுவதும் தான் சமுதாய அமைப்பின் உயர்ந்த பண்பாட்டு நிலை. 

வாழ்க்கை முறை


இதற்கு மாறாக நமது அறிவு சிந்தனை,  செயல்பாடு,  ஆற்றல்,  தகுதி போன்ற எதையும் வைத்துக் கொள்ளாமல் மற்றவர்களை சரணடைந்தவர்களை நம்பியே வாழ்க்கையை அமைத்துக் கொள்வது முதுகெலும்பு இல்லாதவர்களின் கேவலமான வாழ்க்கை முறையாகும்.  

இதில் மிகப்பெரிய பலவீனமாகும்,  இப்படிப்பட்ட பலவீனத்திற்கு இலக்கான பலரை வாழ்க்கையில் தாராளமாக சந்திக்க முடிகின்றது.  இவர்கள் வாழ்நாள் முழுவதும் கிட்டத்தட்ட அடிமைகளைப் போல தான் வாழ்கிறார்கள்.  யாரைநம்பி அல்லது யாருடைய ஆதரவின் கீழ் இவர்கள் வாழ்கிறார்களோ அவர்கள் திடீரென கைவிட்டு விட்டால் என்ன செய்வது என்ற பீதி இவர்கள் மனத்தை வாழ்நாள் முழுவதும் பிடித்து ஆட்டிக் கொண்டிருக்கும்.

அடிமைகள்


தங்களுடைய வாழ்க்கையை காப்பாற்றிக் கொள்ள வேண்டும் என்பதற்காக தங்கள் எஜமானர்களிடம் அடிமைகள் போல நடந்து கொள்வார்கள். அவர்கள் தங்களை எவ்வளவு கேவலமாக நடத்தினாலும் பொருட்படுத்த மாட்டார்கள். தங்கள் பிழைப்பு போய்விடுமோ என்று தங்கள் ஊதியத்தை கூட மேலும் மேலும் குறைத்துக் கொள்வார்கள்.  இத்தகைய மனிதர்கள் திடீரென ஒருநாள் ஒரு வித காரணமும் இல்லாமல் நடுத்தெருவில் நிற்க வேண்டி வரும். ஏனெனில் இவர்கள் உழைப்புக்கு எந்தவித பாதுகாப்பும் இருக்காது. 

இவர்களை விட குறைவான ஊதியம் பெற யாராவது தயாராக இருந்தால். அவர்களை வைத்துக் கொண்டு இவர்களை பராமரிப்போர் வெளியே துரத்தி இருப்பார்கள்.  இம்மாதிரி பிறரை நம்பியே வாழ்க்கை நடத்த கூடியவர்களுக்கு முக்கியமாக தன்னம்பிக்கை இல்லாத குறை தான் இருக்கும். 

பிறரைச் சார்ந்து வாழ்தல்


தங்கள் திறமையை வளர்த்துக் கொள்ளாதவர்கள்,  அவர்கள் தங்களுக்கு என ஒரு தகுதியை உண்டாக்கி கொள்ளாதவர்கள்,  சுயமாக சிந்தனை செய்து அந்த சிந்தனை வழி செயல்பட முடியாதவர்கள்,  நிச்சயமாக பிறரை சார்ந்து வாழ விரும்புவார்கள்.  

இந்தப் படுமோசமான பலவீனத்தை அடியோடு மாற்றி கொள்ள வேண்டும். பயந்து பயந்து வாழ்க்கை நடத்து பவர்களும்,  சமுதாய விரோத செயல் எதையாவது செய்து விடுவோம் என்று தயங்கி தயங்கி வாழ்பவர்களும் முழுமையான மனிதர்கள் என்று சொல் என்ற சொல்லுக்கே தகுதியற்றவர்கள் என்றே கூறவேண்டும்.  

தொட்டால் சுருங்கி


தொட்டால் சுருங்கி என்று ஒரு செடி இருப்பதை பலர் பார்த்திருக்கலாம் அல்லது அதைப் பற்றி கேள்விப்பட்டு இருக்கலாம்.  அந்த செடியை விரலால் தொட்டால் செடியின் இலைகள் சுருங்கி தளர்ந்து வாடி குவிந்துவிடும். இதே மாதிரி தொட்டால் சுருங்கி மனப்பான்மை பெற்றவர்கள் பலர் நாட்டில் இருக்கிறார்கள்.  யாராவது இவர்களை பார்த்து ஒரு சுடுசொல் சொன்னாலும் இவர்கள் மனம் பொறுக்க மாட்டார்கள்.  

