வைத்த கொள்ளி யாருக்கு? தமிழ் சிறுகதை - துளிர்கல்வி

Latest

Monday, August 31, 2020

வைத்த கொள்ளி யாருக்கு? தமிழ் சிறுகதை

வைத்த கொள்ளி யாருக்கு? தமிழ் சிறுகதை


துறவியின் குண நலன்கள்


ஓர் ஊரில் இளம் துறவி ஒருவர் இருந்தார். காணிக்கை என்றோ யாசகமாக எவரிடமும் அவர் எதையும் பெற்றுக் கொள்ள செல்வதில்லை.  தமது குடிலைச் சுற்றிலும் தோட்டம் போட்டு காய்கறி பயிர் செய்து வந்தார்.  விளைந்ததை விற்று வந்தவர் அவை கொண்டு திருப்தியாக வாழ்ந்து வந்தார்.  

தம்மிடம் ஆசி வேண்டும் எவருக்கும் " நன்மை செய்தால் நன்மை விளையும்" "தீமை செய்வதால் தீமை விளையும்"  என்று தான் வாழ்த்துவார்.  

வந்து வணங்குகிற எவருக்கும் எல்லா நன்மையும் உண்டாகும் என்று மற்ற சாமியார்கள் போல ஆசி வழங்கும் பழக்கம் அவரிடம் இல்லை.  அந்த ஊர் அரசருக்கும் இந்த துறவியிடம் மிகுந்த மரியாதை உண்டு.  அரசர் நல்லவர் அதனால் துறவியும் அவரை மதித்தா. ர் அரண்மனை வளாகத்திலேயே ஒரு ஆலயம்,  நாள்தோறும் அதிகாலையில் அரசர் அந்த கோயிலுக்கு சென்று தமது உடைவாளை  சந்நிதானத்தில் வைத்து வணங்குவது வழக்கம்.  

அந்த நேரத்தில் துறவியும் அங்கு போவார்.  அரசரையும் பெரியவர்களையும் காணப் போகும்போது வெறுங்கையுடன் போகக்கூடாது.  எனவே துறவி இரு எலுமிச்சம் பழங்களை கொண்டு போய் கொடுப்பார்.  வழக்கப்படி மன்னருக்கு கூட  " நன்மை செய்தால் நன்மை உண்டாகும்"  "தீமை செய்தால் தீமை உண்டாகும்"  " விதைத்தது முளைக்கும்" என்றுதான் கூறுவார்.  

வாளை மறந்த மன்னர்


ஒருநாள் வழக்கம்போல ஆலயத்துக்கு போனார்.  மன்னர் அங்கே போன பிறகுதான் அந்தப்புரத்திலேயே உடைவாளை வைத்துவிட்டு வந்தது ஞாபகத்திற்கு வந்தது. வழிபாட்டை இடையில்  விட்டுவிட்டு மன்னர் போவதற்கு இயலவில்லை.  

அந்தப்புறத்திற்கு சென்ற துறவி


அப்போது அங்கு வந்த துறவி சங்கதி அறிந்தார்.  அரண்மனை சென்று உடைவாளை எடுத்து வருவதாக கூறி புறப்பட்டார் துறவி.  உடைவாளை எடுத்து செல்ல அரண்மனை சென்றதுமே அந்தப்புரத்தில் அரசியும் அமைச்சரும் சல்லாபமாக  இருப்பதைக் கண்டு திடுக்கிட்டார். அ

அரசியும் அமைச்சரும் அரசருக்கு இப்படி ஒரு துரோகத்தை செய்வார்கள் என்று யார்தான் எண்ணியிருக்க முடியும்?  துரோகிகளின் அந்தப் பாதக செயலை பார்ப்பதும் பாவம் என்று அவர்கள் பக்கம் திரும்பியும் பாராமல் உடைவாளை எடுத்து கொண்டு விரைந்து சென்று விட்டார் துறவி.  

