தமிழ் பழமொழிகளும் அதன் விளக்கங்களும் Tamil proverbs and its interpretations - ThulirKalvi

Latest

Search Here!

Monday, October 12, 2020

தமிழ் பழமொழிகளும் அதன் விளக்கங்களும் Tamil proverbs and its interpretations

தமிழ் பழமொழிகளும் அதன் விளக்கங்களும் Tamil proverbs and its interpretations



1. அகத்தின் அழகு முகத்தில் தெரியும் Face is the index of the mind

நாம் எவரை வேண்டுமானாலும் ஏமாற்றலாம். நம்மை நாமே வேண்டுமானாலும் ஏமாற்றி கொள்ளலாம். ஆனால் அகம் எனப்படும் மனத்தை மட்டுமே ஏமாற்ற முடியாது. காரணம் அகம் என்பது மனிதனின் நல்ல கெட்ட செயல்களை எடை போட்டு காட்டுகிற  நீதிமன்றம். 

அதனால்தான் மனதுக்கு வருத்தமாக எதையாவது செய்யப்போக உணர்ச்சிகள் பெருக்கெடுத்து ஓடுகின்றன. இப்படி அலைப்பாயும் உணர்ச்சிகளை துல்லியமாக படம் பிடித்து காட்டும் கண்ணாடியாக இருப்பதுதான் முகம். நாம் சந்தோஷமான செயல் ஏதேனும் செய்திருக்கும் போது நம் முகத்தில் பிரதிபலிப்பது ஆனந்த குறிகள். 

அதுவே குற்றம் ஏதாவது செய்து இருக்கும்போது முகத்தின் போக்கே மாறிவிடும். முகத்தில் தோன்றும் உணர்ச்சிகளுக்கு ஏற்ப உடம்பு நடுங்குகிறது நம்மை குற்றவாளியாய் காட்டுகிறது. ஆக நாம் என்றென்றும் நல்லவர்களாய் வாழவேண்டுமென்றால் குற்றங்கள் புரியாமல் மனதுக்கு விரோதமாக எந்த செயலிலும் ஈடுபடாமல் இருந்தால் போதும். நம் மனத்தின் அழகை முகம் பளிச் என்று சொல்லிக் காட்டும். இதுவே அகத்தின் (உள்ளத்தின் நிலைமை) முகத்தில் தெரியும் (Face is the index of the mind) என்பதன் விளக்கமாகும்.

2. ஆத்திரக்காரனுக்கு புத்தி மட்டு A hasty man never wants woe

ஒருவன் மெத்தப் படித்தவர் இருக்கலாம் மற்றவன் ஆஹா என்று ஊரார் வியக்கும் அளவுக்கு செல்வந்தனாக இருக்கலாம். இருவருக்கும் பெருமை சேர்ப்பது அவர்களின் படிப்பு அல்லது செல்வமோ அல்ல. குணம். அதாவது எந்த சூழ்நிலையிலும் ஆத்திரத்துக்கு அடங்கிப் போகாத மென்மையான பொறுமையான குணம். 


ஆத்திரம் என்பது தன்னால் வரவழைத்து கொள்ளப்படும் ஒரு வியாதி. இந்த வியாதி ஒருவனை கொலைகாரனாக ஆகக்கூடியது. அவனையே கொல்லும் ஆயுதமாகவும் மாற்றக்கூடியது. காரணம் ஆத்திரம் ஏற்பட்டால் என்ன பேசுகிறோம்? என்ன செய்கிறோம்? என்பதை அறியக் கூடிய சக்தி நமக்கு இல்லாமல் போய் விடுகிறது. அந்த நிலையில் மனம் உணர்ச்சி வசப்பட்டு செய்யக்கூடாத குற்றங்களை செய்துவிட்டு பின்னால் வருத்தப்படுகிறோம் மனசும் உடம்பும் கெட்டுப்போக நாமே நஷ்டத்தை உண்டாக்கிக் கொள்வது அவசியம் தானா? யோசியுங்கள். (A hasty man never wants woe)


3. இறைக்க இறைக்க கிணறு சுரக்கும் 

நீர் இறைக்க இறைக்கத்தான் கிணற்றில் இருக்கும் நீரின் மட்டம் உயர்ந்து கொண்டே போகும். இது நியதி. வாழ்க்கைக்கும் பொருந்தி வருகிற விஷயம். இது இங்கே கிணறு என்பதை நாம் நல்ல குணம், தானம் என்ற இரண்டாக எடுத்துக்கொள்ளலாம். நல்ல குணத்தை பயன்படுத்த மேலும் மேலும் மற்றவர்களுக்கு நன்மை செய்ய வேண்டும் என்ற எண்ணம் எப்போதும் மனதில் உதித்துக்கொண்டே இருக்கும். இந்த நல்ல எண்ணம் விரைவில் செயல்களிலும் வந்துவிடும். 


நல்ல குணம் மூலமாக நாம் நல்லவர்கள் ஆகிவிடுகிறோம். நல்லவர்களை இந்த உலகம் போற்றுகிறது. அவர்கள் பெயர் பரவ உதவுகிறது. மதிப்பும் மரியாதையும் கிடைக்கும் போது இந்த உலகத்துக்கு இன்னும் நல்லது செய்ய வேண்டும் என்னும் அவா தோன்றுகின்றது. 


இந்த அவா நல்ல குணத்தை மேலும் தூண்டி விடுகிறது. அதனால் நல்ல குணம் என்கிற தண்ணீரை மனம் என்கிற கிணற்றிலிருந்து இறைக்க இறைக்க பெறுகிக் கொண்டே போகும். நீங்களும் இந்த தண்ணீரை இறைத்து பயனடைந்து பிறருக்கும் பயன் பெறுங்கள்.

பிடித்திருந்தால் மற்றவர்களுக்குப் பகிருங்கள். பிடிக்கவில்லையென்றாலும் கமெண்டில் கருத்துக்களைச் சொல்லுங்கள்.