ஏதாவது ஒரு சிறிய முயற்சியில் தோல்வியுற்றாலும் இவர்கள் நிலை குலைந்து விடுவார்கள்.  இவர்கள் செய்த தவறை யாராவது சுட்டிக்காட்டினால் இவர்களுடைய கை கால்கள் நடுங்க தொடங்கி விடும்.  இவர்கள் செய்யும் பணி பற்றி யாராவது குறை சொன்னால் இவர்களுக்கு வாழ்க்கையில் விரக்தியே தோன்றிவிடும்.  இந்த மாதிரி தொட்டால் சுருங்கி மனப்பான்மை உள்ளவரகளால் தங்களுக்கென ஒரு தனித்தன்மை பெற்று தற்காப்புடன் நிமிர்ந்து நிற்க முடியாது.    

தகுதி


வாழ்க்கையில் தமக்கென ஒரு தகுதியை உண்டாக்கிக் கொள்ள வேண்டுமானால் நமக்கென நமது வாழ்க்கைக்கென சில திட்டங்களை ஒழுங்கு முறையை வகுத்துக் கொண்டு அவற்றை பிடிவாதமாகச் செயற்படுத்த முனைய வேண்டும். 

இவ்வாறு செயற்படும்போது துணிச்சலும் தன்னம்பிக்கையும் நமக்கு இருக்க வேண்டும்.  நமது வாழ்க்கை திட்டத்தை செயல்படுத்தும் போது யார் என்ன சொல்வார்களோ யார் குறை கூறுவார்கள் என்றெல்லாம் நம்மை நாமே பலவீனப்படுத்தி கொள்ளக்கூடாது.  

நமது செயல் நியாயமற்றது என்று நிரூபிக்கப்பட்டால் நமது செயல் முறையை மாற்றிக் கொள்ளலாம் நமது திட்டங்களில் ஏதாவது குறைபாடு இருப்பதை உணர்ந்தால் அந்த குறையை சீர் செய்து கொள்ளலாம்.  நமது செயல்பாடு யாருக்காவது துன்பம் தரக் கூடியதாக இருப்பதாக தெரிந்தால் செயல்முறையை பிரித்துக் கொள்ளலாம்.  ஆனால் என்ன நடந்து விடுமோ என்று முன்னதாகவே எண்ணி குழம்பி நமக்கென ஒரு தனித் தன்மையை உண்டாக்கி கொள்ளாமல் பிறரை சரணாகதி அடைந்து கொள்வது கோழைத்தனம் ஆகும்

தன்னம்பிக்கை


தன்னம்பிக்கையும்,  தனக்கென ஒரு தகுதியும்,  கடுமையான உழைப்பில் நாட்டமும் தீவிரமான முயற்சி மனப்பான்மையும் ஒருவருக்கு இருந்தால் நிச்சயமாக அவர்கள் பிறரை சார்ந்து வாழ்வில் சுதந்திரமான தற்காப்பு வாழ்வு வாழலாம் எப்படியாவது உயிர் வாழ்ந்தால் போதும் என்று எண்ணி கோழைத்தனமான வாழ்வு வாழ கூடாது.  

இப்படித் தான் வாழ்ந்தாக வேண்டும் என்று திட்டமிட்டு அந்த திட்டமிட்டபடி வாழ வேண்டும்.  இப்படிப்பட்ட இலட்சிய வாழ்வில் பல இடையூறுகள் ஏற்படலாம்.  தொல்லைகளை எதிர் பார்க்க வேண்டியிருக்கும்.  பலருடைய விரோதம் வந்து சேரக் கூடும்.  பல முறை தோல்வியை சந்திக்க வேண்டி வரக்கூடும். 