அரசியின் கலக்கம்


அரசியையும் அமைச்சரையும் துறவி திரும்பி பார்க்கவில்லையே தவிர அவரை அவர்கள் இருவரும் பார்த்துவிட்டார்கள்.  அரசரிடம் துறவி சொல்லாமல் இருக்க மாட்டாரே,  தங்கள் கதி  என்ன ஆகுமோ என்று இருவருக்கும் பயத்தால் உடல் பதறியது.  வழிபாடு முடிந்து அரண்மனை திரும்பினார் அரசர்.  அரசரிடம் எவ்வித மாறுதலும் இல்லை.  எப்போதும் போலவே மற்றவர்களிடம் இன் முகத்துடன் உரையாடியபடி அரசு அலுவல்களை கவனித்து வந்தார்.  அரசியும் அமைச்சரும் இதனை கவனித்தனர்.  இருவருக்கும் போன உயிர் திரும்பியது.  

ஒருவேளை , அரசர் தாம் தாம் ஒன்றும் தெரியாதவர் போல் பாவனை செய்கிறாரோ?  அன்றிரவு வழக்கம் போல அரசன் அந்தப்புரத்துக்கு சென்றான்.  கலக்கத்தில் ஏதும் பேசாமல் எங்கோ பார்த்துக் கொண்டிருந்தாள் அரசி. வழக்கமான கலகலப்பு இல்லை.  இது என்ன ஊடல்?  இந்த ஊடலுக்கு என்ன காரணம் என்று அரசர் எண்ணிப் பார்த்தார்.  

ஓஹோ அந்தப்புரத்துக்கு யாரை அனுப்பலாம்?  யாரை அனுப்பக்கூடாது என்று தெரியாமல் துறவியை அனுப்பி வைத்தேனே?  அதனால் கோபமா கண்ணே என்று அரசன் அரசின் ஊடலைப் போக்க முயன்றான். 

மேலும் சொன்னான். 

அவர் துறவி அதனால் தான் அனுப்பிவைத்தேன். 

 துறவி அரசரிடம் எதுவும் சொல்லவில்லை என்பதை அரசி உணர்ந்தாள்.  

அரசியின் உபாயம்


துறவி  எப்போதுமேவா சொல்லாமல் இருந்து விடுவார்?  என்றாவது ஒருநாள் அந்த துறவி அமைச்சருடன் தன் கள்ளக் காதல் புரிவதை அரசனிடம் சொல்லி தன்னை அபாயத்தில் மாட்டிவிடலாம் அதற்கு முன் இந்தத் துறவியை தொலைத்தக் கட்ட   அரசி ஒரு உபாயம் செய்தாள். 

அரசி பொய் சொல்லல்


உங்களுக்கு வேண்டுமானால் அவர் துறைவியாக இருக்கலாம்.  அவர் பெண்கள் விஷயத்தில் அப்படி இல்லை.  உடைவாளை எடுத்து செல்ல அந்தப்புரத்துக்கு வந்தவர்,  என் கையைப் பற்றி என்னிடம் காதல் மொழி பேச தொடங்கி விட்டார்.  நான் கைகளை விடுவித்துக் கொண்டு அவரை கடிந்து கொண்டு பேசி பேசி விரட்டி விட்டேன் என்று பொய்யாக புலம்பினாள் அரசி.  அரசன் வெகுண்டான்.

துறவிக்குத் தண்டனை


அது ஒரு நடுநிசி என்றும் பாராமல் அமைச்சரை அழைத்து வரச்செய்து துறவிக்கு என்ன தண்டனை விதிக்கலாம் என்று ஆலோசனை கேட்டான் அரசன்.  கொதிக்கும் எண்ணெய் கொப்பரையில் தூக்கிப்போட்டு சாகடிக்க வேண்டும் என்று கூறினான் அமைச்சன்.  

அதற்கான உத்தரவு பிறப்பிக்கப்பட்டதும் அமைச்சன் அதை தடுத்தான்.  அந்தத் துறவியிடம் ஊர் மக்களுக்கு மிகுந்த மரியாதை உண்டு.  அதனால் ஏதோ தற்செயல் விபத்து போல தண்டனையை நிறைவேற்ற வேண்டும் என்று அமைச்சன் எச்சரித்தான்.  

காய்ந்த கொப்பரை எண்ணெய்


அதை எப்படி செய்வது என்பதை பிறகு ஆலோசிப்பதாக அரசன் சொன்னான். காவலாளியை அழைத்து அரண்மனையின் பின்புறத்தில் உடனடியாக கொப்பரையில் எண்ணெய் ஊற்றி கொதிக்க வைக்கும் படி கட்டளை இட்டான்.  

