Are you the person wearing the mask under the neck? - ThulirKalvi

Latest

Search Here!

Tuesday, November 10, 2020

Are you the person wearing the mask under the neck?



mask,cloth face mask,fabric face mask,face mask pattern,face mask,2 in 1 mask,handmade face mask,sew a face mask,new design face mask

நீங்கள் கழத்துக்கீழே மாஸ்க் அணியும் நபரா?

நமது அன்றாட செலவுகளில், (பயனுள்ள செலவு)  புதிதாக ஒரு செலவும் சேர்ந்து விட்டது. அது...மாஸ்க் . (Mask) இனி வரும் நாட்களில் இந்த 'மாஸ்க்' அணியாமல், வெளியே எங்கும் செல்ல முடியாத சூழ்நிலை தற்போது ஏற்பட்டுள்ளது  என்பதை நாம் அறிவோம். 

எனவே, மாஸ்க் (Mask)  என்பது நமது அன்றாடத் தேவைகளில் மிகவும் அத்தியாவசியமானதாக கருதப்படுகிறது. எதை மறந்து விட்டுப் போனாலும் இந்த மாஸ்கை அணிய மறக்காமல் போவதை இன்று கண்கூடாகக் காண முடிகிறது.  வங்கிகளில்,  (Bank) தபால் நிலையங்களில், (Post Office) தொழிற்சாலைகளில் (Factories)  இன்னும் மக்கள் அதிகமாக கூடும் இடங்களில் பொது மக்கள் மாஸ்க் அணிந்து வரவில்லை என்றால் உள்ளே (No Entry) அனுமதிப்பதில்லை. 

மாஸ்கின் முக்கயத்துவம் (The importance of the mask)

மாஸ்க் நம்மை நோய்த் தொற்றுகளிலிருந்துப் (From infections) பாதுகாக்கிறது, அப்படிப்பட்ட மாஸ்கைப் பற்றி நாம் தெரிந்துகொள்ள வேண்டிய பல விஷயங்கள் உள்ளன. கொரோனா பாதிப்பு நீங்கினாலும், மாஸ்க் அணிவது பாதுகாப்பானது.

மாஸ்க் அணிவதால் நோய் தொற்றில் இருந்து, தப்பி விட முடியுமா என்ன? நோய் பாதிக்கப்பட்ட ஒருவர், மற்றவருடன் பேசும்போது, எச்சில் (Saliva) மூலமாகவோ, தும்மல் (Sneezing) மூலமாகவோ, இருமல் (Cough) மூலமாகவோ  அவரிடத்திலிருந்து வரும்  நீர் திவலைகள் (Water droplets) காற்றில் மற்றவருக்கு படரக்கூடாது என்பதற்காகதான், மாஸ்க் அணிய அறிவுறுத்தப்படுகிறது. கட்டாயப் படுத்தப்படுகிறது. 

அதை இன்னும் சிலர் புரிந்துகொள்ளாமல் அலட்சியமாக (Indifferently) இருக்கின்றனர். குறிப்பாக 12 வயதுக்குட்பட்டவர்களும் 60 வயதுக்கு மேற்பட்டவர்களும் இந்த விஷயத்தில் மிகவும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்.

நம்மை அறியாமலே கைகளில் கிருமிகள் (Germs) ஒட்டியிருந்தாலும், மாஸ்க் அணிவதால் மூக்கு, வாயை தொடுவது தவிர்க்கப்படுகிறது. ஆகவே, மாஸ்க் அணிந்தால் நிச்சயம் நோய் தொற்றில் இருந்து தப்பலாம்.

மாஸ்க் அணிவதில் தவிர்க்க வேண்டிய நடைமுறைகள் என்ன? What are the procedures to avoid when wearing a mask?

ஒருநாள் மட்டுமே (One day use)  பயன்படுத்தக் கூடிய மாஸ்க்குகளை பல நாட்கள் பயன்படுத்துவது, பயன்படுத்திய மாஸ்க்கை பாக்கெட்டுக்குள் மடித்து வைத்துக் கொண்டு, மீண்டும் பயன்படுத்துவது ஆகிய செயல்கள் கூடாது. இன்றைக்கும் பலர் மாஸ்க்குகளை இப்படிப் பயன்படுத்துகின்றனர். இது மிகவும் தவறு. பாதுகாப்பானதும் அல்ல. இதனால் எந்தவித பயனும் இல்லை. 

சிலர், பிறருடன் பேசும்போது மாஸ்க்கை கழட்டி கையில் வைத்துக் கொண்டு பேசுகின்றனர். குறிப்பாக பேசும்போதுதான் நாம் வாயை திறக்கிறோம். அதனால் கூட நீர்த் திவலைகள் காற்றில் பரவ வாய்ப்பு உண்டு.  (Likely to spread in the air)

எனவே, மற்றவர்களிடம் பேசும்போது சமூக இடைவெளி (Social Distance)  கடைபிடிக்க வேண்டும். 3 மீட்டர் இடைவெளி விட்டுப் பேச வேண்டும். பேசும்போது கட்டாயம் மாஸ்க் அணிந்து பேசவேண்டும். இன்னும் சிலர், மாஸ்க்கை கழுத்துப் பகுதிக்குக் கீழே இறக்கி விட்டு, ( Drop down to the neck and leave)  தேவைப்படும்போது மறுபடியும் மாட்டிக் கொள்கின்றனர். இவர்கள் கொரோனா போன்ற கொடிய கிருமிகளிடமிருந்து எளிதில் தப்ப முடியாது. நினைவில் கொள்க. 

