ராஜன் மகளானாலும் கொண்டவனுக்கு பெண்சாதி - தமிழ்ப் பழமொழிகளும் அதன் எளிய விளக்கங்களும் - ThulirKalvi

Latest

Search Here!

Wednesday, November 4, 2020

ராஜன் மகளானாலும் கொண்டவனுக்கு பெண்சாதி - தமிழ்ப் பழமொழிகளும் அதன் எளிய விளக்கங்களும்

ராஜன் மகளானாலும் கொண்டவனுக்கு பெண்சாதி - தமிழ்ப் பழமொழிகளும் அதன் எளிய விளக்கங்களும்

ராஜன் மகளானாலும் கொண்டவனுக்கு பெண்சாதி

திருமணத்துக்கு முன் ஒரு பெண் எப்படி வாழ்ந்தாலும் திருமணத்திற்குப் பின் அவள் கணவனின் மனம் நோகாமல் இருப்பதைக் கொண்டு வாழத் தெரிந்த உத்தமியாக இருக்க வேண்டும். இதற்கு பெயர் கண்டிப்பாக அடிமைத்தனம் அல்ல. 

ஏனென்றால் தாம்பத்திய வாழ்க்கையில் ஒருவரை ஒருவர் அனுசரித்து கொண்டு போகிற இயல்புக்கு நடைமுறை என்றுதான் பெயரே ஒழிய அடிமைத்தனம் அல்ல.  குடும்பத் தலைவி தன்னை மட்டுமல்லாமல் தன் கணவனையும் பிள்ளைகளையும் வழிநடத்திச் செல்ல வேண்டிய பள்ளிக்கூட ஆசிரியராக இருக்க வேண்டிய சூழலில் இருப்பவள். 

பிறந்த வீட்டில் எப்படி வாழ்ந்தோமோ அப்படியே தான் புகுந்த வீட்டில் வாழ வேண்டும் என்று தன்னைப் பற்றி மட்டுமே கவலைப்படுகிற மனுஷியாக சுகபோகத்தில் திளைக்க வேண்டும் என்று கனவு காணும் தேவதையாக இருக்கக்கூடாது. 

பிறந்த வீட்டுச் சூழ்நிலை வேறு. புகுந்த வீட்டு சூழ்நிலை வேறு. சூழ்நிலைக்கு ஏற்ப வாழ்வதுதான் வாழ்க்கை. அதனால் அந்த வீட்டில் அதற்கு குறை இதற்கு குறை என்று கண்டதற்கெல்லாம் குறைப்பட்டு கனவனை நோகச்செய்து  வாழ்க்கையில் கசப்பு சேர்க்கக் கூடாது. 

அப்படி அனைத்துக்கும் குறைகாண புத்தி திருமணமான பெண்ணுக்கு வந்துவிட்டால் அவள் புத்தி பேதலித்தவள் ஆகிவிட்டாள் என்று அர்த்தமாகிவிடும். மனைவியான பிறகு அவள் கணவனின் நலனில் அக்கறை காட்டுவதாக இருக்க வேண்டும். அது தான் மனைவிக்கான கடமை. 

கணவன் உடல் ரீதியாகவும் உள ரீதியாகவும் பலமாக இருந்தால்தான் வாழ்க்கை வண்டி ஓடும் என்பதால்,  அதை ஓட்ட வேண்டிய மனைவி உறுதுணையாக இருந்தால்தான் அது முடியும்.