இவற்றை எல்லாம் விட நமக்கு நாமே அமைத்துக் கொண்ட சுதந்திர வாழ்வு மிகவும் உயர்ந்தது.  சுவை மிக்கது என்ற எண்ணம் நமக்கு ஏற்பட வேண்டும் நமது தனித்தன்மையை இழந்து சொகுசான வாழ்க்கை வாழ்வதை விட சுதந்திரமாக போராட்டமான வாழ்க்கையை நடத்தலாம்.  சுதந்திரமான வாழ்க்கை பாதுகாப்பானது.  நிம்மதி தரக்கூடிய நிரந்தரமான ஒன்றாகும்.

சில விரும்பத்தகாத தகாத தகாத விரும்பத்தகாத பழக்கவழக்கங்கள்


சிலர் ஏதாவது அங்க சேஷ்டைகளை செய்துகொண்டே இருப்பார்கள். தலையையோ கை கால்களையும் தேவையில்லாமல் அவலட்சனம் தோன்ற ஆட்டிக் கொண்டு இருப்பார்கள். 

சிலர் தனிமையில் இருக்கும் போதும் தனக்கு தானே பேசிக் கொள்வார்கள் அல்லது சிரித்துக் கொள்வார்கள்.  மேலோட்டமாக பார்க்கும்போது இவையெல்லாம் அற்பவிஷயமாகத் தோன்றும்.  இவ்வாறு அங்க சேஷ்டை செய்வோருக்கு இவை விளைவிக்கும் அருவருப்பு தோற்றம் பற்றி ஒன்றும் விளங்காமல் இருக்கலாம்.  

ஆனால் அந்த சேஷ்டைகளைக் காணிவோர் உள்ளத்தில் மிகவும் அருவருப்பான உணர்ச்சி ஏற்படும்.  அதன் காரணமாக அவர்களிடம் நெருங்கிப் பழக பேசக்கூட மற்றவர்கள் அசூயைப் நேரிடலாம்.  

சிலர் சதா வளவளவென்று பேசிக் கொண்டிருப்பார்கள்.  காரணம் இருந்தாலும் இல்லாவிட்டாலும் இவர்கள் பேசத் தவற மாட்டார்கள்.  மற்றவர்கள் பேசுவதை அவர்கள் காதில் வாங்கி கொள்ளமாட்டார்கள்.  மற்றவர்களுக்கு பேச வாய்ப்பே கொடுக்காமல் இவர்கள் பேசிக் கொண்டே இருப்பார்கள்.  இப்படிப்பட்டவர்களை கண்டாலே அனுபவப்பட்ட பலர் மெல்ல மெல்ல அவர்களிடம் மாட்டிக் கொள்ளாமல் எப்படி தப்பித்துக் கொள்வது என்று துடிப்பார்கள். 

இம்மாதிரி பழக்கம் உள்ளவர்களுக்கு நல்ல நெருக்கமான நண்பர்களே இருக்க மாட்டார்கள்.  இவர்களுடைய வாய்ப்பேச்சு காரணமாக விரோதிகள் தான் நிறைய தோன்றுவார்கள்.  சிலருக்கு மற்றவர்களுடன் வாதம் செய்வதே வழக்கம்.  இவர்கள் வாதம் செய்வதற்கு பிரமாதமான விஷயம் ஏதும் தேவையில்லை.  அற்ப காரணங்களுக்காக தீவிரமாக களத்தில் இறங்கிவிடுவார்கள்.  வாதம் செய்யும் போது பரஸ்பரம் விட்டுக்கொடுத்து விவாதம் செய்வதாக இவர்கள் பேச்சு இருக்காது. 

தான் பிடித்த முயலுக்கு மூன்றே கால் என்பது போல தங்கள் நினைப்பது பிறர் மீது திணிக்க முற்படுவார்கள்.  மற்றவர்கள் சொல்வதில் நியாயம் இருந்தால் கூட அதை ஒப்புக்கொள்ள மாட்டார்கள்.  தாங்கள் சொல்வதே சரியென வாதிப்பார்கள்.

நீங்க மற்றவர்களைச் சார்ந்து வாழ்கிறீர்களா? கவனிங்க... நீங்க ஒருபோதும் முன்னேற முடியாது......! எனேவே நாம் மற்றவர்களைச் சார்ந்து வாழாமல் வாழ்கையில் முன்னேறுவோமாக.