தற்போது கடைகளில் மாஸ்க்குகள் நிறைய வந்து விட்டன. 

யார் எந்த மாஸ்க் அணியலாம்? Who can wear any mask? 

மருத்துவர்கள் (Doctors) அணியும் மாஸ்க் அணிந்தால் மட்டுமே, பாதுகாப்பாக இருக்க முடியும் என்று சிலர் நினைக்கின்றனர். அது தவறு. 

பொதுவாக, மருத்துவர்கள்,  (Doctors) செவிலியர்கள் (Nurses)  மற்றும் மருத்துவ ஊழியர்கள், என் 95 மாஸ்க்,  (N95 Mask) எ ப்.எப்.,டி மற்றும் ரெஸ்பிரேட்டர்ஸ் மாஸ்க் (Respirators Mask) பணியின்போது பயன்படுத்துகின்றனர். என் 95 மாஸ்க், 95 சதவீதம் வைரஸ் மற்றும் பாக்டீரியாவை (Bacteria) வடிகட்டி விடுகிறது. எப்.எப்.டி.,1 மாஸ்க்கானாது, 88 சதவீதம் மட்டுமே சுத்திகரிப்பு செய்யும். எப்.எப்.டி.,2  (F F T Mask) மற்றும் எப்.எப்.டி.,3 ஆகியவை, என்.95 மாஸ்க் போன்றதுதான்.

இவற்றில், காற்றை உள்ளிருந்து வெளியில் அனுப்பக்கூடிய, வால்வு (Valve)  மற்றும் வால்வு  இல்லாதவை (Non Valve) என இரண்டு வகை இருக்கிறது. அந்த வால்வுகளில் காற்று வெளியில் இருந்து, உள் செல்லாத வகையில் வடிவமைக்கப்பட்டிருக்கும்.ரெஸ்பிரேட்டர்ஸ் (Respirators)  மாஸ்க், 99 சதவீதம் வைரஸ் மற்றும் பாக்டீரியாவை வடிகட்டக்கூடியது. 

மருத்துவர்கள் (Doctors) இதை அணிந்து கொண்டு, பணியில் ஈடுபடும்போது சற்று கடினமாக இருக்கும். ஆனாலும், கொரோனாவால் (Corona)  பாதிக்கப்பட்ட நபர்களுக்கு சிகிச்சை அளிக்கும்போது, தங்களுக்கு வைரஸ் (Virus)  பரவக்கூடாது என்பதற்காக, இதை அணிய வேண்டியிருக்கிறது.

அப்படியானால், பொதுமக்கள் அணிய உகந்த மாஸ்க் எது?

பொதுமக்கள், ட்ரிபிள் லேயர்,  (மூன்று அடுக்கு) (triple layer mask) டூ லேயர் (இரண்டு அடுக்கு)  (two layer) அல்லது துணியால் தயாரிக்கப்பட்ட, (Cloth Mask)  மாஸ்க் அணிந்தாலே போதும். (இந்த இடத்தில் நோயால் பாதிக்கப் பட்ட நபர்கள் மருத்தவர்களின் ஆலோசனைப் படி  (According to the advice of doctors) அவர்கள் பரிந்துரைக்கும் மாஸ்கை அணிய  வேண்டும்)

ஆனால், அவற்றை ஒரு நாளில் ஒருமுறை மட்டுமே (Disposable) பயன்படுத்த வேண்டும். அவற்றை எரித்து விட வேண்டும். துணியால் ஆன (Cloth Face Mask) மாஸ்க்கை, ஒரு முறை பயன்படுத்தினால், நன்கு துவைத்து வெயிலில் (in the sun) காயவைத்து, அதன் பின்னர்தான் பயன்படுத்த வேண்டும்.

சிறந்த 'மாஸ்க்' எது? Which is the best 'mask'? 


சிறந்த மாஸ்க் என்பது, நோய் கிருமிகளை (Germs) தடுக்க வேண்டும்; சுவாசத்தையும் (Breathing)  தடுக்காமல் இருக்க வேண்டும். அதே வேளையில் நாள் முழுவதும் அணிய ஏற்றதாக, காது மடல்களை  (Ear lobe) உறுத்தாமல் இருக்க வேண்டும். பின்புறம் கட்டிக்கொள்வது  (Tying the back) போன்ற மாஸ்க்கே சிறந்தது.

குறிப்பு 

மாஸ்க் பற்றி தாங்கள் அறிந்தவற்றை கீழே கமெண்ட் டில் பதிவிடும்படி அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

(mask,cloth face mask,fabric face mask,face mask pattern,face mask,2 in 1 mask,handmade face mask,sew a face mask,new design face mask)