வேளை அறிந்து பேசு, நாளை அறிந்து பேசு - தமிழ்ப் பழமொழிகளும் அதன் எளிய விளக்கங்களும் - ThulirKalvi

Latest

Search Here!

Saturday, November 7, 2020

வேளை அறிந்து பேசு, நாளை அறிந்து பேசு - தமிழ்ப் பழமொழிகளும் அதன் எளிய விளக்கங்களும்

வேளை அறிந்து பேசு, நாளை அறிந்து பேசு - தமிழ்ப் பழமொழிகளும் அதன் எளிய விளக்கங்களும்

வேளை அறிந்து பேசு, நாளை அறிந்து பேசு

வெளியே புறப்படும்போதோ, வெளியூர் போகும்போதோ நல்ல நேரத்தை பார்க்கிறோம்.  ராகு காலம், எமகண்டம் என்றெல்லாம் ஆராய்ச்சி செய்கிறோம். என்ற எச்சரிக்கை பிறரிடம் பேசும்போது கூட கையாளப்பட வேண்டும். 

வேளை அறிந்து பேசும் போது தான் நம் வேலை முடியும். எந்த நேரமும் கிண்டலாகவோ அல்லது அசுவராசியமாகவோ பேசிக் கொண்டிருக்கக் கூடாது. மனித இயல்பு என்றைக்கும் ஒரே மாதிரியாக இருக்கும் என்று கூறிவிட முடியாது. அது வினாடிக்கு வினாடி மாறக்கூடியது. 

அதனால் ஒருவரிடம் பேச்சு கொடுக்கும்போது அவர் எந்த மனநிலையில் இருக்கிறார் என்று பார்க்கப்பட வேண்டும். உதாரணமாக எப்போதும் ஜோக் அடித்துக் கொண்டிருப்பது உங்களுக்கு பிடித்த மானதே. உங்கள் மேனேஜர் விரும்புவார் தான். ஒரு நாள் உங்கள் மேனேஜர் "மூடில்" இல்லை. எதையோ பறிகொடுத்த சோகம் கலந்த கோபத்தோடு இருக்கிறார். 

அந்த நேரம் பார்த்து நீங்கள் அவரிடம் சென்று ஜோக் அடிக்கிறார்கள். மேனேஜர் சிரிப்பார் என்று பார்ப்பீர்களானால் நினைத்தபடி நடக்கவில்லை. உனக்கு நேரம் காலம் இல்லையா?  ஜோக் அடிக்க?  என்று எரிந்து விழுகிறார். நீங்கள் துவண்டு போகிறீர்கள்.
 
தவறு யாருடையது? குற்றம் எவருடையது? மேனேஜர் மீதா?  கண்டிப்பாக இல்லை. உங்களுடையது தான். காரணம் வேளை அறிந்து - மனநிலை அறிந்து - நீங்கள் பேசவில்லை. அதன் விளைவே இது.