துறவியை ஒழித்துக்கட்ட வகை செய்து விட்டதாக அமைச்ச னுக்கு பெருமிதம். அவன் ஒழிந்து விடுவாள் என்ற மகிழ்ச்சியிலும் என்ன நடக்கும்?  அரசர் இதை எப்படி நடத்தி முடிப்பார் என்பதை தெரிந்து கொள்ளும் ஆர்வத்திலும் அமைச்சன் அதிகாலையில் அரண்மனை தோட்டத்திற்கு சென்று பார்த்தான். 

அமைச்சர் மடிந்தான்


எண்ணையை கொதிக்க வைத்துக் கொண்டிருந்த காவலாளியிடம் எண்ணெய் கொதித்து விட்டதா?  என்று அமைச்சர் கேட்டதுதான் தாமதம்.  சேவகர்கள் அவனை  குண்டுக்கட்டாக தூக்கி கொதிக்கும் எண்ணெய் கொப்பரையில் போட்டார்கள். 


சற்று நேரத்தில் அங்கு துறவியும் வந்தார்.  அவரும் கேட்டார்.  எண்ணை  காய்ந்து விட்டதா?  சேவகர்களுக்கு ஒன்றும் புரியவில்லை.  துறவிக்கு தண்டனையை தற்செயல் ஆபத்தாக  தோன்றும்படி நடத்துவது எப்படி என்று யோசித்து அரசர் அதற்கும் ஒரு வழியைக் கண்டுபிடித்தார்.  அதிகாலையில் எப்போதும் போல தம்மை பார்க்க கோயிலுக்கு வருவார் துறவி. 

அப்போது அவரை தோட்டத்துக்கு அனுப்பி கொப்பரையில் எண்ணைக் காய்ந்து விட்டதா என்று விசாரித்து வரும்படி அனுப்பி வைக்க வேண்டும்.  அவர் என்னை காய்ந்து விட்டதா   என்று அவர் வந்து விசாரித்தாலும் அவரை எண்ணெய் கொப்பரையில் போடும்படி காவலாளிகளுக்கு உத்தரவிடவும் முடிவு செய்திருந்தார் அரசர்.  இது அமைச்சருக்குத் தெரியாது.  

தங்களிடம் வந்து,  எண்ணைக் காய்ந்து விட்டதா என்று விசாரித்த அமைச்சனை தூக்கி கொதிக்கும் எண்ணெய் கொப்பரையில் போட்டுச் சேவகர்கள் அரசரின் கட்டளை நிறைவேற்றினார்கள்.  ஆலயத்திலிருந்து அரசரிடம் சென்று செய்தியை அறிவித்தார்கள்.  அரசனுக்கு ஒன்றும் புரியவில்லை.  அப்போது துறவியும் அங்கு வந்தார்.  வாழ்த்தினார். 

"நன்மை செய்தால் நன்மை உண்டாகும்" 


"தீமை செய்தால் தீமை உண்டாகும்"  துறவியை ஏற இறங்க பார்த்துவிட்டு அரசன் கேட்டான்.  அமைச்சன் என்ன தீமை செய்தான்?  அவனுக்கு இந்த தீமை உண்டாக?  எனக்கு துரோகம் செய்தும் உமக்குத் தீக்ங்கு  நேரவில்லை.  அதற்கு நீர் என்ன செய்தீர்?

நன்மை செய்தவர் யார்?  தீமை செய்தவர் யார்?  அந்தப் புரத்தில் நடந்த காட்சியை துறவி இப்போது ஒளிவு மறைவின்றி சொன்னார். 

அரசன் உண்மையைப் புரிந்துகொண்டான்


துறவிக்குத் தாம் வைத்த கொள்ளியில்  வெந்துமடியப் போவதை பார்க்க தன் அமைச்சன் எவ்வளவு அக்கறையாகவும் ஆர்வத்துடனும் சென்று எண்ணை காய்ந்து விட்டதா என்று விசாரித்து இருக்கிறான் என்கிற உண்மையை அரசனுக்கு புரிந்தது.   அரசியின் சூழ்ச்சியில் துறவியை சந்தேகிக்க அவரிடம் நேரஙந்ததற்காக  அவரிடம் அரசன் வருத்தம் தெரிவித்தான்.  மறுநாள் காலையிலும் அரண்மனைத் தோட்டத்தில் எண்ணெய் கொப்பரை காய்ந்து கொண்டிருந்தது - அரசிக்காக.

No comments:

Post a Comment