ரத்த பாசம் விடாது - தமிழ்ப் பழமொழிகளும் அதன் எளிமையான விளக்கங்களும் - ThulirKalvi

Latest

Search Here!

Monday, November 2, 2020

ரத்த பாசம் விடாது - தமிழ்ப் பழமொழிகளும் அதன் எளிமையான விளக்கங்களும்

ரத்த பாசம் விடாது - தமிழ்ப் பழமொழிகளும் அதன் எளிமையான விளக்கங்களும்

ரத்தபாசம் விடாது 

பாசம் என்பதில் வேஷம் கலைந்து இருக்கக்கூடாது. வேஷம் இல்லாத பாசம் இரத்த பாசம் என்பதற்கு உகந்ததாக இருக்கும். ஆனால் அந்த ரத்தபாசம் மனிதரை பலவீனமாக்கி விடுகிற தடுப்பு திரையாக இருந்துவிடக் கூடாது என்பதில் கவனம் தேவை. 

பாசத்துடன் கண்டித்தும் தண்டித்தும் சேர்ந்தால்தான் குடும்ப உறுப்பினர்களை மனிதர்களாக ஆக முடியும்.  வெறும் பாசம் ஒருவரை மனிதனாக்காது. மாறாக அடிமையாக்கிவிடும். மகுடிக்கு கட்டுப்பட்டும் பாம்பாக மட்டுமே ஊட்டி வளர்த்தால் சின்ன துன்பம் என்றாலும் தாங்கிக்கொள்ள இயலாத வருத்த்தை  அது காயமாய் கோடிழுக்கும். 

தன் பிள்ளையை தனது கண்களை போல கட்டிக்காத்து பாசத்துடன் வளர்க்கும் அப்பா தன் பிள்ளைக்கு சிறுவயது காயம் ஏற்பட்டால் கூட அதை விட அதை காண சகிக்காமல் ரத்த பாசத்தை விட முடியாமல் ஐயோ என்று அலறச் செய்வார். 

அத அப்பா தனது பிள்ளை குற்றம் புரியும் போது உண்மையை உணர்ந்தும் குற்றமே செய்யவில்லை என்றும் பிறரிடம் அவனுக்காகப் பரிந்து பேசி மனசாட்சியையே ஏமாற்றிவிடுகிறார். 

ஆகையால் ரத்த பாசம் விடாது என்றாலும் மனசாட்சி என்னும் நீதிமன்றத்துக்கு தலைவணங்கி உண்மையை உரைக்க தைரியசாலியாக இருக்க வேண்டுமே தவிர குற்றவாளியாக நிற்க கூடாது.  அதே நேரத்தில் பாசத்தை மிகையோடு கையாண்டு அதில் கலப்படம் செய்யாமல் கண்ணாடியாக கையாள வேண்டும்.