வெளுத்ததெல்லாம் பால், கறுத்ததெல்லாம் தண்ணீர் - தமிழ்ப் பழமொழிகளம் அதன் எளிமையான விளக்கங்களும் - ThulirKalvi

Latest

Search Here!

Saturday, November 7, 2020

வெளுத்ததெல்லாம் பால், கறுத்ததெல்லாம் தண்ணீர் - தமிழ்ப் பழமொழிகளம் அதன் எளிமையான விளக்கங்களும்

வெளுத்ததெல்லாம் பால், கறுத்ததெல்லாம் தண்ணீர் - தமிழ்ப் பழமொழிகளம் அதன் எளிமையான விளக்கங்களும்


வெளுத்ததெல்லாம் பால் கரறுத்ததெல்லாம் தண்ணீர் 

பிறரை ஏமாற்றுவது பெரிதல்ல. ஏமாறாமல் இருப்பது தான் பெரிது. ஏனென்றால் ஏமாறுபவன் இருக்கும் வரை ஏமாற்றுபவன் இருந்து கொண்டே தான் இருப்பான். 

இதனால் வெளுத்ததெல்லாம் பால் என்று எண்ணும் மனோபாவத்தை விட்டு ஒழிக்க வேண்டும். பிறரிடம் நம்பிக்கை வைக்க வேண்டியதுதான். ஆனால் அந்த நம்பிக்கை கண்மூடித்தனமாக இருந்துவிடக்கூடாது. 

பிறரிடம் நம்பிக்கை வைக்கும் முன் அவர் நம்பிக்கை உடையவர் தானா என்பது ஆராயப்பட வேண்டியது அவசியம். இதற்குப் பெயர் நம்பிக்கையில்லாமையல்ல.  இதற்குப் பெயர் நம்பிக்கை இல்லாம இல்ல எச்சரிக்கை. 

வெளித்தோற்றத்தில் நல்லவர்களாக தோன்றுபவர்கள் உள்ளவர்களாக இருப்பார்கள் என்று அடித்துக் கூற முடியுமா?  நமது நம்பிக்கை உண்மையானதாகவும் இருக்கலாம். பொய்யாகவும் இருக்கலாம். அது உண்மையானதுதான் என்று உறுதியாகக் கூறிவிட முடியாது. 

எனவே பிறரின் நட்பு தேடும் போது அதில் பரிட்சைக்கு படிக்கிற பயம் இருக்க வேண்டும். பரிட்சைக்கு தேவையான கேள்விகளை ஆராய்ந்து ஊன்றிப் படித்தால் தான் தைரியமாக எதிர்கொண்டு வெற்றி பெற முடியும். 

அது போலவே வாழ்க்கையில் நட்பு பரிட்சை எழுதும்போது மனித பண்புகள், எண்ணம் என்ற கேள்விகளை ஆராய்ந்து படிக்கவேண்டும். ஒத்து வந்தால் மட்டுமே நட்பு பற்றி எழுதலாம் ஒத்து வராவிட்டால் ஒதுக்கியேவிடலாம். வீணாக பரிட்சை எழுதி தோல்வி காணுவது ஏன்?