What are the medicinal properties of black grape seed in Tamil? - ThulirKalvi

Latest

Search Here!

Monday, November 9, 2020

What are the medicinal properties of black grape seed in Tamil?

What are the medicinal properties of black grape seed in Tamil? கருப்பு திராட்சை விதையில் (Black grape seed) உள்ள மருத்துவக் குணங்கள் என்ன? 


கருப்பு திராட்சை (black grape) என்றவுடன் அனைவருக்கும் நினைவுக்கு வருவது புளிப்பு சுவை தான். திராட்சைப் பழங்களை விட அதன் விதையில் ஏராளமான மருத்துவ நன்மைகள் (Medicinal benefits) நிறைந்துள்ளது. கருப்பு திராட்சைப் பழத்தை விட, அதன் விதையில் புரோ-ஆன்தோசயனிடின்  எனும் சத்து அதிகமாக நிறைந்துள்ளது.

கருப்பு திராட்சை விதைகளில் உள்ள மருத்துவ நன்மைகள் :


இரத்தக்குழாய்களில் (In the blood vessels) ஏற்படும் அடைப்பு, இரத்தக்;குழாய்களில் ஏற்படும் வீக்கம், இரத்தக் கொதிப்பு (Blood pressure) போன்றப் பிரச்சனைகளை குணமாக்க திராட்சை பழத்தின் விதை அதிகமாக பயன்படுகிறது.

கருப்பு திராட்சையின் விதை மூலநோயினால்  (Hemorrhoids Piles) ஏற்படும் இரத்தப்போக்கை கட்டுப்படுத்த பெரிதும் உதவுகிறது.

இரத்தக்குழாய்களில் உள்ள கொழுப்பைக் கரைத்து, சர்க்கரை நோய் மற்றும் கால்கள் மரத்துப்போதல் போன்ற பிரச்சனையை குணமாக்க கருப்பு திராட்சையின் விதை மிகவும் உதவுகிறது.

அதேபோல் சிறுநீரகச் செயல்பாட்டின் (Of renal function) குறைகளை சரிசெய்யப் பயன்படுகிறது. மேலும், மாலைக்கண் நோய் மற்றும் கண்புரை (Cataract) போன்ற கண் தொடர்பான பிரச்சனைகள் வராமல் இருக்க கருப்பு திராட்சையின் விதை பயன்படுகிறது.

மேலும் பெண்களின் மார்பகப் புற்றுநோய், (Breast cancer)  கருப்பை கோளாறுகள் மற்றும் ஆண்களுக்கு ஏற்படும் புரோஸ்டேட் புற்றுநோய் போன்றப் பிரச்சனைகள் வராமல் இருக்க கருப்பு திராட்சையின் விதை உதவுகிறது.

நம் உடலிலுள்ள நச்சுப் பொருட்களை வெளியேற்றிப் புத்துணர்ச்சி தரக்கூடிய ஆன்டிஆக்சிடன்டு  (Antioxidant) இதில் அதிகம் நிறைந்துள்ளது. மேலும், புற்றுநோய் செல்களை அழித்து, புதிய ஆரோக்கியமான செல்கள் அதிக அளவில் உற்பத்தி செய்ய உதவுகிறது. எனவே திராட்சைப் பழத்துடன் விதைகளைச் சேர்த்து உண்பது நல்ல பலனைத் தரும். 

உடல் வளர்ச்சியில் குறைபாடு (Defect) உள்ளவர்கள், உடல் பலகீனம் உள்ளவர்கள், தோல் வியாதி, (Dermatitis)  மூட்டு வலி, (Joint Pain) மூட்டு வீக்கம் (Swelling of the joints) ஆகிய பிரச்சனை உள்ளவர்கள் இதை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் விரைவில் நிவாரணம் கிடைக்கும். நினைவாற்றலை பெருக்கவும் இது பயன்படுகிறது.

எனவே, இவ்வளவு மகத்துவம் நிறைந்த திராட்சை விதைகளை, இவ்வளவு நாளாக தூக்கி எறிந்து விட்டோமே என வருந்தாமல், இனிமேலாவது திராட்சை விதைகளை (Grape seeds) சாப்பிடுங்கள்.